Apr 6, 2014

பற்களின் பாதுகாப்பு

பற்களின் பாதுகாப்பு

- Ln. Dr. M.S. சந்திரகுப்தா, BDS., FCIP., DIM PGDHRM., PGDGC.,

பற்களுக்கு இடையில் சிக்கிக்கொள்ளும் உணவுகளை குண்டூசியால் குத்தி எடுக்கலாமா?

குண்டூசி, ஊசி போன்றவைகளால் குத்தி எடுக்கக் கூடாது. ஒரு நூல் கொண்டு இரண்டு பற்களுக்கிடையில் கொடுத்து எடுக்கலாம். குண்டூசி, குச்சி, ஊசி போன்றவற்றால் பல் இடுக்குகளைக் குத்தும்போது ஈறுகள் பாதிக்கப் படுவதோடு, நிறைய சந்துகள் உண்டாகி, கிருமித் தொற்றும் அதன் காரணமாக நோய்த் தொற்றுகள் வருவதற்கான வாய்ப்பும் அதிகா¢க்கின்றன.


பற்களில் ஏன் கூச்சம் வருகிறது? எனக்கு இரவில் பற்களைக் கடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் பற்கூச்சம் வருமா? மற்ற எந்த வகைகளில் பற்கூச்சம் வருகிறது?

பற்களை அறிந்தோ அல்லது அறியாமலோ கடிப்பதை பல் வெருவுதல் (Bruxism) என்கிறோம். பல் வெருவுதலால் பற்சிப்பி தேய்ந்து பல்லில் கூச்சம்
ஏற்படும்.

பற்கூச்சம் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. பற்சிப்பி தேய்வதுதான் எல்லாவற்றாலும் வரும் விளைவு. கா¢த்தூள், படிகாரம், செங்கற் பொடி கொண்டு பல் துலக்குதல், நகம் கடிப்பதால் பற்கள் தேய்தல், பற்களின் வளர்ச்சி நிலையில் தடை ஏற்பட்டு எனாமல் பாதிக்கப்பட்டுத் தேய்தல் (எனாமல் தேய்ந்துவிடுவதால் கறைகளும் படியும்).

பற்களின் உட்புறத்திலுள்ள இரத்தக் குழாய்கள் மற்றும் நரம்புகளில் அடிபடுதல், கிருமித் தாக்குதல், பல் சொத்தை ஆழமாதல் போன்றவற்றால் எனாமல் பாதிக்கப்படும்போது கிருமிகள் எளிதில் உள்ளிருக்கும் திசுக்களைத் தாக்குதல். இப்படி பல காரணங்களால் பற்கூச்சம் உண்டாகும்.


பற்கூச்சைத்ப் போக்க என்ன செய்வது? என்ன மாதி¡¢யான சிகிச்சைகள் இருக்கின்றன?

எனாமல் தேய்ந்திருந்தால் பற்களின் நிறத்தில் ரெசின் பொருட்களைப் பயன்படுத்தி எனாமலைப் பூசும் முறைகள் நடைமுறையில் உள்ளன. பாதிப்பின் அளவு மற்றும் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து சிகிச்சைகள் இருக்கும்.


உடலிலேயே மிக உறுதியான பகுதி எது?

கண்டிப்பாக பல்லின் எனாமல்தான் உடலின் உறுதியான பகுதி.


எனது பற்களின் மேற்புறத்தில் கறைகள் படிந்து அருவருப்பாக உள்ளது. என்னதான் தேய்த்துத் துலக்கினாலும் போவதில்லை. இவற்றை எப்படிப் போக்குவது?

பற்களில் தோன்றும் கறைகள் வெளியிலிருந்தால் மிகவும் சுலபமாகப் போக்கலாம். ப்ளீச் எனப்படும் வெளுப்பூட்டும் முறையில் சுத்தம் செய்து கறைகளை நீக்கலாம்.

உங்கள் பற்களை அச்செடுத்து அதற்கு ஏற்ப உறை செய்து அதில் ப்ளீச் செய்வதற்கு பயன்படும் மருந்தைத் தடவி, பற்களில் பொருத்திவிட்டால் சில நாட்களிலேயே கறைகள் நீங்கிவிடும். ரூட்கெனால் எனப்படும் வேர்ச்சிகிச்சை செய்த பற்களுக்கும் ப்ளீச் முறையில் பற்கறைகளை நீக்கலாம்.


வெற்றிலை பாக்கு போடுவதால் ஈறு பாதிப்பு உண்டாகுமா?

கண்டிப்பாக வெற்றிலை, பாக்கு போடுவதால் ஈறு பாதிப்பு உண்டாகும். இது தவிர, புகைத்தல், மருந்துகள், வாயை சுத்தம் செய்யும் மருந்துகள், ஆஸ்பி¡¢ன், அம்மோனியா, குளோ¡¢ன், வாய்ப்புற்று நோய்க்காக அளிக்கப்படும் ரேடியக் கதிர்வீச்சு ஆகியவற்றாலும் ஈறுகள் பாதிக்கப்படும். இதை உடனடியாகக் கவனித்து சிகிச்சையளிக்காவிட்டால் ஈறுகளில் இரத்த நாளங்கள் வி¡¢வடைந்து இரத்த ஒழுக்கு ஏற்படும். நாட்பட்ட நிலையில் இரத்த ஓட்டம் தடைப்பட்டு ஈறு நீலம் கலந்த சிவப்பாகவும், தொட்டால் வலிக்கும் தன்மை கொண்டதாகவும் மாறும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...