Nov 6, 2012

விரைவில் சீன அதிபராகும் ஜி ஜின்பாங்.. என்ன நடக்கும்?



 China S Mystery Princeling Xi Jiping Takes Top Spot பெய்ஜிங்: சீனாவின் புதிய அதிபராக பொறுப்பேற்கக் கூடிய துணை அதிபர் ஜி ஜின்பாங் எப்படியான கொள்கைகளைக் கொண்டவர் என்பது பற்றிய தகவல்களை அப்படி ஒரு பரம ரகசியமாக காத்து வருகிறது சீனா கம்யூனிஸ்ட் கட்சி!
சீனாவின் தற்போதைய அதிபர் ஹூ ஜிண்டோவின் பதவிக் காலம் முடிவடைய நிலையில் 59 வயதான ஜி ஜின்பாங், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலராகப் பொறுப்பேற்பதுடன் அதிபராகவும் பொறுப்பேற்க இருக்கிறார்.
உலகம் முழுவதும் எதிரொலிக்கும் பொருளாதார மந்த நிலைக்கு சீனாவும் தப்பவில்லை. அதன் பொருளாதார வளர்ச்சியில் சரிவு காணப்படும் நிலையில் புதிய அதிபராக்கும் ஜி ஜின்பாங் எப்படி இவற்றை எதிர்கொள்வார்?
nasa_6 சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை வெறும் கண்ணால் பார்க்க நாசா ஏற்பாடு
புளோரிடா:பூமிக்கு மேலே சுற்றிவரும், சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை (ஐ.எஸ்.எஸ்.,)தொலைநோக்கி உதவியில்லாமல், வெறும் கண்ணால் பார்க்க, “நாசா’ ஏற்பாடு செய்துள்ளது.அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட, பல நாடுகள் ஒன்றிணைந்து, பூமிக்கு மேல், 410 கி. மீ.,உயரத்தில்,
வாஷிங்டன்: அமெரிக்காவில், அனல் பறக்கும் பிரசாரம், நேற்று இரவு முடிந்த நிலையில், இன்று, அதிபர் தேர்தல் நடக்கிறது. அமெரிக்காவின் 50 மாகாணங்களில், அதிபர் தேர்தல், இன்று நடக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில், அதிபர் ஒபாமாவும், குடியரசு கட்சி சார்பில், மாசாசூசெட்ஸ் முன்னாள் முதல்வர், மிட்ரோம்னியும் களத்தில் உள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில், மாகாண ஓட்டுக்களே, அதிபர் தேர்தல் வேட்பாளரின் வெற்றியை நிர்ணயிக்கின்றன. ஒவ்வொரு மாகாணத்தின்,

அமெரிக்க அதிபர் தேர்தல்: வாக்குப் பதிவு துவங்கியது

வாக்களிப்பு ஆரம்பித்துள்ளதுஅமெரிக்காவின் சரித்திரத்திலேயே மிக அதிகமான பிரச்சார செலவுகளுடன் நடக்கின்ற அதிபர் தேர்தலில் வாக்குப் பதிவு ஆரம்பித்துள்ளது.
மாதக்கணக்கில் பிரச்சாரங்கள் நடந்திருந்த நிலையில், இருவேட்பாளர்களுக்கும் இடையே ஆதரவில் சற்றுதான் வித்தியாசம் என்று கருத்துக் கணிப்புகள் காட்ட போட்டி மிகக் கடுமையாகவுள்ளது.
குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ரோம்னி, பெரும்பாலும் இதற்கு முன்பு இல்லாத ஒரு நடைமுறையாக முக்கிய மாகாணங்களான ஒஹையோ மற்றும் பென்சில்வேனியாவில் வாக்காளர்கள் மத்தியில் தோன்றினார்.
அதிபர் ஒபாமா இயோவா மாகாணத்தில் நேற்று திங்களன்று நடந்த தேர்தல்

ஆஸ்திரேலியாவின் உயரிய விருது பெற்றார் சச்சின் டெண்டுல்கர்


ஆஸ்திரேலியாவின் உயரிய விருது பெற்றார் சச்சின் டெண்டுல்கர்புதுடெல்லி, நவ. 6-


உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேனான சச்சன் டெண்டுல்கருக்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருதான ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா விருது வழங்கப்படும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கடந்த மாதம் அறிவித்தார்.


இதற்கு அந்நாட்டு எம்.பி. ஒருவர் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹைடன் எதிர்ப்பு தெரிவித்தனர். மற்றொரு முன்னாள் வீரர் தில்பானிஸ்ட் ஆதரவு தெரிவித்திருந்தார்.

Nov 4, 2012

இராணுவ பலத்தை அதிகரிக்கும் சீனா



இராணுவ பலத்தை அதிகரிக்கும் சீனா
சனிக்கிழமை, 03 நவம்பர் 2012
சீனா சமீபகாலமாக தனது இராணுவத்தில் அதிநவீன தொழில் நுட்பங்களை புகுத்தி வருகிறது.ஏற்கனவே ஜெ-20 என்ற ரக ஜெட் போர் விமானத்தை ஏராளமாக தயாரித்து வைத்துள்ளது சீனா.
தற்போது ஜெ-31 என்ற புதிய நவீன போர் விமானத்தை தயாரித்து உள்ளது. இதன் வெள்ளோட்டம் வடகிழக்கு பகுதி மாகாணமான லியான்னிங் பகுதியில் நடந்ததாக ஆசிய பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இதன் மூலம் சீனா இராணுவ பலத்தில் உயரிடத்தை பெற்றிருப்பதாகவும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.

