May 5, 2012

மனிதனின் உயரிய உணவுகளில் தேங்காயும் ஒன்று. நிறைய அன்பர்கள் தேங்காயால் கொலஸ்ட்ரால் கூடுவதாக எண்ணுகின்றனர். தேங்காயை சமைக்கும் போது முழுமை பெறாத கொழுப்பில் இருந்து முழுமைப் பெற்ற கொழுப்பாக மாறுகிறது. அதுவே கொலஸ்ட்ராலாக மாறுகிறது. ஆனால் சமைக்காத தேங்காய், தேங்காய் பால் மனிதர்களுக்கு மிகுந்த நன்மை புரிகிறது. நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுகிறது.
தேங்காயில் உள்ள சத்துக்கள்:

  1. நீர்=36%
  2. புரோட்டின்=4.5%
  3. கொழுப்பு=42%
  4. தாது உப்புக்கள்=1%
  5. நார்ச்சத்து=3.6%
  6. மாவுப்பொருள்=13%
  7. கால்சியம்=10 யூனிட்
  8. பாஸ்பரஸ்=240 யூனிட்
  9. இரும்பு=1.7 யூனிட்
இவை அனைத்தும் 100 கிராம் தேங்காய் பாலில் உள்ள சத்துகள்.
மருத்துவக் குணங்கள்:
  • சளி, இருமல், ஆஸ்துமா அன்பர்களுக்கு அற்புத பானம்.
  • மலச்சிக்கல், விலகும். குடல் பூச்சிகள் நீக்கும்.
  • புற்று நோயை குணப்படுத்தும் உணவு. புலால் உணவை விட உயர்ந்த சக்தி, அதிக சக்தி தரும் உணவு.
தளராத மன உறுதிக்கு இனிப்புடன் தேங்காய் பால் தினமும் சுவைத்திடுவோம்.
குறிப்பு:
  • தேங்காய் அல்லது தேங்காய் பாலுடன் இனிப்புக் கலந்து சாப்பிட வேண்டும். தனியாகச் சாப்பிடக் கூடாது. கனிகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.
  • தேங்காய் பாலை எல்லா இயற்கைச் சாறுகளுடனும் இணைத்தும் சாப்பிடலாம்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...