Oct 6, 2012

மறுபடியும் துருக்கி மீது சிரியா தாக்குதல்

October 6, 2012

துருக்கிக்கும் சிரியாவுக்கும் இடையே எழுந்துள்ள முறுகல் நாளும் பொழுதும் வளர்ந்து செல்கிறது.
நேற்று துருக்கிய உதவிப் பிரதமர் சிரியா நடாத்திய தாக்குதலுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டது, மேற்கொண்டு இதுபோல நடக்காது என்றும் தெரிவித்துவிட்டதாக பிரலாபித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து பேசிய துருக்கிய பிரதமர் எர்டோகன் தமது நாட்டின் மீது தாக்குதல் நடாத்தி ஆழம் பார்க்க வேண்டாம், தாம் சிரியா மீதான போரை விரும்பவில்லை, அதேவேளை சிரியாவுடனான போர் தூரத்திலும் இல்லை
என்றும் மார்தட்டியிருந்தார்.
அவருடைய கருத்துக்கு சிரியா மறுபடியும் கிரனைட் தாக்குதல் மூலம் பதிலடி கொடுத்துள்ளது, துருக்கியின் கற்றரி வட்டகையில் கிரனைட் குண்டுகள் விழுந்து வெடித்துள்ளன.
அடுத்து என்ன..? சிரியா பந்தை துருக்கியின் காலடிக்கு தள்ளிவிட்டுள்ளது.
தற்போது இந்த விவகாரத்தில் துருக்கி ஆப்பிழுத்த குரங்கின் நிலையில் இருக்கிறது, காரணம் துருக்கிய பிரதமர் எர்டோகன் மிகவும் செல்வாக்கிழந்த தலைவராக இருக்கிறார்.
அவரால் வீறாப்பாக எதுவும் செய்ய முடியவில்லை காரணம், சிரியா விவகாரத்தில் மேலை நாடுகள் ஏவிவிட பொறிக்குள் சிக்குப்படக் கூடாது என்ற கருத்தை பெரும்பாலான துருக்கி மக்கள் தெரிவிக்கிறார்கள்.
ஆகவே சிறிய தாக்குதலுக்கு மேலால் துருக்கியால் எதுவும் செய்ய முடியாது என்று சிரியா கருதுகிறது.
மறுபக்கம் லெபனானும் சிரிய அதிபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாதவாறு இரண்டாக பிளவுபட்டு கிடக்கிறது, காரணம் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா ஒரு சியா முஸ்லீம் அவர் தன்னைப் போன்ற இன்னொரு சியா முஸ்லீமான ஆஸாட் ஆட்சியில் இருப்பதை விரும்புகிறார்.
அதேபோல சியா முஸ்லீம்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஈரானே சிரியா நாட்டின் முக்கிய ஆலோசகராக இருக்கிறது, ஆயுதங்களையும் வழங்குகிறது.
மேலும் லிபியா போல சிரியா பிரச்சனை முடியுமானால் விவகாரம் ஈரானுக்குள் நுழையும் என்பதால் சிரிய பிரச்சனைக்குள் ஈரான் தொடர்ந்து எண்ணெய் ஊற்றி வருகிறது.
மறுபுறம் உலகப் பொருளாதார நெருக்கடி காரணமாக நேட்டோ இந்த விவிகாரத்தில் அக்கறையற்று இருக்கிறது.
இப்படி பிரச்சனையை தீர்க்க யாதொரு வழியுமற்ற நிலையில் சிரிய பிரச்சனை சரியான முடிவற்ற உணர்ச்சிச் செய்திகளாக நீண்டு வருகிறது.
அதேவேளை அமெரிக்க அதிபரும் தேர்தல் பிரச்சாரங்களில் சிரிய பிரச்சனையை பேசாது தவிர்த்து நடக்கிறார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற விவாதத்தில் தோல்வி கண்டதால் அதிபர் ஒபாமாவின் செல்வாக்கு 2 வீதம் சரிவு கண்டுள்ளது, தற்போது ஒபாமா 46 வீதமும் றொம்னி 44 வீதமுமாக அருகருகாக நிற்கிறார்கள்.
ஆக வரும் நவம்பர் 6ம் திகதிவரை அமெரிக்காவின் வால் சுருட்டப்பட்டிருப்பது சிரியா – ஈரான் போன்ற நாடுகளுக்கு வாய்ப்பான காலமாக இருக்கிறது.
மறுபுறம் இதற்கு பதிலடி கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளது துருக்கி – மேலும் சிரியா மீது படையெடுத்து ஆஸாட்டை விரட்டியடித்து, மக்களாட்சியை மலரச்செய்யவும் ஒரு வழியிருப்பதாக டேனிஸ் ஆய்வாளர் கூறுகிறார்கள்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...