Nov 3, 2012

சூடு பிடிக்கும் மொபைல் கதிர்வீச்சு

மொபைல் போன்கள் பயன்படுத்தப்படுகையில் ஏற்படும் கதிர் வீச்சு இதயம், மூளை ஆகியவற்றை அதிகம் பாதிக்கிறது எனவும், அபாய அளவில் கதிர் வீச்சு உள்ள போன்களைத் தடை செய்திட வேண்டும் என்றும் பல அறிக்கைகளைப் படித்து வருகிறோம்.

அரசு இது குறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளும் பத்திரிக்கைகள் வாயிலாக வெளி வந்த வண்ணம் உள்ளன.

மேலை நாடுகளில் இந்த பிரச்னையை மிகக் கவனத்துடன் அரசுகள் கையாண்டு வருகின்றன. பாதிக்கக் கூடிய அளவில் கதிர்வீச்சு இருக்கும் போன்களை அங்கு விற்பனை செய்திட முடியாது.

இந்தியாவில் இந்த விழிப்புணர்ச்சி மெதுவாக ஏற்பட்டு வருகிறது. இதனால், டில்லி அரசு விழித்துக் கொண்டு, ஒவ்வொரு மொபைல் போன் விற்பனை செய்யப் படுகையிலும், அந்த மொபைல் போனைப் பயன்படுத்துகையில் வெளிப்படும் கதிர் வீச்சு எந்த அளவில் இருக்கிறது என்ற தகவலுடன் கூடிய அட்டையினை இணைக்க வேண்டும் என உத்தர விட்டுள்ளது.

மக்கள் நலத்துறை, இந்திய மருத்துவ ஆய்வுத்துறை மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக வல்லுநர்கள் கலந்து கொண்ட கூட்டத்தின் முடிவில் இந்த முடிவு எடுக்கப்பட்டு, அரசு இந்த விதியினைக் கொண்டு வந்துள்ளது.

மேலும், மொபைல் போன் களுக்கான டவர் களை அமைக்கும் விஷயத்திலும் பின்பற்ற வேண்டிய நடை முறைகளையும் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...