Feb 16, 2013

63 ஆயிரம் கோடி செலவில் இந்தியாவில் முதல் புல்லட் ரயில்!





  • 28
     
bullet trainஇந்தியாவில் பெரும் பொருட்செலவில் முக்கியமான ரயில் பாதைகளில் அதிவேக புல்லட் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே முடிவுசெய்தது. இந்த திட்டத்திற்காக முழு ஒத்துழைப்பு தந்து தேவையான பரிந்துரைகளை அளிக்க பிரான்ஸ் நாட்டுடன் ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வேயின் முக்கிய பாதைகளாக 7 தடங்களை இந்திய ரயில்வே அமைச்சகம் பட்டியலிட்டது. பட்டியலிடப்பட்ட தடங்களில் டெல்லி-ஆக்ரா-பாட்னா, ஹௌரா – ஹால்டியா, சென்னை-பெங்களூர்-திருவனந்தபுரம், மும்பை
-அகமதாபாத் ஆகிய நகரங்கள் அடங்கும். இந்த நகரங்களுக்கு இடையே அதிவேக ரெயில் சேவையை தொடங்க எந்த வகையான சாத்தியகூறுகள் உள்ளன என்பதை ஆய்வு செய்ய பிரான்ஸ் தொழில்நுட்பம் பெரிதும் உதவும் என கருதப்படுகிறது.
ரூ. 63 ஆயிரம் கோடி செலவில் 534 கி.மீட்டர் தூரம் கொண்ட மும்பை-அகமதாபாத் பாதையில் தற்போது முழுவீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வழித்தடத்தில் பிரான்ஸ் நாட்டின் தொழில் நுட்பத்துடன் இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான ஒப்பந்தம் கையொப்பம் ஆகியுள்ளது. இப்பாதையில் மணிக்கு 300 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் புல்லட் ரயில்கள் இயக்கப்படுமென தெரிகிறது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...