Feb 16, 2013

அழிவின் விளிம்பில் அதிசய உயிரினம்..!

தீக்குச்சியின் மேல் சாவகாசமாக நிற்கும் இந்த உயிரினம் குறித்து ஆச்சரியமாக இருக்கிறதா?

மடகஸ்கர் தீவில் வறட்சியான காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகச் சிறிய ஓணான் இனம் இது. இந்த உயிரினம் அழியும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களில் இவற்றின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த ஓணான் 30 மில்லிமீற்றர் நீளம் வரை மாத்திரமே வளரக் கூடியன. இப்படியொரு உயிரினம் உலகத்தில் இருப்பதாக கடந்த ஆண்டுதான் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள். இவற்றுக்கு Brookesia micra என விஞ்ஞானப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

உலகில் வேறு எந்தப் பகுதியிலுமே இல்லாத 80 வீதமான உயிரினங்கள் மடகஸ்கர் தீவுகளில் வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். (www.virakesari.lk)அழிவின் விளிம்பில் அதிசய உயிரினம்..!

தீக்குச்சியின் மேல் சாவகாசமாக நிற்கும் இந்த உயிரினம் குறித்து ஆச்சரியமாக இருக்கிறதா?

மடகஸ்கர் தீவில் வறட்சியான காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகச் சிறிய ஓணான் இனம் இது. இந்த உயிரினம் அழியும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களில் இவற்றின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த ஓணான் 30 மில்லிமீற்றர் நீளம் வரை மாத்திரமே வளரக் கூடியன. இப்படியொரு உயிரினம் உலகத்தில் இருப்பதாக கடந்த ஆண்டுதான் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள். இவற்றுக்கு Brookesia micra என விஞ்ஞானப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

உலகில் வேறு எந்தப் பகுதியிலுமே இல்லாத 80 வீதமான உயிரினங்கள் மடகஸ்கர் தீவுகளில் வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். (www.virakesari.lk)

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...