Apr 6, 2014

கறிவேப்பிலை :

கறிவேப்பிலை :

இமயம் முதல் குமா¢ வரை பரந்து கிடக்கும் பாரத தேசமெங்கும் பரவிக் கிடப்பது கருவேப்பிலையாகும். இக்கருவேப்பிலை இந்தியாவில் ஏராளமாக விளையக்கூடியது. இது காடுகளிலும், மலைகளிலும், வீட்டுத் தோட்டங்களிலும் பயிராகக்கூடிய ஒரு பெருஞ் செடியின் வகையைச் சார்ந்தது; எனினும் நாம் இதனைப் பொதுவாக சிறுமரம் என்றே குறிப்பிடுகின்றோம்.

கருவேப்பிலை ஒரு வெப்ப மண்டலப் பயிராகும். இது வெப்ப மண்டல ஆசியாவில் மிக நன்றாக வளரக்கூடியது.

இதனைக் கறிவேப்பிலை, கருவேப்பிலை, கறிய என்றும் குறிப்பிடுவார்கள். கறிவேப்பிலை வேம்பு இலைப் போன்ற தோற்றமளிக்கும். ஆனால் கறிவேப்பிலை வேப்பம் இலையைப் போல் பச்சையாக இல்லாமல் சற்று கரும்பச்சை நிறமாக இருக்கும். மரத்தின் பட்டையும் சிறிது கறுப்பாக
இருக்கும். இதனாலேயே இதனைக் கறுவேம்பு என்பர். இதை ஒட்டியே வடமொழியில் காலசாகம் என்ற பெயர் கருவேப்பிலைக்கு ஏற்பட்டுள்ளது. இதனைக் கால்க்கஸ் என்றால் செம்பு என்னும் பொருள்படக் கூடியது. இந்த மரம் செம்புநிறச் சாயல் உள்ள காரணத்தினால் இப்பெயர் கொடுக்கப்பட்டிருக்கலாம்.

கறிவேப்பிலையில் இரண்டு வகை உண்டு. அவைகள் நாட்டுக் கறிவேப்பிலை, காட்டுக் கறிவேப்பிலை என்ற இரு வகைகளாம்.

நாட்டுக் கறிவேப்பிலை உணவாகவும், காட்டுக் கறிவேப்பிலை மருந்தாகவும் பயன்படுகிறது. காட்டுக் கறிவேப்பிலையின் இலை சற்றுப் பொ¢தாகவும் கசப்பு அதிகம் உள்ளதாகவும் இருக்கும். நாட்டுக் கறிவேப்பிலை இலை அதனைவிடச் சிறிதாகவும், இனிப்பும் துவர்ப்பும் நறுமணமும் உள்ளதாக இருக்கும்.

பூக்கள் கொத்தாக அமைந்திருக்கும். கறிவேப்பிலை பழம் அண்ட வடிவு அல்லது உருண்டை வடிவாக 1/4 முதல் 2/8 அங்குலம் இருக்கும். இக்கனியோ சதைப் பற்றுடையதாக இருக்கும். காய் பழுக்கப் பழுக்க சிவப்பாகி பிறகு கருமை நிறமாமக மாறும். கறிவேப்பிலையினுடைய இலை, ஈர்க்கு, பட்டை, வேர் முதலியன உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகின்றன.

இவ்விலை உணவுக்கு ஒருவித நறுமணத்தைக் கொடுப்பதால் இந்தியர்களில் பெரும்பாலோர் தங்கள் வீட்டில் செய்யப்படும் கறிவகையிலும், குழம்பு, மிளகு நீர், நீர்மோர் போன்ற திரவப்பொருள்களிலும் இதனைத் தாளிதம் செய்து சேர்ப்பார்கள்.

உணவுடன் உண்ணும் பலவகைக் காய்கறிகளுடனும் பதார்த்தங்களுடனும் இக் கறிவேப்பிலையைச் சேர்ப்பது மிகப் பழங்காலத்திலிருந்தே நம் நாட்டில் பழக்கத்தில் உள்ளது. எனவே தான் இதற்கு கறிவேப்பிலை எனப் பெயர் வந்தது.

கறிவேப்பிலைக்குச் சிறப்பாக மணம் ஊட்டும் குணம் அதிகம். எனவே உணவுக்கு நறுமணம் ஊட்டுவதற்காகவே இக்கீரையைச் சேர்ப்பர். இக்கறிவேப்பிலையைத் துவையல் செய்து உண்ணலாம். இதிற் காரப்பொடி செய்து நெய் சேர்த்து உணவுடன் உண்ணலாம்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...