May 5, 2012

வைட்டமின்கள்



உடலுக்கு தேவைப்படும் பல்வேறு வகையான வைட்டமின்களை குறிக்க ஆங்கில எழுத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஏ, பி, சி, டி, ஈ, கே ஆகிய வைட்டமின்கள் உடலுக்கு மிகவும் அவசியமானவை. இந்த வைட்டமின்கள் சரியான விகிதத்தில் நம்முடைய உணவில் இருக்க வேண்டும். வைட்டமின்கள் நம்முடைய உடலுக்கு ஆற்றல் எதையும் வழங்கவில்லை என்றாலும் உணவு ஜீரணமாவதற்கும், வளர்சிதை மாற்றங்கள் நிகழ்வதற்கும் தேவையான என்ஸைம்கள் உருவாவதற்கு அவை உதவுகிறது.

வகைகள்:

    வைட்டமின்கள் பொதுவாக இரண்டு வகைப்படும். கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள். நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள். இந்த இரண்டு வகையான வைட்டமின்களும் உடலில் பற்றாக்குறைவானால் பலவித
பாதிப்புகள் ஏற்படும். இதுபோல தினமும் குறிப்பிட்டத்தக்க அளவில் நம்முடைய உணவில் இருக்க வேண்டிய வைட்டமின்கள் கீழகண்டவாறு பார்க்கலாம்.

வைட்டமின் "ஏ" உணவு
    வைட்டமின் “ஏ” உணவு

வைட்டமின் "பி" உணவு
    வைட்டமின் “பி” உணவு

வைட்டமின் "சி" உணவு
    வைட்டமின் “சி” உணவு



வைட்டமின் “ஏ” :

    மீன், மீன் எண்ணெய், முட்டை, வெண்ணெய், பால், மஞ்சள் நிற காய்கறிகள் ஆகியவற்றில் இந்த வைட்டமின்கள் அதிக அளவில் இருக்கிறது. தோலின் ஆரோக்கியத்திற்கும், எலும்புகளின் வ‌ளர்ச்சிக்கும், ஹார்மோன்களின் உற்பத்திக்கும் இந்த வைட்டமின் மிகவும் அவசியம் .
    இந்த வைட்டமின் நோய்களையும், நோய்க்கிருமிகளை எதிர்த்து போராடுவதற்கு தேவையான தடுப்பாற்றலை நம்முடைய உடலுக்கு வழங்குகிறது. நம்முடைய உடலில் முக்கியமாக கல்லீரலில் தான் இந்த் வைட்டமின் சேமிக்கப்படுகிறது.
    எனவே இது உணவு சத்துக்களின் நச்சுத்தன்மையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நமது உடல் இந்த வைட்டமின்களை அதன் இயற்கையான வடிவில் சிறந்த முறையில் கிரகித்து கொள்கிறது.

குறைப்பாட்டு நோய்கள்:

    வைட்டமின் “ஏ” பற்றாக்குறைவால் தோல் உலர்ந்து போகும். கண் நோய்கள் ஏற்படும். இந்த வைட்டமின் உடலில் அதிகமானால் மிக வேகமாக முடிகள் உதிரும். அதோடு மனநிலை அடிக்கடி மாறக்கூடியதாக ஆகிவிடும்.

வைட்டமின் “பி” குழுமம்:

    வைட்டமின் “பி” பொதுவாக பல வடிவங்களில் கிடைக்கிறது. நம்முடைய உடலில் இந்த வைட்டமினின் ஒவ்வொறு விதமாக பயன்படுகிறது. பல்வேறு “பி” வைட்டமின்கள் கீழ்கண்டவாறு பார்க்கலாம்.

பி -1:

    அரிசித்தவிடு, சோயாமொச்சை, வாதுமை பருப்பு, கொட்டைகள், தேங்காய், கல்லீரல் ஆகியவற்றில் இந்த வைட்டமின் அதிக அளவில் இருக்கிறது.

குறைப்பாட்டு நோய்கள்:

    உடலில் வைட்டமின்  பி-1 பற்றாக்குறையானால் ஜீரண குறைப்பாடுகள். தசைகள் தளர்வடைதல், எடைக்குறைவு, தூக்கமின்மை, ஞாபகமறதி, பெரி-பெரி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. மைய நரம்பு மண்டலம் முறையாக செயல்படுவதற்கும் இந்த வைட்டமின் உதவுகிறது.

