Dec 26, 2012

2298 கி.மீ தூரத்தை 10 மணித்தியாலங்களில் கடக்கும் சீன ரயில் : இன்று வெள்ளோட்டம்

உலகின் மிக நீண்ட அதிவேக ரயில் பாதை சீனாவில் இன்று உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டுள்ளது. 
தலைநகர் பீஜிங்கில் இருந்து சீனாவின் தெற்கே உள்ள மிகப்பெரிய வர்த்தக மையமான குவாங்ஷௌ வரை நீண்டிருக்கும் இந்த ரயில் பாதையில் முதலாவது வெள்ளோட்டம் இன்று மேற்கொள்ளப்பட்டது.

இந்த அதிவேக புள்ளெட் ரயில் 300 Km/h வேகத்தில் பயணிக்கக் கூடியது. இது முன்னைய சாதாரண ரயிலை விட இரு மடங்கு அதிக வேகமாகும். இது

குறித்து சீன போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில் இந்த ரயில் பாதை உலகின் மிக முக்கிய தொழிநுட்ப முன்னேற்றம் மிக்க கட்டுமானம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

சுமர் 2298 Km தூரமுடைய இந்த ரயில் பாதையில் 35 ரயில் நிலையங்கள் உள்ளன. இவற்றில் சீனாவின் முக்கிய நகர்களான வூஹான் மற்றும் சாங்ஷா ஆகியவையும் உள்ளடக்கப் பட்டுள்ளன. மேலும் முன்னர் 22 மணித்தியாலங்கள் எடுத்த இப்பயணம் தற்போது 10 மணித்தியாலங்களாகக் குறைவடைந்துள்ளது. சீனாவின் முன்னால் அதிபர் மாவோ ஷெடொங் இனை கௌரவிக்கும் விதத்திலேயே இன்று டிசம்பர் 26 இல் இப்பாதை திறக்கப்பட்டுள்ளது.


சீனா சமீப காலமாக நாடு முழுதும் அதிவேக ரயில் பாதைகளைக் கட்டுவதில் தீவிரம் காட்டி வருகின்றது. ஆனால் இந்த இலட்சியம் சில தடைகளையும் எதிர்நோக்கியுள்ளது. அதாவது கடந்த கோடைக்காலத்தில், சீனாவின் கிழக்கு மாகாணமான ஷெஜியாங்கில் அதிவேக ரயில் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 40 பொது மக்கள் பலியாகியிருந்தனர். இதை விட இந்த அதிவேக பாதைகளை அமைக்கும் திட்டத்தில் அதிக இலஞ்ச முறைகேடுகள் நிகழ்வதாகவும் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...