Dec 7, 2012

முதலையின் வாயில் காலை கொடுத்து மீண்ட அழகி



முதலையின் வாயில் காலை கொடுத்து மீண்ட அழகி
மேற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் தாரா ஹாக்ஸ் (23). இவர் பார்க்க மிகவும் அழகாக இருப்பார். டு காங்க் பே என்ற சுற்றுலா தளத்துக்கு செல்லும் சொகுசு கப்பலில் பணியாளராக இருந்து வருகிறார். டு காங்க் பே சென்ற அவர் அங்குள்ள குளம் ஒன்றில் இறங்கி நீச்சலடித்து விளையாடிக் கொண்டிருந்தார்.
 
அப்போது அங்கு திடீரென வந்த முதலை படுவேகமாக தாராவின் காலை கவ்விப் பிடித்தது. இதனால் அவர் அலறி துடித்தார். இருந்தும் முதலை அவரை விடவில்லை. காலை மெதுவாக வாய்க்குள் இழுக்க தொடங்கியது. இதைப் பார்த்து ஓடிவந்த தாராவின் நண்பர் ஆலன் முதலையின் வாயை பிளந்து காலை வெளியே எடுக்க முயன்றார். ஆனால் முடியவில்லை.
 
இதையடுத்து முதலையின் கண்களில் சரமாரியாக அவர் குத்தினார். இதனால் நிலை குலைந்த முதலை வாயை திறந்து பின் வாங்கியது. உடனே ஆலனும், மற்றொருவரும் சேர்ந்து தாராவை காப்பாற்றினர். அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இருப்பினும் அவரது காலில் படுகாயம் ஏற்பட்டது

மாலத்தீவுக்கான நிதி உதவி ரத்து: இந்திய அரசு நடவடிக்கை


FILE
மாலத்தீவில் உள்ள சர்வதேச விமான நிலையம் கொண்டுள்ள ஜிஎம்ஆர்-ன் கான்டிராக்ட்டை அந்த அரசு ரத்து செய்துள்ளது. இதனை அடுத்து மாலத்தீவுக்கு இந்தியா வழங்குவதாக இருந்த ரூ.250 கோடி நிதியுதவியை தற்போதைக்கு நிறுத்திவைத்துள்ளது.

மாலத்தீவுக்கு இந்தியா வழங்குவதாக இருந்த ரூ.250 கோடி நிதியுதவி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், இது குறித்து இந்திய அரசு சார்பில் எந்த தகவலும் தங்களுக்கு தரப்படவில்லை என்று மாலத்தீவு அரசு கூறியுள்ளது.

நேற்று இந்தியாவுக்கு அதிர்ச்சி தரும் விதாமாக ஜிஎம்ஆர் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் முழு அதிகாரம் மாலத்தீவு அரசுக்கு உள்ளதாக சிங்கபூர்

ஜப்பானுக்கு அருகில் நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை வாபஸ்



ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகில் இன்று மாலை கடலின் மத்தியில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆகப் பதிவாகி இருந்ததால், ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. எதிர்பார்த்தது போன்றே சில சிறியளவிலான சுனாமி கரையோர கிராமங்களை தாக்கியுள்ளது.  எனினும் தற்போது ஜப்பானின் வடகிழக்கு நகரங்களில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கம் நகர்ப்புறங்களில் உணரப்பட்டதால் மக்கள் வீடுகளை

ஜப்பானில் கடும் நிலநடுக்கம்- ரிக்டரில் 7.3 அலகுகள் பதிவு- சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது!

டோக்கியா: ஜப்பான் நாட்டில் இன்று கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.3 அலகுகள் பதிவாகி இருக்கும் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
ஜப்பான் நாட்டு நேரப்படி மாலை 5.18 மணியளவில் தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட பல பகுதிகளில் மிகக் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது. நில நடுக்கம் உணரப்பட்ட போது அலுவலகங்களில் இருந்தவர்கள் அலறி அடித்து வெளியே ஓடினர்.
ஜப்பானின் ஹோன்சு அருகே சென்டாயை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. மியாகி அருகே 1 மீட்டர் உயரத்துக்கு கடல் அலைகள் எழும்பும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
சென்டாய் பகுதியில் கடந்த ஓராண்டில் 9-வது முறையாக இது போன்ற நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. தற்போதைய நிலநடுக்கத்தால் கடந்த 2011-ம் ஆண்டைப் போல பெரும் சுனாமி பேரலைகளை உருவாக வாய்ப்பில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
0.5 மீட்டர் முதல் 2 மீட்டர் வரையிலான உயரத்துக்கே அலைகள் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

மெரீனா கடற்கரையில் கரை ஒதுங்கிய டால்பின்!

marina beach dolphin fishமெரீனா கடற்கரையில் கரை ஒதுங்கிய டால்பின் மீனை காப்பாற்றிய தமிழ் மீனவர்களின் செயற்கரிய செயல்.
நேற்று வியாழன் அன்று சென்னை மெரீனா கடற்கரையில் அரிய வகை டால்பின் மீன் ஒன்று கரை ஒதுங்கியது. மிகமும் ஆழமில்லாத கடற்பகுதியில் இந்த பாலூட்டி வகை
யை சேர்ந்த மீன் சிக்கிக் கொண்டதால், அதனால் கடலுக்குள் செல்ல முடியவில்லை. இந்த மீனை முதலில் குப்பன் என்ற மீனவர் தான் அடையாளம் கண்டார். கடல் சீற்றம் அதிமாக இருந்ததால் இந்த மீனால் கடலின் ஆழமான பகுதிக்கு செல்ல முடியவில்லை. இந்த மீனின் வாயில் ரத்தம் கசிந்து வந்ததாக குப்பன் சொல்கிறார்.