பி-2:

    ஈஸ்ட், சிறுநீரகம், கோதுமை, கோதுமை தவிடு போன்றவற்றில் இந்த வைட்டமின் அதிகமாக இருக்கிறது.

குறைப்பாட்டு நோய்கள்:

    உடலில் இந்த வைட்டமின் பற்றாக்குறையாவதால் உடல் உலர்ந்து போதல், தோல் நோய்கள் போன்ற பிரச்சைகள் ஏற்படுகிறது.

பி-3:

    ஈஸ்ட், முட்டை, சிறுநீரகம், வேர்கடலை போன்றவற்றில் இந்த வைட்டமின்கள் அதிகமாக காணப்படுகிறது.

குறைப்பாட்டு நோய்கள்:

    இந்த வைட்டமின் பற்றாக்குறையாவதால் ஜீரண குறைபாடுகள், மனக்கிலேசம் (Neroousness), வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இது இரத்தத்தின் கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கிறது. இரத்த உறைவதை தடுக்கிறது. இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கிறது.

பி-4:

    இரத்த சிவப்பணுக்கள் முதிர்ச்சி அடைவதற்கு இந்த வைட்டமின் மிகவும் அவசியமானதாக இருக்கிறது. உடலில் புரதங்களின் உற்பத்திக்கும், நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிப்பதற்கும் இது அவசியமானதாகிறது.

பி-5:

    ஈஸ்ட், சிறுநீரகம், முட்டை, மீன், வேர்கடலை போன்றவற்றில் இந்த வைட்டமின் அதிகமாக இருக்கிறது.

குறைப்பாட்டு நோய்கள்:

    இந்த வைட்டமின் பற்றாகுறையாவதால் இதயநோய்கள், மன அழுத்தம், களைப்பு, தலைவலி, தசைகளில் விறைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

பி-6:

    இறைச்சி, வாழைப்பழம், பேரிக்காய் போன்றவற்றில் இந்த வைட்டமின் அதிகமாக இருக்கிறது.

குறைப்பாட்டு நோய்கள்:

    இந்த வைட்டமின் பற்றாக்குறையாவதால் ஜீரணமண்டலம் பலகீனமாதல், வாயில் புண்கள் ஏற்படுதல், பார்வை இழப்பு போன்ற பிரச்சைகள் ஏற்படுகிறது. மூளை சிறப்பாக செயல்படுவதற்கும் இந்த வைட்டமின் அவசியமாகிறது.
    உடலில் ஹீமோகுளோபின் உற்பத்திக்கும், மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்யவதற்கும் இந்த வைட்டமின் உதவுகின்றது. இந்த வைட்டமின்கள் இருந்தால் தான் புரதங்கள் உடலினால் ஒழுங்காக கிரகிக்கப்படும். எனவே இந்த வைட்டமின்களை “புரத-வைட்டமின்” என்றும் அழைப்பர்.

பயோட்டின்:

    உணவு தானியங்கள், ஈஸ்ட், கல்லீரல் ஆகியவற்றில் இந்த வைட்டமின்கள் மிகவும் அதிகமாக இருக்கிறது.

குறைப்பாட்டு நோய்கள்:

    இந்த வைட்டமின் பற்றாக்குறையாவதால் பக்கவாதம், இதய நோய்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.கொழுப்புகளும், தரசங்களும், புரதங்களும் ஜீரணமாவதற்கு இந்த வைட்டமின் உதவுகிறது.

இன்சிடால்:

    பட்டாணிகளிலும், இறைச்சிகளிலும் இது அதிக அளவில் காணப்படுகிறது. உடலின் வளர்ச்சிக்கு இது உதவுகிறது.

பேலிக் அமிலம்:

    பாசிப்பருப்பு, மொச்சை கொட்டை, பசலைக்கீரை, கோதுமை, ஈஸ்ட், பீட்ரூட் போன்றவற்றில் இது அதிக அளவில் இருக்கிறது.

குறைப்பாட்டு நோய்கள்:

    இது  பற்றாக்குறையாவதால் உடலில் இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைகிற‌து.