மூளையே இல்லாமல் 3 வருடம் வாழ்ந்து வந்த அதிசய சிறுவன் திடீர் மரணம்


[ சனிக்கிழமை, 03 நவம்பர் 2012,
அமெரிக்காவில் கொலரடோவைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு மூளை இல்லாமல் பிறந்த சிறுவன் நேற்று உயிரிழந்தான்.கொலரடோவைச் சேர்ந்த இந்த தம்பதிகளுக்கு பிறந்த குழந்தையின் பெயர் நிகோலஸ் கோக்.
இவனுக்கு தலைப் பகுதியில் மூளை என்ற பாகமே இல்லாமல் இருந்தது.
ஆனால் இப்படி பிறக்கும் குழந்தைகள் பிறந்த ஒரு சில நொடிகளிலேயே மரணித்துவிடும். ஆனால், அந்த விதியை உடைத்து நிகோலஸ் கோக் வாழ்ந்து வந்தான்.
எவ்வித மருத்துவ உபகரணங்களும் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் அவனது சீரான உடல் இயக்கங்களுக்காக ஏராளமான மாத்திரைகளை உணவை விட அதிகமாக சாப்பிட்டு வந்தான்.
இந்நிலையில், நேற்று மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்ததாக அவனது

Nov 3, 2012

சிரியாவில் தீவிரமடைந்து வரும் உள்நாட்டு போர்


 ஞாயிற்றுக்கிழமை, 04 நவம்பர் 2012
சிரியா ஜனாதிபதி பஷர் அல் அசாத்தின் படைக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் மிக தீவிரமாக நடந்து வருகிறது.சிரியாவின் தலைநகர் டமாஸ்கசுக்கும், வர்த்தக நகரமான அலெப்பாவிற்கும் இடையே உள்ள முக்கிய விமான தளமான டாப்டனாசை போராட்டக்காரர்கள் கைப்பற்றி உள்ளனர்.
இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே இராணுவம் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ள கோலன் ஹைட்ஸ் பகுதிகளுக்கு சிரியா மூன்று இராணுவ டாங்கிகளை அனுப்பி வைத்துள்ளதாக இஸ்ரேல் ஐ.நாவிடம் குற்றம் சுமத்தி உள்ளது.

எதனாலே உன் சீற்றம்


அழகான உலகிலே
இழிவான செயல்களால்
இயற்கை அன்னையே
இயலாது கொந்தழிக்கின்றாயா?
இல்லையேல் எதனாலே 
உன் சீற்றம் ???

வாழ்ந்து முடித்தோர் 
எது வந்தாலும் ஏற்கும் நிலையில்....
வாழ ஆசைகொண்டோர்
கண்களிலே பல ஏக்கம்...!!!
இடையினர் மனங்களோ
உன்னை எதிர்கொள்ளும் பயத்தினிலே..!!!
ஏதும் அறிய குழந்தைகளோ 
குறும்புகளுடன் சந்தோஷமாய்...!!!
நாளைய விடியலுக்காய்
விழித்திருக்கும் பல விழிகள்....!!!
எப்படி இருப்பினும்
உன்னை எதிர்கொள்ள
எம்மால் முடியாதம்மா...!!!

அடுத்தடுத்து துன்பங்கள்
அயராது தாக்கினாலும் 
எதிர்நீச்சல் போட்டிடலாம்..!!
அன்னையே உன்னை 
எதிர்த்திட முடியாதம்மா...!!!
இரங்கலாய் கேட்கின்றோம் 
இரக்கம் காட்டாயோ????

விண்டோஸ் 8ல் மெட்ரோ இல்லை


விண்டோஸ் 8 சோதனைத் தொகுப்பு வாடிக்கையாளர் களுக்குத் தரப்பட்ட நாள் முதல், அதன் இன்டர்பேஸ் என்னும் இடைமுகம் "மெட்ரோ இன்டர்பேஸ்' என அழைக்கப்பட்டது.

ஆனால், பல்வேறு சட்ட சிக்கல்கள் அதில் ஏற்பட்டதால், மெட்ரோ என்ற பெயரை, விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் பயன்படுத்துவதில்லை என்ற முடிவை, மைக்ரோசாப்ட் எடுத்துள்ளது.


"மெட்ரோ' என்ற பெயரினை, சியாட்டில் நகரத்தில் செயல்படும் போக்குவரத்துக் கழகத்தின் இயக்க முறையினால் கவரப்பட்டு, மைக்ரோசாப்ட் தேர்ந்தெடுத்தது. சியாட்டில் நகரில் தான் மைக்ரோசாப்ட் தலைமை அலுவலகம் இயங்குகிறது.

சூடு பிடிக்கும் மொபைல் கதிர்வீச்சு

மொபைல் போன்கள் பயன்படுத்தப்படுகையில் ஏற்படும் கதிர் வீச்சு இதயம், மூளை ஆகியவற்றை அதிகம் பாதிக்கிறது எனவும், அபாய அளவில் கதிர் வீச்சு உள்ள போன்களைத் தடை செய்திட வேண்டும் என்றும் பல அறிக்கைகளைப் படித்து வருகிறோம்.

அரசு இது குறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளும் பத்திரிக்கைகள் வாயிலாக வெளி வந்த வண்ணம் உள்ளன.

மேலை நாடுகளில் இந்த பிரச்னையை மிகக் கவனத்துடன் அரசுகள் கையாண்டு வருகின்றன. பாதிக்கக் கூடிய அளவில் கதிர்வீச்சு இருக்கும் போன்களை அங்கு விற்பனை செய்திட முடியாது.

இந்தியாவில் இந்த விழிப்புணர்ச்சி மெதுவாக ஏற்பட்டு வருகிறது. இதனால்,

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...