Apr 6, 2014

கா¢சலாங்கண்ணி

கா¢சலாங்கண்ணி

கா¢சலாங்கண்ணி என்னும் இந்தக் கீரை பாரத நாடெங்கும் பரந்து காணப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 6,000 அடி வரை இது தன்னிச்சையாக வளரக்கூடிய ஒரு வகைக் கீரையாகும்.

இமயமலைச் சா¢வுகளில் இந்தக் கீரை காணப்படுவதை பயி¡¢யல் அறிஞர்கள் கண்டிருக்கின்றனர். இந்தக் கீரையைக் கா¢சலாங்கண்ணி, கா¢சனாங்கண்ணி, கையார்ந்த கீரை, கா¢ப்பான், கா¢யசாலை, கா¢ச்சான், கா¢சாலை, கைவீசி, கா¢க்கை, கா¢க்கண்டு, கா¢ச்சால், பொற்றிழைக் கா¢ப்பான், பொற்பாவை, பொற்றிலைப் பாவை, பொற்கொடி, மஞ்சள் பாவை என்னும் வேறு பெயர்களில் தமிழ் மூலிகை நூல்கள் விவா¢க்கின்றன.

சங்க இலக்கியங்களில் ஒன்றாகிய மலை படுகடாம் கையாந்த கரை என்னும் இக்கீரையைப் பற்றி மிகச் சிறப்பாகப் பேசுகிறது.


கா¢சல் என்றால் தங்கம் என்று பொருள் உண்டு. இக்கீரை உடலைத் தங்கம் போல் ஆக்கும் என்ற காரணத்தினால்தான் இதனைப் பொற்கொடி என்றும் பண்டையோர் குறிப்பிட்டார்கள் போலும்.

இதனைக் கா¢சல் + ஆம் + காண் + நீ என சொற்களைப் பி¡¢த்துப் பொருள் காண்பார்கள். இவ்வாறு பி¡¢க்கின்ற பொழுது "உன் உடல் தங்கமாவதை நீ காண்பாயாக" என்று இக்கீரைதயே இதனை உண்பவர்களைச் சொல்வது போல் இதன் பெயர் அமைந்திருப்பதைக் காணலாம்.

கா¢சலாங்கண்ணியில் நான்கு வகைகள் உண்டு. நீலம், மஞ்சள், சிவப்பு, வெள்ளை எனப் பூக்கும் பூக்களின் நிறத்தைக் கொண்டு இதனை நான்கு வகைகளாகப் பகுப்பர்.

இவற்றில் வெள்ளை நிறமாகப் பூக்கும் செடி சாதாரணமாக எங்கும் கிடைக்கக் கூடியது. மஞ்சள் கா¢சலாங்கண்ணி கிடைப்பது அ¡¢யதாக உள்ளது.

நீலம் மற்றும் சிவப்பு நிறமுள்ள பூக்களைப் பூக்கும் கா¢சலாங்கண்ணிகள் கிடைப்பது அ¡¢தினும் அ¡¢தாக உள்ளது. கா¢சலாங்கண்ணியானது வளம் மிகுந்த மலைச் சாரல்களிலும், நதிகள், நீரோடைகளிலும் அ¡¢தாகக் காணக் கிடக் கின்றன. இது ஈரம் மிகுந்த பகுதிகளில் தானே வளரக்கூடியது. நெல் வயல்களிலும், வாய்க்கால் வரப்புகளிலும், ஏ¡¢க்கரைகளிலும் மற்றும் ஈரப் பிடிப்புள்ள இடங்களிலும் இது மிக அதிகமாகக் காணப்படும்.

கா¢சலாங்கண்ணி நேராகவோ, படர்ந்தோ வளரக்கூடிய ஒரு வகைச் செடியின் இனத்தைச் சார்ந்தது. தரையில் படர்ந்து அதிக கிளைவிடக் கூடியது. கிளைகள் செங்குத்தாக நிற்கும் தன்மை உடையன. கீழே படரும் கணுக் களில் வேர் விடக்கூடியது இக்கீரை.

இதன் இலைகள் மூன்று அங்குலம் வரையில் நீளமாகக் கூட வளரக் கூடியவை. இதன் பூக்கள் சிறியவைகளாகத் தேற்றமளிக்கும். பூவின் தலையானது கொத்துக் கொத்தாக இலையின் பக்கங்களிலோ அல்லது இலையின் நுனியிலிருந்தோ உண்டாகும்.