பி.ஏ, பி.ஏ (P.A, B.A):

    கல்லீரல், ஈஸ்ட், சிவப்பு அரிசி ஆகியவற்றில் இது அதிகமாக காணப்படுகிறது. முடியை கருப்பாக வைத்திருக்க இது உதவுகிறது.

கோலின்:

    கல்லீரல், முட்டை போன்றவற்றில் இது இருக்கிறது.

குறைப்பாட்டு நோய்கள்:

    இது பற்றாக்குறையாவதால் கல்லீரலின் செயல்பாடு பாதிக்கிறது.

வைட்டமின் “சி” :

    ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் வகை பழங்கள், தக்காளி, ஸ்டிராபெரி, உருளைக்கிழங்கு, கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய் முதலியவற்றில் அதிகமாக இருக்கிறது.

குறைப்பாட்டு நோய்கள்:

    இந்த வைட்டமின் பற்றாக்குறையாவதால் உடலில் ஏற்படும் புண்கள் ஆறுவது தாமதமாகும். சாதாரண தடுமம், மன நோய்கள், குடல் புண் போன்றவற்றை குணப்படுத்த இது உதவுகிறது. உடலிலிருந்து நச்சுப்பொருள்களை வெளியேற்றவும் உதவுகிறது.

வைட்டமின் “டி” :

    முட்டை மஞ்சள் கரு, மீன் ஆகியவற்றில் இந்த வைட்டமின் இருக்கிறது. இவை தவிர உடல் சூரிய ஒளிக்கதிரை பயன்படுத்தி உடலில் இருக்கும் சில வகை கொழுப்புகளை வைட்டமின் “டி” யாக மாற்றி கொள்கிறது.

குறைப்பாட்டு நோய்கள்:

    இந்த வைட்டமின் பற்றாக்குறயாவதால் மூட்டுவலி, தமனி இரத்த குழாய்கள் கடினமாதல், ஜீரண குறைபாடுகள், எடைக்குறைவு, தசைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. எலும்புகள் வலுவடைவதற்கும் இந்த வைட்டமின் உதவுகிறது.

வைட்டமின் “ஈ” :

    கோதுமை, சமையல் எண்ணெய்கள், முளைக்கட்டிய பயறு வகைகள், ஈஸ்ட், முட்டை, முட்டைகோஸ், பசலைக்கீரை, வேறு கீரை வகைகள் முதலியவற்றில் இந்த வைட்டமின் அதிகமாக இருக்கிறது.

குறைப்பாட்டு நோய்கள்:

    இந்த வைட்டமின் பற்றாக்குறையாவதால் தசை இழப்பு, கல்லீரல் நோய்கள், இனப்பெருக்க உறுப்புகளின் செயல்பாடு பாதிக்கப்படுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
    ஆண்களின் விந்துக்களுக்கு உயிர்ப்பூட்டுவதற்கும், பெண்களின் மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குப்படுத்துவத்ற்கும் இந்த வைட்டமின் உதவுகிறது.
    உடல் சிறிது நேரம் ஆக்ஸிஜனை சேமித்து வைப்பதற்கும், இரத்தத்தை சுத்திகரிப்பதற்கும் இந்த வைட்டமின் உதவுகிறது.

வைட்டமின் “கே” :

    கீரைகள், பச்சை காய்கறிகள், தக்காளி, கோதுமை, தவிடு, மக்காச்சோளம் போன்றவற்றில் இந்த வைட்டமின் அதிகமாக காணப்படுகிறது.

குறைப்பாட்டு நோய்கள்:

    இந்த வைட்டமின் பற்றாக்குறையாவதால் இரத்தபோக்கு ஏற்படுகிறது. உடலில் காயம் ஏற்படும் போது இரத்தம் உறைவதற்கு இந்த வைட்டமின் உதவுகின்றது.

இவை அனைத்தும் உங்கள் உடலுக்கு தேவைப்படும் வைட்டமின்களின் சிறந்த உணவுகள் மற்றும் பயன்கள் ஆகும். இந்த வைட்டமின் உணவுகளை சரியான முறையில் எடுத்து நோயற்ற வாழ்வு வாழ்வோம்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...