இந்த மீனை காப்பாற்ற வழக்கம் போல் தமிழக அரசின் வனத்துறை அதிகாரிகளோ , அல்லது மீன் வளத் துறை அதிகாரிகளோ வரவில்லை.

Dec 6, 2012


இந்த மாதம் டிசம்பர் மாதம் 21ம் திகதி மாயன் நாட்காட்டி முடிவிற்கு வருகிறது உலகம் அழியப்போகிறது என ஆரம்பித்து பல பல புனைகதைகளிற்கு கை, கால் வைத்து மக்களிடைய பீதியை ஏற்படுத்தும் முயற்சி அமெரிக்காவை உத்தியோகபூர்வமாக அறிக்கை விட வைக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளது.

பொதுவில் வதந்திகளுக்குப் பதில் கூறுவதில் அர்த்தமே இல்லை.  ஒரு வகையில் அது அந்த வதந்தியை மேலும் பரப்புவதாகவே அமையும்.

அடுத்த மாதம் 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை பூமி இருளில் மூழ்கிவிடுமாம். அது தான் அந்த வதந்தி. நாசா இது பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்த வதந்தி கூறுகிறது.


இது உண்மையா? அறிந்த வரையில் நாசா அப்படி எந்த எச்சரிக்கையையும்

சிறந்த நகரங்களின் பட்டியலில் ஒட்டாவா, டொரோண்டோவை முந்தியது வன்கூவர்!

சிறந்த நகரங்களின் பட்டியலில் ஒட்டாவா, டொரோண்டோவை முந்தியது வன்கூவர்!

News Service உலகளவில் தரமான வாழ்க்கைக்கு ஏற்ற நகரங்களின் வரிசையில் கனடாவின் வன்கூவர் ஐந்தாவது இடத்தைப்பிடித்துள்ளது. Mercer ஆய்வகம் உலகளவில், தரமான வாழ்க்கைக்கு ஏற்ற நகரங்கள் குறித்த பட்டியல் ஒன்றை தயாரித்துள்ளது.
  
இந்தப்பட்டியலில் வியன்னா முதலிடத்திலும், சூரிச் இரண்டாமிடத்திலும், ஒக்லாந்து மூன்றாமிடத்திலும், மியூனிச் நான்காமிடத்திலும் உள்ளன. வன்கூவர் ஐந்தாமிடத்தில் உள்ளது. கனடாவின் ஒட்டாவா 14வது இடத்தையும், டொரோண்டோ 15வது இடத்தையும், மொன்றியல்23வது இடத்தையும்,கேல்கரி32வது இடத்தையும் பிடித்துள்ளன.
வாழ்க்கைத்தரம் குறைந்த நகரங்களின் பட்டியலில் சூடான், சாட், போர்ட் ஆப் பிரின்ஸ் மற்றும் மத்திய ஆபிரிக்க குடியரசின் பாங்கூய் போன்றவை இடம்பெற்றுள்ளன.

சுவீடனில் கடும் பனிப்புயல் - நோபல் பெற்றவர்கள் அங்கு செல்ல முடியாமல் அவதி!



News Service கடும் பனிப்புயல் காரணமாக சுவீடனில் பல பகுதிகள் ஸ்தம்பித்துள்ளன. பஸ், விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நோபல் பரிசு பெற வந்தவர்கள் அவதிப்பட்டனர். சுவீடனில் வழக்கத்துக்கு மாறாக பனிப்பொழிவு காணப்படுகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை மற்றும் நேற்று பனிப்புயல் வீசியதால் 30 செ.மீ. அளவுக்கு பனிப்பொழிவு காணப்பட்டது.
  
இதனால் தலைநகர் ஸ்டாக்ஹோம் உள்பட பல நகரங்கள் பனியில் மூடின. முக்கிய விமான நிலையம் ஸ்தம்பித்தது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், ஸ்டாக்ஹோம் விமான நிலையத்துக்கு நேற்று வருவதாக இருந்தது. ஆனால், பனி காரணமாக பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. எந்த விமானமும் வரவில்லை.
இதுகுறித்து நோபல் பரிசு வழங்கும் நிர்வாகிகள் கூறுகையில், நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் புதன்கிழமை வருவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கேற்ப இங்கு பல்வேறு கருத்தரங்கு, மாநாட்டு ஏற்பாடுகள் தயாராக உள்ளன. ஆனால், பனிப்பொழிவு காரணமாக தாமதமாகிறது என்றனர்.
பரிசளிப்பு விழா திங்கட்கிழமை நடக்கிறது. அதற்குள் நிலைமை சரியாகி விடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சாலைகளில் பனி மூடிக்கிடப்பதால் மக்கள் வெளியில் வரமுடியவில்லை. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், கடந்த 24 மணி நேரத்தில் 30 செ.மீ. அளவுக்கு பனிப்பொழிவு பதிவாகி உள்ளது. மேலும் 20 செ.மீ. அளவுக்கு பனிப்பொழிவு இருக்கும் என்று எச்சரித்துள்ளனர். வழக்கத்துக்கு மாறான பனிப்பொழிவால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
  