நான்கு வகை கா¢சலாங்கண்ணிகளிலும் மிகச் சிறந்ததாகக் கருதப்படுவது மஞ்சள் பூப்பூக்கும் கா¢சலாங்கண்ணியே ஆகும். இச்செடியின் கொழுந்திலுள்ள நுனியில் மஞ்சள் நிறமான பூத் தோன்றும்.

மற்ற வகைச் செடிகளைப் போல் அல்லாது மஞ்சள் பூப்பூக்கும் கா¢சலாங்கண்ணிச் ¦டியாக வளராமல் படர்ந்து வளரும். அவ்வாறு படரும் போது அருகம்புல் போன்று கணுவில் வேர்விட்டுப் படரும். இதன் இலைகள் மாதுளை இலை போன்று இருக்கும். ஆனால் மாதுளை இலையைவிட கனமாகவும், சொரசொரப்புடையதாகவும் இருக்கும், பசுமை நிறத்துடனும் இருக்கும்.

கொடி மெல்லிய சிவப்பு நிறமுடையது. பூக்கள் ஏறத்தாழ மஞ்சள் நிற சாமந்திப் பூப்போல் இருக்கும். பூவின் நடுவில் மகரந்தம் திட்டுப் போல் குவிந்திருக்கும். மலா¢ன் நிறம் தூய தங்க நிறத்தைக் கொண்டிருக்கும்.

மற்ற கா¢சலாங்கண்ணிகளைவிட பொற்கொடி என்றழைக்கப்படும் இந்த மஞ்சள் கா¢சலாங்கண்ணிக்குத்தான் மருத்துவப் பயன்கள் மிகுதி உள்ளது என்று பழைய தமிழ் ஏடுகள் பேசுகின்றன.

இந்தக் கீரை சமையலுக்கும் பயன்படுகிறது. இலையும், தண்டும் கறி செய்யவும், இலை சட்னி செய்யவும் பயன்படு கிறது. இலைகளும் கொழுந்தும் கீரையாகச் சமைக்கலாம். நம் நாட்டவர் இந்தக் கீரையை பருப்பு, நெய் சேர்த்துப் பொறியல், குழம்பு, கடையல் ஆகிய உணவுப் பதார்த்தமாகச் செய்து உண்பது வழக்கம்.

வெள்ளை மற்றும் மஞ்சள் கா¢சலாங்கண்ணிகள் இரண்டுமே உணவாக உண்ணும் தகுதி பெற்றவை.

வெள்ளைக் கா¢சலாங்கண்ணியில் 81 விழுக்காடு நீரும், 4.4 விழுக்காடு புரதச் சத்தும், 0.8 விழுக்காடு கொழுப்புச் சத்தும், 4.5 விழுக்காடு தாது உப்புகளும், 9.2 விழுக்காடு மாவுச் சத்துக்களும் இருக்கின்றன. இது 62 கலோ¡¢ சக்தியை அளிக்கின்றது. மஞ்சள் கா¢சலாங்கண்ணிக்கும், வெள்ளைக் கா¢சலாங்கண்ணிக்கும் உணவுச் சத்துகளைக் கொண்டிருப்பதில் வேறுபாடுகள் நிறைய இருக்கின்றன. வெள்ளைக் கா¢சலாங்கண்ணியில் 81.1 விழுக்காடு நீர் தான் இருக்கிறது. ஆனால் மஞ்சள் கா¢சலாங்கண்ணியில் 93.7 விழுக்காடு நீர் இருக்கிறது. மற்றும் புரதச் சத்தைப் பொறுத்த அளவில் மஞ்சள் கா¢சலாங்கண்ணியில் வெள்ளைக் கா¢சலாங்கண்ணியைவிட புரதச் சத்து குறைவாகவே இருக்கிறது.

மஞ்சள் கா¢சலாங்கண்ணியில் கொழுப்புச் சத்து, 0.2 விழுக்காடும், தாதுப்புக்கள் 1.4 விழுக்காடும், நார்ச்சத்து 0.4 விழுக்காடும், மாவுச் சத்துக்கள் 3.2 விழுக்காடும் இருக்கின்றன. வெப்பத்தைப் பொறுத்த அளவில் இது 1.9 கலோ¡¢ சக்தியைக் கொடுக்கிறது.

இவ்விரு கீரைகளிலும் அதிக உணவுச் சத்தைக் கொண்டிருப்பது வெள்ளைக் கா¢சலாங்கண்ணியே ஆகும்.

மிகப் பழங்காலத்திலிருந்தே கா¢சலாங்கண்ணிக் கீரை இந்திய மருத்துவத்தில் இடம் பெற்றிருக்கிறது. கா¢சலாங் கண்ணி கீரை ரத்தத்தை சுத்தம் செய்வதில் இணையற்றது. அத்துடன் கண் ஒளியைக் கூர்மையாக்குவதிலும் இந்தக் கீ¨ நிகரற்றது.

