Oct 7, 2012

அமெரிக்க செய்தி 1 மில்லியன் வோல்ட் மின்சாரத்தை உடலில் பாய்ச்சி சாதனை படைத்த நபர் (வீடியோ இணைப்பு)






அமெரிக்காவைச் சேர்ந்த மேஜிக் நிபுணர் ஒருவர் தனது உடலில் 1 மில்லியன் வோல்ட் மின்சாரத்தை பாய்ச்சி சாதனை படைத்துள்ளார்.அமெரிக்காவை சேர்ந்தவர் டேவிட் பிளேன் (வயது 39). மேஜிக் நிபுணரான இவர், பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.
இந்நிலையில் 10 லட்சம் வோல்ட் மின்சாரத்தை தனது உடலில் பாய்ச்சி சாதனை நிகழ்த்தப் போவதாக அறிவித்திருந்தார்.
இச்சாதனை நிகழ்ச்சி நியூயார்க் நகரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக மிகப் பெரிய கூண்டு அமைக்கப்பட்டது. அதன் நடுவில் 20 அடி
உயரத்தில் மேடை உருவாக்கப்பட்டது.
அதில் ஏறியபடி நின்ற டேவிட்பிளேன் உடலில் 10 லட்சம் வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்பட்டது. அது தனது உடலில் தாக்கி பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்க அவர் விசேஷ உடை அணிந்து இருந்தார்.
கடந்த 2ம் திகதி அவர் தனது சாதனையை தொடங்கி 4ம் திகதி வெற்றிகரமாக முடித்தார். அவரது உடலில் 72 மணி நேரம் மின்சாரம் மின்னல் போன்று அலை அலையாக பாய்ந்து தாக்கியது.
சாதாரணமாக வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தப்படும் 240 வோல்ட் மின்சாரம் உடலில் பாய்ந்தாலே உயிருக்கு ஆபத்து ஏற்படும்.
ஆனால் 10 லட்சம் வோல்ட் மின்சாரத்தை உடலில் பாய்ச்சி மெய்சிலிர்க்க வைத்த இந்த அரிய காட்சியை ஆயிரக்கணக்கான மக்கள் பிரமிப்புடன் கண்டு மிரட்சியுடன் ரசித்தனர்.
இவர், இதற்கு முன்பு மண்ணுக்குள் புதைந்தும், ஐஸ்கட்டிக்குள் உறைந்தும் மீண்டும் உயிருடன் வந்து பல்வேறு சாகசங்களை நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...