Feb 16, 2013

பாரிஸில் ஏலத்திற்கு வரும் நெப்போலியன் திருமண மோதிரம்

பாரிஸில் ஏலத்திற்கு வரும் நெப்போலியன் திருமண மோதிரம்
[ சனிக்கிழமை, 16 பெப்ரவரி 2013
மாவீரன் நெப்போலியன் முதல் மனைவி ஜோஸ்பின்க்கு திருமண நிச்சயத்தின்போது அளித்த வைர மோதிரம் அடுத்தமாதம் 24ம் திகதி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஏலம் விடப்படுகிறது.வைரம்பதிக்கப்பட்ட இந்த தங்க மோதிரம் 12,000 யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 8,66,600) வரை ஏலம் போகும் என்று எதிர்பார்ப்பதாக ஒசெண்டா என்ற ஏல நிறுவனம் கூறியுள்ளது.
நெப்போலியன் பணப் பிரச்சினையில் இருந்தபோது இந்த மோதிரத்தை மனைவிக்கு வழங்கியுள்ளார். அதனால் இது அதிக வேலைப்பாடுகள் இல்லாத சாதாரண வைர மோதிரமாகும்.
அலெக்சாண்டர் டி பியுகர்னைஸ் என்ற செல்வந்தரின் மறைவுக்குப் பின்பு
விதவையான ஜோஸ்பினை அவர் திருமணம் செய்து கொண்டார்.
இந்த மோதிரத்தை 1796ம் ஆண்டு மார்ச் 8ம் திகதி அவர்களின் நிச்சயதார்த்தத்தின் போது ஜோஸ்பினுக்கு நெப்போலியன் அணிவித்தார். அடுத்தநாள் (மார்ச் 9ம் திகதி) அவர்களின் திருமணம் நடந்தது. 1810ம் ஆண்டு அவர்கள் இருவரும் பிரிந்தனர்.
ஆனால், நெப்போலியன் இறக்கும் நிமிடம் வரை ஜோஸ்பினை மறக்கவில்லை என்று அவர் இறக்கும்போது உடன் இருந்தவர்கள் கூறியுள்ளனர்.




 

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...