Jul 22, 2013

ஜேர்மனி செய்தி ஜேர்மனியின் பிரண்டன் பேர்க்கில் பாரிய காட்டுத் தீ




[ திங்கட்கிழமை, 22 யூலை 2013
ஜேர்மனியின் பிரண்டன் பேர்க்கில் கடந்த 2 நாட்களாக பற்றி எரியும் காட்டுத் தீயை அணைப்பதற்கு, 200 வரையிலான தீயணைப்பு படை வீரர்கள் போராடி வருகின்றனர்.எனினும் 17 ஹெக்டர் வரையிலான காடுகள் அழிந்து நாசமாகியுள்ளது.
இதேவேளை அப்பகுதியைச் சேர்ந்த 43 குடும்பங்கள் தீயணைப்பு படைவீரரகளால் பாதுகாப்பாக வேறு இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
தற்போது அப்பகுதியின் வெப்பநிலையானது 30 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக காணப்படுவனால் தீ வேகமாக பரவுகின்றது எனவும், இந்நிலை தமது நடவடிக்கைகளுக்கு பின்னடைவாக காணப்படுகின்றது எனவும் தீ அணைப்பு படைவீரர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் பேர்லின் மற்றும் ட்ரெஸ்டனிற்கு இடைப்பட்ட 13A வீதி முழுவதும் புகைமண்டலமாக காணப்படுவதனால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...