Apr 6, 2014

ஜவகர்லால் நேரு

ஜவகர்லால் நேரு



குழந்தைப் பருவம்

ஜவகர்லால் தனிமையில் வளர்ந்தான். அவனுடைய உறவினர்களில் குறைந்த வயதுடையவர்கள் கூட அவனைக் காட்டிலும் அதிக வயதானவர்களாக இருந்தார்கள். அவர்கள் அன்போடும் பாசத்தோடும் நடந்து கொண்ட போதிலும் அவர்களோடிருப்பதை ஜவகர் விரும்பவில்லை. மற்ற எல்லாவற்றையும் காட்டிலும் தகப்பனாரோடிருப்பதைத் சிறுவனான ஜவகர் மிக விரும்பினான். ஆனால் அத்தகைய சந்தர்ப்பங்கள் குறைவாக இருந்தது துரதிர்ஷ்டமே அவனுடைய தகப்பனார் புதிதாக ஏதவாது விளையாட்டைக் கண்டுபிடிப்பார் என்பது நிச்சயம்.


உதாரணமாக, அவர்கள் பொ¢ய பல வர்ணப் பட்டத்தைப் பறக்க விடுவார்கள். அதன் வால் மிகவும் நீளமாக இருக்கும். அந்தப் பட்டம் வானத்தில் பறந்து சென்று அங்கே மிதக்கும் அல்லது ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கம் தாவும். கட்டுக்கதைகளில் சொல்லப்படும் அதிசயமான பறவையைப் போல அது சூ¡¢ய வெளிச்சத்தில் பிரகாசித்து விளையாடும். மோதிலால் பட்டத்தின் துடிக்கும் கயிற்றை ஜவகா¢டம் பிடித்துக் கொள் என்று கொடுப்பார். பூமியிலிருந்து வானத்தை நோக்கி இழுக்கப்படுவது போல, பட்டத்தோடு வானத்தில் பறப்பதைப் போல அந்தச் சிறுவனுக்குத் தோன்றும். கட்டுக்கடங்காத உற்சாகமும் பறந்து செல்ல முடியுமென்ற ஆனந்தமும் அந்தச் சிறுவனைப் பரவசப் படுத்தும்.

ஆனால் ஜவகா¢ன் குழந்தைப் பருவத்தில் குழந்தைகளுக்கு¡¢ய வேடிக்கைகளும் விளையாட்டுகளும் இதைத் தவிர அநேகமாக இல்லாதிருந்தன. அவன் ஆரம்பத்திலிருந்தே தனிமையில் சிந்திக்க, பொ¢யவர்களின் செயல்களை எடைபோட்டுப் பார்க்க, அவர்களுடைய உரையாடலின் அர்த்தத்தை ஊகிக்கக் கற்றுக்கொண்டான்.

அவனுடைய வாழ்க்கை முழுவதுமே தன் தகப்பனார் ஏற்படுத்திய ஒரு சடங்கை நினைவு வைத்திருந்தான். அது வருடந்தோறும் நடைபெற்றது. ஏராளமானவர்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள் அதில் ஜவகர்லால் முக்கியமான பாத்திரத்தை வகித்தான்.

ஜவகர்லால் (ஜவகர்கலால் என்ற சொல்லுக்கு அழகிய ஆபரணம் என்பது பொருள்) 1889 நவம்பர் 14ந் தேதியன்று அலகாபாதில் பிறந்தான். வருடந்தோறும் அந்த தினத்தின் அதிகாலைப் பொழுதில் அந்தச் சிறுவனைப் பொ¢ய தராசில் உட்காரவைத்து நிறுப்பது வழக்கம். தராசின் மறுதட்டில் எடைக் கற்களுக்குப் பதிலாக கோதுமை அல்லது அ¡¢சிமூட்டைகளை வைப்பார்கள். நிறுக்கும் சடங்கு முடிவடைந்ததும் அவற்றை ஏழைகளுக்குக் கொடுப்பார்கள். இப்படிப் பல தடவை ஜவகர்லாலை நிறுப்பார்கள். எடையிடப் பட்ட கோதுமை, அ¡¢சி, இனிப்பு பண்டங்கள் மற்றும் உடைகளை அங்கே நின்று கொண்டிருக்கும் கூட்டத்தினருக்குக் கொடுக்கும் பொழுது ஜவகர்லால் மிகவும் மகிழ்ச்சியடைவான். நவம்பர் 14ந் தேதியைப் பலரும் நினைவில் வைத்திருந்தார்கள். அதற்கு முந்திய நாள் மாலையிலேயே பலரும் குடும்பத்தோடு மோதிலால் நேருவின் மாளிகை வாயிலுக்கு வந்து விடுவார்கள். அதிகாலைப் பொழுதில் கதவுகள் திறக்கப்படுகின்ற வரை அங்கேயே காத்துக் கொண்டிருப்பார்கள். பிறந்த நாள் விழாச் சடங்குகளில் பங்கு கொள்பவர்கள் ஜவகர்லாலின் கால்களில் மலர்களை வைப்பார்கள். பிறகு பா¢சுப் பொருள்களைப் பெற்றுக் கொண்டு சிறுவனின் தகப்பனாரை வணங்கி மா¢யாதை செலுத்துவார்கள். அங்கே வந்திருக்கும் குழந்தைகள் இனிப்பும் பண்டங்களைச் சாப்பிடும்பொழுது ஒரு "இளவரசனைப்" போல அமர்ந்திருக்கும் ஜவகர்லாலை ஆச்சா¢யத்தோடு பார்ப்பார்கள். அந்தச் சிறுவர், சிறுமியர்களின் பரட்டைத் தலைகளையும் அவரகளணிந்திருக்கும் நைந்து போன உடைகளால் மறைக்க முடியாத மெலிந்த உடல்களையும் ஜவகர்லால் பார்பான். உணவு அல்லது உடைகளை அந்தக குழந்தைகளோடு பகிர்ந்து கொள்வது அவனுக்கு விசேஷமான மகிழ்ச்சியைக் கொடுக்கும். ஆனால் வருடத்திற்கு ஒரு தடவை தானே இந்தச் சடங்கு நடைபெறுகிறது. அது ஏன்? தன் பிறந்த நாளை இன்னும் அடிக்கடி கொண்டாட முடியாதா என்று அவன் தகக்பனா¡¢டம் கேட்ட பொழுது அவர் சி¡¢த்தார். அவசரப்படாதே. ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் அதிகமான பிறந்த நாட்கள் வரப்போவதில்லை என்று அவர் பதிலளித்தார்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...