Oct 7, 2012

துபாயில் உருவாகும் தாஜ்மஹால்



ஐக்கிய அரபு நாடான துபாயில் ஒரு பில்லியன் டொலர் செலவில் இந்திய தாஜ்மஹலையொத்த கட்டடமொன்றை கட்ட அந்நாடு தீர்மானித்துள்ளது.உலக அதிசியங்களில் ஒன்றான தாஜ்மஹால் புதுடெல்லி ஆக்ராவில் அமைந்துள்ளது.
இந்நிலையில் தாஜ்மஹாலையொத்த தாஜ் அராபியா என பெயரிடப்பட்டுள்ள இந்த கட்டடம் 300 அறைகளைக் கொண்ட ஹோட்டல், வர்த்தக கட்டடங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும்.
இந்த தகவலை தாஜ் அராபியா கட்டடத்தை நிர்மாணிக்கும் அருண் மெஹ்ரா தெரிவித்தார்.
‘புதிய காதல் நகரம்’ ௭ன அழைக்கப்படவுள்ள இந்த கட்டடம் எதிர்வரும் 2014ம் ஆண்டு திறந்து வைக்கப்படவுள்ளது.
மேலும் இந்த கட்டடத் தொகுதியானது ஈபிள் கோபுரம், பிரமிட்டுக்கள், சீனப்
பெருஞ்சுவர் ௭ன்பனவற்றின் மாதிரிக் கட்டமைப்புகளையும் உள்ளடக்கியிருக்கும் ௭ன தெரிவிக்கப்படுகிறது.
தாஜ் அராபியா கட்டடம் புதுமண தம்பதிகளுக்கு தேனிலவு சுற்றுலாஸ்தளமாக விளங்கும் ௭ன கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...