Oct 7, 2012

சென்னை-கோவை-பெங்களூர் புல்லட் ரயில் இயக்க திட்டம்


 High Speed Bullet Trains From Chennaiபுவனேஸ்வரம்: சென்னை உள்பட நாட்டில் 5 வழித்தடங்களில் அதிவேக புல்லட் ரயில்களை இயக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
மும்பை- புனே, மும்பை- அகமதாபாத், சென்னை- கோவை- பெங்களூர்- எர்ணாகுளம், டெல்லி- அமிர்தசரஸ், ஹவ்ரா- ஹால்டியா ஆகிய 5 முக்கிய வழித் தடங்களில் முதல் கட்டமாக புல்லட் ரயில் திட்டத்தை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து ஆகஸ்ட் மாதம் ஆய்வு நடத்தப்பட இருப்பதாக ரயில்வே வாரியத் தலைவர் கே.சி.சேனா தெரிவித்தார். புவனேஸ்வரத்தில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
இந்தியாவில் அதிவேக புல்லட் ரயில்களை விட பயணிகளிடமிருந்து
கோரிக்கை வலுத்து வருகிறது. மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் புல்லட் ரயில் திட்டத்துக்கான வாய்ப்பு குறைவு.
ஆனாலும் புல்லட் ரயில் திட்டத்தை அமல்படுத்த சில மாநில அரசுகள் ஆர்வமாக உள்ளன. ஆகவே முதல் கட்டமாக புல்லட் ரயில் திட்டத்தை 5 முக்கிய வழித்தடங்களில் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
வருகிற ஆகஸ்ட் மாதம் இதற்காக உலகளாவிய டெண்டர்' விடப்படுகிறது.   இந்த ஆய்வுக்கான நிதியை அளிக்க சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தயாராக உள்ளன.
பணிகளுக்கான டெண்டர்கள் பரிசீலிக்கப்பட்டு வரும் செப்டம்பர் மாதத்தில் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கிறோம். உலக அளவில் தைவான் அதிவேக கார்ப்பரேஷன்' நிறுவனம்தான் தற்போது புல்லட் ரயில் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
புல்லட் ரயில் பாதை அமைக்க ஒரு கி.மீ. தூரத்துக்கு ரூ.600 கோடி செலவாகும். இதை தனியார் ஒத்துழைப்புடன்தான் செயல்படுத்த முடியும். சாதாரண மக்களுக்குக் கட்டுப்படியாகாத அளவுக்கு புல்லட் ரயில் கட்டணம் மிகவும் அதிகமாக இருக்கக்கூடும் என்றார்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...