Jan 6, 2013

அமெரிக்க அதிபராக ஒபாமா 20ஆம் தேதி பதவியேற்பு


அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்காளர் குழு வாக்குகள் சனிக்கிழமை எண்ணப்பட்டன. அப்போது, ஓஹையோவில் பதிவான வாக்குகள் தொடர்பான சான்றிதழை அந்த மாகாண அவைத் தலைவர் ஜான் போய்னரிடம் காட்டுகிறார் துணை அதிபர் ஜோ பிடன் (இடது).

First Published : 05 January 2013
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பராக் ஒபாமா இம்மாதம் 20ஆம் தேதி பதவியேற்கிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. ஒவ்வொரு மாகாணத்திலும் வெற்றி பெற்ற வாக்காளர் குழு (எலக்டோரல் காலேஜ்) உறுப்பினர்கள் தங்களது கட்சி வேட்பாளருக்கு வாக்களித்தனர். அந்த முடிவுகளை அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தனர். அந்த

வரலாறு காணாத குளிர் : சீனாவில் கடல் உறைந்தது


ஷாங்காய்: சீனாவில் 28 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் குளிர் நிலவுகிறது. கடல் நீர் உறைந்ததால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கப்பல்கள் சிக்கித்தவிக்கின்றன. சீனாவில் கடந்த நவம்பர் மாதம் முதல் 3.8 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கடும் குளிர் நிலவுகிறது. இது கடந்த ஆண்டை விட 1.3 டிகிரி குறைவு, 28 ஆண்டுகளில் குறைந்தபட்ச வெப்பநிலை என்று சீன வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. கடும் குளிர் காரணமாக ஷான்டாங் மாகாணம் லெய்ஜோ வளைகுடாவில் கடல் நீர் உறைந்ததால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கப்பல்கள் நகர முடியாமல் சிக்கியுள்ளன. கடும் பனிப்பொழிவு ஏற்படுவதால் மத்திய ஹுனான் மாகாணத்தில் 140 விமானங்கள் தாமதம் அடைந்தன.

அலாஸ்காவில் கடும் நிலநடுக்கம்





ஜுனியா: அலாஸ்கா அருகே கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அலாஸ்காவின் தெற்குப் பகுதி மற்றும் கனடாவின் கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நிலநடுக்கம் 7.6 ரிக்டர் புள்ளிகள் அளவுக்கு இருந்தது. கிரேய்க் பகுதிக்கு மேற்கே 97 கி.மீ தொலைவில் பசிபிக் கடலில் 9 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்தது. நிலநடுக்கம் காரணமாக கார்டோவ் நகருக்கு தென்கிழக்கே 121 கி.மீ தொலைவில் தொடங்கி வான்கூவர் தீவின் வடக்கு முனை வரை சுனாமி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

Jan 5, 2013

புது வருடம் - 1193 வாகனங்கள் தீக்கிரை

புது வருட Saint-Sylvestre இரவில் 1193 வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதாக நேற்று இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் உள்துறை அமைச்சர் மனுவல் லால்ஸ் கூறியுள்ளார். இதில் சிற்றுந்துகளும் உந்துருளிகளும் அடங்கும். இதில் 344 வாகனங்கள் அருகிலிருந்த வாகனங்கள் கொழுத்தப்பட்டதால் தீ பரவி எரிந்தவை எனக் கூறியுள்ளார். கடந்த வருடம் தீக்கிரையான வாகனங்களின் எண்ணிக்கையை சார்க்கோசி அரசு வெளியிட மறுத்திருந்தது. ஆனாலும் தாம் முழுமையாக வெளிப்படையாக இருக்க விரும்புவதாகவும் அதிகாரபூர்வ எண்ணிக்ககையை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 2009 ம் ஆண்டு 31 டிசம்பர்

விமான விபத்து! ஐவர் பலி!!


Grenoble விமான நிலையத்தருகில் நடந்த விமான விபத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட ஐவர் பலியகியுள்ளனர். இவ் விபத்து இன்று சனிக்கிழமை மதியம் நடைபெற்றுள்ளது. மொரோக்கோவில் பதிவு செய்யப்பட்ட இவ்விமானம் ஸ்பெயினில் ஒரு தரிப்பைச் செய்து விட்டு மொரோக்கோ திரும்பத் திட்மிட்டிருந்தது. இரண்டு இயந்திரங்கள்  உள்ள இச் சிறு விமானம் Grenoble விமானநிலையத்தில் இருந்து புறப்பட சிறிது நேரத்தில் Saint-Etienne-de-Saint-Geoirs ற்கும்  Saint-Simeon-de-Bressieux ற்கும் இடையில் வீழ்ந்து நொறுங்கியுள்ளது.

ஈபிள் கோபுரத்தின் சிறப்பம்சங்கள்

ஈபிள் கோபுரத்தின் சிறப்பம்சங்கள் பற்றி தெரிய வேண்டுமா?

பிரஞ்சு நாட்டில் உள்ள ஈபிள் கோபுரம் (Eiffel Tower) 1889 மார்ச் 31ஆம் தேதி திறக்கப்பட்டது. இது அகில உலகக் கண்காட்சி மற்றும் பிரெஞ்சுப் புரட்சி நூற்றாண்டு நிறைவு ஆகியவற்றை நினைவு கூறும் சின்னமாக உருவாக்கப்பட்டது.

1887 இல் கட்டத் தொடங்கிய காலத்தில் இதனை 20 வருடம் கழித்து இடிக்கத் திட்டமிட்டனர். ஆனால் அந்தத் திட்டம் பின்னர் கைவிடப்பட்டது. உலக புகழ் பெற்ற ஈபிள் கோபுரம் தொடர்பான மேலும் சில முக்கிய தகவல்..