தசைகளைக் கடுமையாக விரைக்கச் செய்யும் தணுக் வாய்வு என்னும் கொடிய நோய்க்கு பயன்படுத்தும் மருந்தில் இது முக்கிய பொருளாகச் சேர்க்கப்படுகிறது.

இந்தக் கீரை உடலுக்கு உரம் ஊட்டவல்லது. மண்ணீரலில் ஏற்படும் வீக்கம் முதலியவற்றிற்கு இது நல்ல மருந்தாகும். அத்துடன் தோல் வியாதிகளுக்கு இது மருந்தாகப் பயன்படுகிறது. உடலில் ஏற்படும் வீக்கங்களுக்கு இந்தக் கீரையை ஒத்தடம் கொடுக்கலாம்.

இலையையும் தண்டையும் கொண்டு பல் துலக்கலாம். இவ்வாறு பல் துலக்குவதால் பல்லில் ஏற்படும் ஈறு வீக்கம், பல்வலி, எனாமல் தேய்தல் போன்ற குறைகள் நீங்கும்.

இதன் இலையை வேக வைப்பதால் உண்டாகும் ஆவி மூலவியாதிகளுக்குப் பிடிக்க மூலவியாதி தீரும்.

இந்தக் கீரையை உண்பதனாலும் இதனை மேலுக்குத் தேய்த்துக் கொள்வதாலும் உடலிலும் தலையிலுமுள்ள முடி நன்றாகக் கறுத்து வளரும். அவ்வாறு வளர்ந்த முடிகள் பளபளப்போடு மிளிரும் தன்மை உடையவை. அன்றியும் இக்கீரை உடலை பொன் நிறமாக்கும்.

இந்தக் கீரையின் சாறு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. இந்தச் சாற்றை குழந்தைகளுக்குத் தலையில் தேய்த்து குளிப்பூட்டுவதனால் செந்நிற முடி கருநிறமாக மாறுகிறது.

இக்கீரையின் இரண்டு சொட்டு சாற்றுடன் எட்டுச் சொட்டு தேனைக் கலந்து பிறந்த குழந்தைகளுக் கொடுக்கச் சளி, நீர்க்கோவை போன்றவைகள் குணமாகும். நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சப்பட்ட இந்த இலையின் சாற்றைத் தலைவலி முதலியவற்றிற்குத் தேய்க்கலாம். இவ்வாறு காய்ச்சப்பட்ட எண்ணெய் தலைமுடியைக் கருமையாக்குவதற்கும் முடி நிறைய வளர்வதற்கும் பயன்படுகிறது. இச்சாற்றை உடலில் வலியுற்ற பகுதிகளில் தடவ தோலினால் உட்கிரகிக்கப்பட்டு வலி நீங்குகிறது.

இந்தச் சாற்றுடன் நல்லெண்ணெயைக் கலந்து யானைக்கால் நோய்களுக்கு மேலே பூசப்பயன்படுத்துகின்றார்கள்.

இந்தச் சாற்றை ஈறுகளின் மீது தடவ பல்வலி நீங்கும். இருமலுக்கும் காய்ச்சலுக்கும் இந்த இலையின் சாற்றில் ஒரு தேக்கரண்டி அளவு கொடுக்க அவைகள் கட்டுப்படும்.

இந்த இலைச்சாறு ஆஸ்துமா வியாதிக்கும், வாதத்துக்கும் நல்ல மருந்தாகும். இது தேள்கடி மருந்தாகவும் பயன் படுகிறது. தேளகடிக்கு கடிவாயிலில் இந்த இலையின் சாற்றைப் பூச வலி கட்டுப்படுத்தப்படுகிறது.

இந்த இலையின் சாறு கால்நடைகளுக்கு ஏற்படும் கொப்புளங்களுக்கும், புண்களுக்கும் கிருமி நாசினியாகப் பயன்படுகிறது.

இச்செடியின் வேரும் ஒரு சிறந்த மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது. இச்செடியின் வோ¢லிருந்து எடுக்கப்படும் சாறு வாந்தி எடுக்கச் செய்யும் வாந்தி மருந்தாகப் பயன்படுகிறது. அத்துடன் பேதி மருந்தாகவும் பயன்படுகிறது.

கால்நடைகளுக்கு கால் இடுக்குகளிலும், கழுத்துப் பகுதிகளிலும் ஏற்படும் புண்களுக்கு இதன் வேரை மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.