வரும் 21ம் திகதி உலகம் அழியாது - வதந்தியை நம்பாதீர்கள் என்கிறது அமெரிக்கா!

வரும் 21ம் திகதி உலகம் அழியாது - வதந்தியை நம்பாதீர்கள் என்கிறது அமெரிக்கா!
[
News Service வரும் 21ம் திகதியுடன் மாயன் நாட்காட்டி முடிவதால், உலகம் அழியப் போகிறது என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்கா உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
  
அமைதியாய் இருங்கள்- உலகில் எந்த மாற்றமுமே டிசம்பர் மாதம் 21ம் திகதி நடைபெறப்போவதில்லை. மாயன் நாட்காட்டியில் கூட ஒரு ஆண்டுக்கான சுற்று டிசம்பர் 21ம் திகதி முடிந்து புதிய ஆண்டு டிசம்பர் 22ம் திகதி தொடங்குகிறதே தவிர அந்த நாட்காட்டியின் ஊழிக்காலம் முடியவில்லை என அந்த அறிக்கையில் தெரவிக்கப்பட்டுள்ளது.
இப்படியான வதந்திகள் கடந்த காலங்களிலும் பல்வேறு விதமாக வந்திருக்கின்றன. உலகம் அழியப்போகிறது என்ற வதந்தி 2003 , 2004ம் ஆண்டுகளில் கூட பரவின. எந்த ஒரு அழிவோ மாற்றமோ டிசம்பர் 21ம் திகதி இடம்பெறப்போவதில்லை. அது மற்றைய நாட்களைப் போல சாதாரண நாட்களே. கிரகங்கள் பூமியை நோக்கி வருகின்றன. எரிகற்கள் விழப்போகின்றன என்பதெல்லாம் கட்டுக்கதை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

விரைவில் பூமியை வந்தடையவிருக்கும் மர்ம பொருள்: நாசா தகவல்


ScienceCasts: Rock Comet Meteor Showerஎதிர்வரும் டிசம்பர் 13 அல்லது 14ம் திகதிகளில் வானியலில் குறிப்பிடத்தக்க மாற்றமொன்று நிகழவிருப்பதாக நாசா அறிவித்துள்ளது.
கடந்த 1983ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ம் திகதி கண்டறியப்பட்ட 5.10 km விட்டத்தைக் கொண்டிருக்கும் rock comet எனும் வால்நட்சத்திரங்களின் துகள்கள் வந்து விழக்கூடிய வாய்ப்புகளும் காணப்படுவதாக நாசா தகவல் வெளியிட்டுள்ளது. இவற்றை விண்வெளிக்குப்பைகள் என்றும் சொல்வார்கள்.
கடந்த 2009ம் ஆண்டு நாசாவின் விண்கலமான STEREO-A இது போன்ற 3200க்கும் மேற்பட்ட துகள்களை அவதனிதிருந்தது.
மிகவும் பிரகாசமாக வந்து விழும் இத்துகள்கள் காற்றுமண்டலத்திற்குள் நுழையும்போது உராய்வு காரணமாக எரிந்து பெருமளவு சாம்பலாகிவிடும்.
மிகச் சிறியளவு துணிக்கைகளே பூமியை வந்தடையும் என்றும் இதன் மூலம் பெரியளவில் பாதிப்பு ஏற்படாதெனவும் நாசா குறிப்பிட்டுள்ளது.
டிசம்பர் 21ஆம் திகதி நிபிறு பிரளயம் : உலகம் அழியப்போகிறதா?

உலகில் தோன்றும் ஒவ்வொரு உயிரும் ஒரு நாள் மரித்துப்போகும் ஆனால் பூமியில் வாழும் ஒட்டுமொத்த உயிரும் ஒரே நாளில் மரித்துப்போனால்? எண்ணிப்பார்க்கவே எம்முள் அச்சம் குடிகொள்வதை தவிர்க்கமுடியவில்லை. ஆனால் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் நாள் இது நடந்தே தீரும் என்கிறது ஒரு கூட்டம்

சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வரையில் பூமியில் கோலோச்சி இ

ருந்த டைனோசோர்கள் அழிந்தது போல ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கும் மனித இனமும் வருகின்ற டிசம்பரில் ஏற்படப்போகும் நிபிறு பிரளயத்தினால் அழியப்போகிறது.

பூமியில் பாரிய எரி கல் ஒன்று மோதுண்டதனால் வெளியான வெப்பம், தூசு

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...