Dec 26, 2012

கஜகஸ்தான்: ராணுவ விமானம் தரையில் மோதி 27 பேர் பலி

கஜகஸ்தான்: ராணுவ விமானம் தரையில் மோதி 27 பேர் பலிமாஸ்கோ, டிச. 26-

மத்திய கிழக்கு ஆசியா கண்டத்தின் பாலைவனப் பகுதியில் கஜகஸ்தான் - உஸ்பெகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான 2 ஆயிரத்து 200 கி.மீட்டர் நீளம் கொண்ட எல்லைப் பகுதி உள்ளது.

இப்பகுதியில், கஜகஸ்தான் நாட்டின் சார்பில் தலைமை எல்லைப் பாதுகாப்பு அதிகாரி கர்ணல் டுர்கன்டெக் ஸ்டாம்பெகோவ் தலைமையில் பணியாற்றும் எல்லைப் பாதுகாப்பு படையினர் 20 பேர், விமானம் மூலமாக எல்லைப் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.

உஸ்பெகிஸ்தான் எல்லைப்பகுதி அருகே உள்ள ஷிம்கெண்ட் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக அந்த விமானம் தரையில் மோதி நொறுங்கியது.
இந்த விபத்தில், விமானப்படை வீரர்கள் 7 பேர், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் 20 பேர் என மொத்தம் 27 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
விபத்துக்கான காரணம் குறித்து கஜகஸ்தான் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...