Dec 26, 2012

Dec 27 இங்கிலாந்து: எலிசபெத் ராணியின் கிறிஸ்துமஸ் உரை முதன்முதலில் 3Dயில் ஒலிபரப்பிய தொலைக்காட்சிகள்.

www.thedipaar.com

பிரிட்டிஷ் ராணி இரண்டாவது எலிசபெத்தின் கிறிஸ்துமஸ் செய்தி முப்பரிமாண (3டி) தொழில்நுட்பத்தில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.


கிறிஸ்துமஸ் தினத்தின்போது பிரிட்டிஷ் ராணி நடத்தும் இந்த உரை மிகவும் பிரபலமானது. 1932ஆம் ஆண்டு முதல் பாரம்பரியமாக நடைமுறையில் உள்ள இந்த அரச குடும்ப வாழ்த்துச் செய்தி, தொடக்க காலகட்டத்தில் ரேடியோவில் ஒலிபரப்பானது. அடுத்த கட்டமாக தொழில்நுட்ப வளர்ச்சியைப் பின் தொடர்ந்து டி.வி.யில் ஒளிபரப்பானது. முதல் முறையாக டி.வி.யில் நேரடியாக கிறிஸ்துமஸ் வாழ்த்து வழங்கிய பெருமையும் ராணி எலிசபெத்தையே சேரும். இப்போது அவரே 3டி-யில் வாழ்த்துச் செய்தி வழங்கியுள்ளார். அவரது வாழ்த்துச் செய்தி பக்கிங்ஹாம் அரண்மனையில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது.
தனது கணவர், மகன், மகள்கள், பேரக்குழந்தைகளுடன் தேவாயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையிலும் ராணி எலிசபெத் பங்கேற்றார். தேவாலயத்தில் அவரை வரவேற்க காத்திருந்த 70 குழந்தைகளிடமும் மலர்க்கொத்தைப் பெற்றுக் கொண்டு அவர்களுடன் உரையாடி மகிழ்ந்தார். 89 வயதாகும் எலிசபெத், ராணியாகப் பொறுப்பேற்ற 60ஆவது ஆண்டு தினம் இந்த ஆண்டில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது நினைவுகூறத்தக்கது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...