Sep 30, 2012

தமிழகத்திற்கு 9 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு: உச்ச நீதிமன்றத்திற்கு கர்நாடகம்பணிந்தது


[ ஞாயிற்றுக்கிழமை, 30 செப்ரெம்பர் 2012,
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று நேற்று இரவோடு இரவாக காவிரியிலிருந்து கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளது.
கடந்த 19ம் திகதி பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் காவிரி நதிநீர் அணையக் கூட்டம் புதுடெல்லியில் நடைப் பெற்றது.
இந்த கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தமிழகத்துக்கு தினமும் வினாடிக்கு 9 ஆயிரம் கன அடிநீர் திறந்து விட உத்தரவிட்டும் கர்நாடக அரசு திறந்து விடவில்லை.
பின்னர், காவிரி நதி நீர் தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் கடந்த வெள்ளிக் கிழமை அன்று தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை நடந்த போது பிரதமரின் ஆணைப்படி கர்நாடக அரசு தினமும் வினாடிக்கு 9 ஆயிரம் கன அடிநீர் திறந்து விடவேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்நிலையில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி ஆலோசனை நடத்திய கர்நாடக முதல்வர் ஜகதீஷ் ஷட்டர், கூட்டத்தில் பிரதமர் தமது முடிவை மாற்றிக் கொள்ளவேண்டும் என்று பேக்ஸ் அனுப்பப் போவதாகவும் உச்சநீதி மன்றத்துக்கு ஆணையை தற்போது நிறுத்தி வைக்க கேட்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆனால் கர்நாடக ஆளுநர், உச்சநீதி மன்றத்தின் உத்தரவை மீறக் கூடாது என்று அறிவுறுத்தியதால் கர்நாடக முதல்வர் ஜகதீஷ் ஷட்டரின் ஆணைப்படி நேற்று இரவோடு இரவாக மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரம் கன அடிநீர் திறந்து விட்டதாகத் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...