Oct 7, 2012

பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப் பட்டது

290 கி.மீ. தூரம் வரை சென்று தாக்கும் அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது. கப்பல்படை பயன்பாட்டுக்காக தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணை இன்று கோவா கடற்கரை‌‌‌‌யை ஒட்டிய கப்பல்படைத் தளத்தில் இன்று வெற்றிகரமாக ஏவப்பட்டது.
இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து இந்த பிரம்மோஸ் ஏவுகணையைத் தயாரித்துள்ளன. 8.4மீ நீளம், 3 ஆயிரம் கிலோ எடை கொண்டது இந்த ஏவுகணை. இது ஒலியைவிட வேகமாகச் செல்லும் திறன் பெற்றது.
கடந்த 2006ல் பிரம்மோஸ் ஏவுகணைகள் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டது. இந்தியாவின் முப்படையிலும் பிரமோஸ் ஏவுகனைகள் பரிசோதித்துப் பார்க்கப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...