Dec 26, 2012

2012 : பேஸ்புக்கின் பார்வையில்


2012 ம் ஆண்டு பேஸ்புக்கின் பார்வையில் எப்படி இருந்தது என்பதை பார்ப்பதற்கு முன்னர், உலகின் ஒவ்வொரு தனிப்பட்ட நபர்களதும் பேஸ்புக் புரொஃபைல் 2012ம் ஆண்டில் எப்படி இருந்தது என்பதனை பற்றி பார்போம்.
இதற்காக பேஸ்புக் ஒரு சிறப்பு பக்கத்தை உருவாக்கியுள்ளது.

facebookstories.com எனும் இப்பக்கம் உங்களுக்குமானது. 2012 இல் உங்களது பேஸ்புக் டைம்லைன் பக்கத்தில் பதிந்த மிகச்சிறந்த நிகழ்வுகள், ஹைலைட்டைட் போஸ்ட், புகைப்படங்கள், ஞாபகங்கள் எதையும் இந்த

வசதியின் உதவியுடன் தொகுக்க முடியும்.

சரி, இப்போது 2012 பேஸ்புக்கின் பார்வையில் எப்படி இருந்தது என பார்ப்போம். 


இந்தியாவில் பேஸ்புக் மூலம் அதிகம் பேசப்பட்ட சினிமா பாடல்கள் வரிசையில் Cocktail திரைப்படத்தில் இடம்பெற்ற தும்ஹி ஹோ பந்து, தாரு தேச் ஆகிய படங்கள் முதலிரு இடங்களை பிடித்துள்ளன.
1. Tumhi Ho Bandhu - Cocktail
2. Daaru Desi - Cocktail
3. Pani Da Rang (Male) - Vicky Donor
4. Tu Hi Mera - Jannat 2
5. Second Hand Jawaani – Cocktail
6. Chinta Ta Ta Chita Chita – Rowdy Rathore
7. Abhi Abhi – Jism 2
8. The Disco Song – Student of the Year
9. Ishq Wala Love – Student of the Year
10. Pareshaan - Ishaqzaade Check-ins

பேஸ்புக்கில் அதிகம் பிரபலமான இந்தியாவின் முக்கிய இடங்கள் பட்டியலில் டெல்லியின் சாகெத்தில் உள்ள Select Citywalk ஷாப்பிங் மால்  முதலிடத்தை பிடித்துள்ளது.  அம்ரிஸ்தாரில் உள்ள தங்க கோவில்,  குருத்வாரா சிறீ பாங்லா சாகிப், இந்திய கேட், Cannaught Place, சத்யம் சினிமாஸ், ஆகிய இடங்கள் பற்றியும் அதிகம் பேசப்பட்டுள்ளன.

1. Select Citywalk , Saket
2. Golden Temple (Harmandir Sahib), Amritsar
3. Gurudwara Shri Bangla Sahib
4. India Gate
5. Connaught Place, New Delhi
6. Satyam Cinemas
7. Sector 17, Chandigarh
8. Ambience Mall
9. DT Cinemas
10. Inorbit Mall

உலகளாவிய ரீதியில் அதிகம் பேசப்பட்ட அரசியல் சொல்லாக பாரக் ஒபாமா முதலிடம் பிடித்துள்ளது. மிட் ரூம்னி,  Voted, Four More Years, Gay Marriage, Obama Care, The Polls, என்பனவும் முன்னிலை பெற்றுள்ளன.

உலகளாவிய ரீதியில் மிக பிரபலமான Memes (புதிய தனிச்சொற்கள்) வரிசையில்  TBH (to be honest), YOLO (you only live once), KONY, One-word Comment, Gangnam Style, Cinnamon Challenge என்பன இடம்பிடித்துள்ளன.

பேஸ்புக்கில் அதிகம் பேசப்பட்ட மிகப்பிரபல நிகழ்வுகளாக, அமெரிக்க அதிபர் தேர்தல், சூப்பர் போல் கேம், விட்னி ஹாஸ்டனின் மரணம், சாண்டி புயல், லண்டன் ஒலிம்பிக், என்பன முன்னிலை பெற்றுள்ளன.

பேஸ்புக்கில் அதிகம் பேசப்பட்ட மேலும் சில சுவாரஷ்யமான தகவல்களை பற்றி இந்த தளத்தில் நீங்கள் காணமுடியும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...