1. கோபுரத்தின் மொத்த உயரம் 984 அடி (324 மீட்டர்) நிலப்பரப்பு 2.5 ஏக்கர் (412 சதுர அடி, 100 சதுர மீட்டர்).

2. கோபுரம் முழுவதும் 18,038 சிறப்பு உருக்கு இரும்புத் துண்டங்களால்

Jan 4, 2013

டாக்டரின் கைவிரலைப் பிடித்தபடி வெளியே வந்த குழந்தை - இணையத்தில் கலக்கும் அதிசயப் புகைப்படம்!

News Service தனது மனைவியின் பிரசவத்தின் போது எடுக்ப்பட்ட படம் ஒன்றை அவரது கணவர் வெளியிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். அவரது மகள் பிறந்தபோது, பிரசவம் பார்த்த டாக்டரின் விரலை இறுகப் பற்றியபடி வெளியே வந்ததே இந்த ஆச்சரியத்திற்குக் காரணம். இந்தப் புகைப்படம் இப்போது இன்டர்நெட்டில் படு வேகமாகப் பரவி வருகிறது.
  
அமெரிக்காவின் அரிசோனா, கிளான்டெல் பகுதியைச் சேர்ந்தவர் அலிசியா அட்கின்ஸ். இவருக்கு கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி பிரசவம் நடந்தது. அழகிய மகளைப் பெற்றெடுத்தார். அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தையை டாக்டர்கள் வெளியே எடுத்தனர். நெவியா என்று குழந்தைக்குப் பெயரிட்டனர். பிரசவத்தின்போது அலிசியாவின் கணவர்

உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியல் - முதலிடத்தில் கார்லோஸ்!

News Service உலகின் 100 பெரும் பணக்காரர்கள் பட்டியலை ப்ளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ் வெளியிட்டுள்ளது. ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் உலகில் உள்ள பெரும் பணக்காரர்களை பட்டியலிட்டு வெளியிடுவது வழக்கம். அதன்படி அது 100 பேர் கொண்ட உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. 2012ம் ஆண்டில் பணக்காரர்களின் சொத்துக்களின் அடிப்படையில் தான் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டது.
  
இந்த பட்டியலில் பணக்காரர் என்றால் அனைவரின் நினைவுக்கு வரும் பில் கேட்ஸுக்கு இரண்டாவது இடம் தான் கிடைத்துள்ளது. மெக்சின் டெலிகம்யூனிகேஷன்ஸ் தலைவர் கார்லோஸ் ஸ்லிம் தான் உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆவார். அவரிடம் 70 பில்லியன் டாலர்களுக்கு அதிகமாக சொத்துக்கள் உள்ளன. அந்த பட்டியலில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 18வது இடத்தில் உள்ளார். ஆரக்கிள் கம்பெனி சிஇஓ லாரி எல்லிசன் 8வது இடத்தில் உள்ளார்.

அமெரிக்காவில் மிகப்பெரிய இந்து ஆலயம் திறப்பு

News Service அமெரிக்காவின், லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில், 20 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள, சுவாமி நாராயண் கோயில் திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும், வெளிநாடுகளிலும், சுவாமி நாராயண் கோயில்கள் உள்ளன. தற்போது, அமெரிக்காவின், லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில், 68வது கோயில், 100மில்லியன் டொலர் செலவில், கட்டப்பட்டுள்ளது. 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இந்த கோயில், பூகம்பத்தால் பாதிக்கப்படாத வகையில், வடிவமைக்கப்பட்டுள்ளது.

மருத்துவ பயன் நிறைந்த வெற்றிலை

மருத்துவ பயன் நிறைந்த வெற்றிலை

வெற்றிலை பொதுவாக சீதத்தை நீக்கும் சக்தி கொண்டது. வெப்பம் தரும், அழுகல் அகற்றும், உமிழ்நீர் பெருக்கும், பசி உண்டாக்கும், பால் சுரக்க வைக்கும், காமத்தைத் தூண்டும். நாடி நரம்பை உரமாக்கும், வாய் நாற்றம் போக்கும். வெற்றிலைச் சாறு சிறுநீரைப் பெருக்குவதற்கும் பயன்படுகிறது. வெற்றிலைச்சாற்றுடம் நீர் கலந்த பாலையும், தேவையான அளவு கலந்து பருகி வர சிறு நீர் நன்கு பிரியும்.
வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் வைத்துக் கட்டிவர மூச்சுத் திணறல் மற்றும் இருமலுக்கு சுகம் தரும்.
குழந்தைகளுக்கு வரும் சுரம், சன்னிக்கு, வெற்றிலைச் சாற்றில் , கஸ்தூரி, கோரோசனை, சஞ்சீவி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை

வேப்பிலையின் மருத்துவ பயன்

ht1290வேப்பிலையின் மருத்துவ பயன்

வேம்பின் இலை, காய் கனி என அனைத்தும் மருத்துவத்தில் சிறந்து விளங்குகிறது.. வேப்பந்தழையின் இலை கோழையகற்றுதல், சிறுநீர் பெருக்குதல், வீக்கம், கட்டிகளைக் கரைத்தல், வாதம், மஞ்சள் காமாலை, காச்சல், சுவையின்மை, பித்தம், கபம், நீரிழிவு, தோல் வியாதிகள், பூச்சிக் கொல்லியாகவும் பயன் படுகிறது.
வேப்பங்கொழுந்தும் அதிமதுரப்பொடியும் சமன் சேர்த்து நீர் விட்டு அரைத்துப் பட்டாணி அளவாய் மாத்திரை போல் செய்து நிழலில் உலர்த்தி

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...