Feb 16, 2013

தப்பியது பூமி - இராட்சத விண்கல் சுமாத்ரா அருகே கடந்து சென்றது!

தப்பியது பூமி - இராட்சத விண்கல் சுமாத்ரா அருகே கடந்து சென்றது!
[Saturday, 2013-02-16
News Service கால்பந்து மைதான அளவு விண்கல் பூமிக்கு மேலே கடந்து சென்று விட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவில் எரிகல் வெடித்து சிதறிய சில மணி நேரம் கழித்து இந்த விண்கல் பூமியை கடந்து சென்றதாகவும், அதிர்ஷ்டவசமாக பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று விஞ்ஞானிகள் கூறினர். இதுகுறித்து சர்வதேச விஞ்ஞானிகள் கூறியதாவது: பெரிய மலை போன்ற 150 அடி அளவுள்ள விண்கல் சுமத்ரா தீவு அருகே நேற்று இரவு 27,357 கிலோமீட்டர் தொலைவில் பூமியை கடந்து சென்றது. இது சில செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றிவரும் தூரத்தை விட குறைந்த தூரத்தில் கடந்தது. எனினும் இந்த விண்கல் செயற்கைக்கோள்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

  
நாசா விஞ்ஞானி பால் சோடாஸ் உள்பட பல ஆய்வு மைய விஞ்ஞானிகள் கூறியதாவது:
ரஷ்யாவில் எரிகல் வெடித்து சிதறியதும், பூமிக்கு மிக அருகில் விண்கல் கடந்து சென்றதும் ஒரே நாளில் நடந்த அதிசயங்கள். சில மணி நேர இடைவெளியில் இரண்டு நிகழ்வுகளும் நடந்துள்ளன. இதுபோல் நடப்பது மிகவும் அரிது. ரஷ்யாவில் வெடித்து சிதறிய எரிகல்லும், பூமிக்கு அருகில் வந்த விண்கல்லும் எதிர் எதிர் திசைகளில் பயணித்து சென்றன. இரண்டும் வெவ்வேறு வேகத்தில் சென்றன. பூமியை கடந்து சென்ற விண்கல் அமெரிக்க பகுதிகளில் தெரியவில்லை. ஆனால்,அவுஸ்ரேலிய விஞ்ஞானிகள் பைனாகுலர் மூலம் விண்கல் ஒரு சிறிய ஒளி போல செல்வதை பைனாகுலர் மூலம் பார்த்துள்ளனர்.
கூடைப்பந்து (பேஸ்கட் பால்) அளவுக்கு தினமும் விண்வெளியில் இருந்து பல கற்கள் பூமி மீது விழுந்த வண்ணம்தான் உள்ளன. தினமும் 100 டன் அளவுக்கு விண்கல் விழுகின்றன. அவை எல்லாம் பூமியை நெருங்குவதற்கு முன்பே எரிந்து சாம்பலாகி விடுகின்றன. ஆனால், மலை போன்ற பிரமாண்ட கற்கள்தான் பூமிக்கு மிக அருகில் வருகின்றன. ரஷ்யாவில் விழுந்த எரிகல் 49 அடி இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது 2 சிறிய கார்களின் அளவு. வினாடிக்கு 11 மைல் வேகத்தில் எரிகல் பறந்து வந்துள்ளது. இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினர்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...