Jul 22, 2013

பெல்ஜியத்தின் புதிய மன்னரானார் பிலிப் (வீடியோ இணைப்பு





[ திங்கட்கிழமை, 22 யூலை 2013,
பெல்ஜியம் நாட்டின் மன்னர் இரண்டாம் ஆல்பர்ட்(வயது 79), முதுமை காரணமாக மன்னர் பட்டத்தை தனது மகன் பிலிப்பிற்கு வழங்கினார்.ஜனநாயக மரபுகளின்படி 20 ஆண்டு காலமாக மக்களுக்கு நல்லாட்சியை வழங்கியவர் இரண்டாம் ஆல்பர்ட்.
இந்நிலையில் முதுமை காரணமாக, மன்னருக்கான தனது அதிகாரங்களை மகன் பிலிப்பிடம் ஒப்படைத்தார்.
மேலும் தனது மன்னர் பதவியை துறப்பதாக பிரதமர் எல்யோ டி ருப்போ முன்னிலையில் கையொப்பமிட்டார்.
இதனையடுத்து மன்னரின் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதாக புதிய மன்னர் பிலிப் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
நேற்று பெல்ஜியத்தின் தேசிய தினம் என்பதால், இராணுவ அணிவகுப்பையும் புதிய மன்னர் ஏற்றுக் கொண்டார்.
நாடாளுமன்ற வாசலில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் புதிய மன்னருக்கு மகிழ்ச்சியுடன் கரங்களை அசைத்து நல்வாழ்த்துகளை தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...