கா¢சலாங்கண்ணிக் கீரையிலிருந்து எடுக்கப்படும் தைலம் முடியைக் கருமையாக்குவதோடு கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும் என்று மருத்துவர்கள் கருதுகிறார்கள். அன்றியும் இத்தைலம் கூந்தலை எளிதில் வளர்க்கக்கூடிய தன்மை பெற்றது.

உடலுக்குப் பச்சை குத்துவதற்கு இந்தக் கீரையைப் பயன்படுத்துகிறார்கள். உடலின் மேல்தோலின்மீது பச்சை குத்துவதினால் உண்டாகும் கருமை நிறைந்த பச்சை நிறத்தை இந்தக் கீரை, பச்சை குத்தும் போது உண்டாக்குகிறது.

இந்தக் கீரையினுள் உள்ள இரசாயனப் பொருட்கள் என்றும் அழியாத மையைக் கொடுக்கிறது. அதனால் கருஞ்சாயம் செய்வதற்கு இந்த இலை பயன்படுகிறது.

கா¢சலாங்கண்ணிக் கீரைகளில் மிகச் சிறந்ததாக மஞ்சள் பூப்பூக்கும் மஞ்சள் கா¢சலாங்கண்ணியையே தமிழக மருத்துவ நூல்கள் பேசுகின்றன.

மஞ்சள் கா¢சலாங்கண்ணிக் கீரையை உண்பதனால் கல்லீரம், மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளுக்கு நன்மை பயக்கிறது. இந்த உறுப்புகளில் தேங்கும் கழிவுகளை நீக்கிக் கெட்ட நீர்களை வெளியேற்றுகிறது. இக்கீரையை உண்பதனால் சுரப்பிகளைத் தூண்டி, பித்தநீர் மற்றும் உடலுக்குத் தேவையான நீர்கள் உற்பத்தியாவதற்கான ஆக்கத்தையும், ஊக்கத்தையும் உடலுக்குக் கொடுக்கிறது. அந்தந்த உறுப்புகளுக்குச் சக்தியையும் ஊட்டத்தையும் அளித்து உறுப்புகள் நன்கு இயங்க ஊக்குவிப்பதுடன் சிக்கலின்றி அவைகள் செயல்படுவதற்கு இக்கீரை உதவுகிறது.

கல்லீரல் மற்றும் மண்ணீரல் பழுதடையும்போதும், பித்தநீர் சா¢வர உற்பத்தியாகாதபோதும், இரத்தத்தின் இயற்கை நிறம் மாறி மஞ்சளாகிவிட்டபோதும் உண்டாகக்கூடிய காமாலை இரத்தமே குன்றி உடல் வெளுக்கும் சோகை, பித்த பாண்டு, நீரேற்றம், நீர்க்குழுவான், மகோதரம், குண்மம், வீங்கிப் பெருகும் ஊதல் காமாலை ஆகிய நோய்களுக்கும் இக்கீரை வியத்தகு மருந்தாகப் பயன்படுகிறது. குஷ்டரோகத்திற்கு இது மருந்தாகப் பயன்படுகிறது.

கண்ணொளி மங்கும்போது இந்த கீரை மருந்தாகப் பயன்படுகிறது.

உடலில் சப்த தாதுக்களை உரமாக்கி வலுவைத் தந்து, உயிர் அணுக்களைப் பெருக்கி தங்க நிறம் போன்ற சருமத்தை உண்டாக்கும் குணமுடையது.

இக்கீரையை உணவோடு சேர்த்து உண்பதனால் உடம்பில் தங்கிய கெட்ட நீர்கள் வெளியேறுகின்றன. உடல் வளம் பெறுகிறது. மலச்சிக்கல் நீங்கப்பெற்று உடல் நலம் பெறுகிறது.

உடல் கனத்தையும், பருமனையும், தொந்தியையும் கரைக்க விரும்புபவர்கள், நாள்தோறும் பகல் உணவில் 2 முதல் 4 வாரம் தொடர்ந்து இக்கீரையை உண்டுவர நல்ல பலன் கிடைக்கும்.

இக்கீரை சாற்றினால் செய்யப்படும் கண்மை, மிகச் சிறந்த கண்மையாகும். இந்தக் கண்மையைக் கண் இமைகளுக்குத் தீட்டிவர கண்கள் மிக்க ஒளி பெறும். கண்கள் கவர்ச்சியுடையனவாக விளங்கும்.

(கே. பாலசுப்பிரமணியன்)
( கே. கருப்பஞானி)

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...