Apr 6, 2014

நோய் நமக்கு நண்பன் பகைவன் அல்ல

நோய் நமக்கு நண்பன் பகைவன் அல்ல
"அஞ்சி அஞ்சித் சாவார் - இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே"
என்று அவர் காலத்தில் இந்திய மக்களின் நிலைமையை நினைத்து வருந்திப் பாடியுள்ளார் மகாகவி பாரதியார் இந்தியா சுதந்திரம் பெற்று நாற்பது ஆண்டுகளாகியும் இன்னும் பெரும்பாலும் இதே நிலைமை தான். "அஞ்சுவது அஞ்சாமை பேதைமை" உண்மைதான். எனினும் நோய்நொடிகளைக் கண்டு ஏன் அஞ்ச வேண்டும்? "எண்ணிலா நோயுடையார் - இவர் எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார். கண்ணிலாக் குழந்தைகள் போல் பிறர் காட்டிய வழியிற் சென்ற மாட்டிக் கொள்வார்." ஆரோக்கிய வாழ்வைப் பொறுத்த வரை, படித்துப் பட்டம் பெற்றவர் கூட இன்னும் கண்ணிலாக் குழந்தைகள் போலத்தான் நடந்து கொள்கின்றனர். பயத்தால், கண்டதையெல்லாம் செய்து மேலும் மேலும் துன்பத்தை விலைக்கு வாங்குகின்றனர். பெரும்பாலும் பயம் தான் காரணம் நோயைப் பெரும் பகைவனாகக் கருதி அஞ்சுதல் பேதமையிலும் பேதமை நோய், கிருமிகளால் வருகின்றது என்ற எண்ணம்
ஆழமாகப் பதிந்துள்ளது. அந்தக் கிருமிகளைக் பெரும் பகைவர்களெனக் கருதி அவைகளைக் கொல்வதற்காக நச்சுப் பொருட்களை உண்டு மேலும் சிக்கலாக்குகின்றனர். கிருமிகள் சாகலாம்; சாகின்றன ஆனால் நச்சு மருந்துகள் உடலில் தங்கி வேறு பலவிதப் பயங்கர வியாதிகளை உண்டு பண்ணுவது இவர்களுக்கு விளங்குவதில்லை. கிருமிகள் நோயால் வளருகின்றன. இந்த உண்மை அறிவு வந்தால் இவர்கள் நோயின் மூலகாரணத்தைக் கண்டு அதனை நீக்குவர். அப்போது நோயும் போகும். கிருமிகளும் குறையும்.

பொருந்தா உணவு, அமித உணவு, தவறான பழக்க வழக்கங்கள், விபா£தமான எண்ணங்கள் முதலியவற்றால் உடலில் நச்சுப் பொருள் உண்டாகிறது. அவ்வப்போது மலநீக்கம் சா¢யாக நடந்தால் துன்பமில்லை ஏதாவது காரணத்தால் இதில் தயக்கம் ஏற்பட்டுக் காலந் தாழ்ந்தால் உடம்பில் கிருமிகள் பல்கி உஷ்ணமோ, வலியோ வீச்சுமோ ஏற்படுகின்றது. இது உடம்பினுள் உறையும் பிராணசக்தியின் காலந்தாழ்த்திய முயற்சி. அதற்கு உதவியாகச் சூ¡¢யக்குளியல், தொட்டிக் குளியல், எனிமா முதலியன மூலம் மலத்தை வெளியேற்றினால் நோய் தணியும். அதற்குமாறாக மருந்துகளை உட்கொள்ளுவதால் நோய் உருமாறுகின்றதே ஒழிய ஆரோக்கிய நிலை திரும்புவதில்லை. இதனாலேயே தான் இயற்கை மருத்துவர்கள் நோயினை நண்பனாகக் கருத வேண்டும் என்கின்றனர்.

துன்பம் தரும் ஒன்றை எப்படி நண்பனாகக் கருதுவது? இவ்வினர் இயற்கையாக எழும் ஒன்று. இதை மேலும் ஆராய்தல் பயன்தரும். துன்பம் தருபவற்றுள் பல வகையுள சில துன்பத்திற்காகவே துன்பம் தருகின்றன. சில துன்பப்படும் ஒன்றில் நலன் கருதித் துன்பம் தருகின்றன. துன்பம்தரும் தனக்கு யாதொரு லாபமும் இல்லை. இந்த மூன்றாம் வகையைச் சேர்ந்தே நோய் தரும் துன்பம். நோய் துன்பம் தருவது நோயாளி துன்பம் அடைவான். நோயாளி படும் துன்பத்தால் நோய்க்கு யாது பயன்? நோய் தான் அளிக்கும் துன்பத்தின் இருக்கினறதென்பதைக் காட்டுகின்றது இதுவழியில் இருக்கும் பள்ளத்தை, இடையூறைக் காட்டும் சிவப்பு விளக்குப் போன்றது. இதை அறிந்து மேல் நடவடிக்கை எடுத்தால் நோயாளி பெரும் நன்மையடைவான். ஆதலால் தான் நோயாளி நோயினை நண்பனாகக் கருத வேண்டுமென்கின்றனர்.
"நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தல் பொருட்டு"
என்பது பொய்யாமொழி நாவடக்கமின்றிக் கண்டதைக் கண்ட கண்ட நேரத்தில் சாப்பிட்டுக் காலா காலத்தில் மலநீக்கம் செய்யாது இயற்கைக்கு மாறான வாழ்க்கை வாழும் ஒருவனை இடித்துக்கூறி நல்வழிப்படுத்த வருவது நோய். அதனை நண்பனாகக் கருதி உபசா¢யாமல் பகைவனாகக் கருதி செயற்பட்டால் தனக்குத்தான் கேடு மிகுகின்றது. நண்பனாகக் கருதி வரவேற்று இயல்பறிந்து போற்றி உபசா¢த்தால் காலா காலத்தில் நோய் போய் விடும். நண்பர்கள் என்றால் காலக் கெடுவின்றிக் கூடிக் குலவ வேண்டுமென்பதில்லை. அவசியமான அளவுக்குத்தான் தொடர்பு இருக்க வேண்டும். நட்பு எது எப்படி இருக்க வேண்டும் என்பதைக் காந்தியடிகள் தமது வாழ்க்கை அனுபவத்தில் கண்டதைக் கூறுவதைக் கவனிக்க வேண்டும். "சீர்த்திருத்த முற்படுகிறவர், யாரைச் சீர்த்திருத்த விரும்புகிறாரோ அவா¢டம் நெருங்கிய சகவாசம் வைத்துக் கொள்ளக் கூடாது... தனிப்பட்டு அன்னியோன்னியமாக நெருங்கிப் பழகுவதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதே என் அபிப்ராயம்."

நோய் என்பது, பிராண சக்தி தனது வேலையைச் சிறிது காலந்தாழ்த்திச் செய்யும் போது ஏற்படுகின்ற துன்பம் என்பது நமக்குத்தொ¢யும். இத்துன்பத்தின் காரணம் என்ன என்பதை ஆராய்ந்து அந்த நோயைப் போக்க வேண்டிய வழியையும் ஆராய்ந்து நோயுற்ற உடலுக்குப் பொருந்தும் படியான சிகிச்சைகளைச் செய்ய வேண்டுமென்பது திருவள்ளுவர் திருவாக்கு.
"நோய்நாடி, நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி, வாய்ப்பச் செயல்"
அவ்வப்போது வெளியே தள்ளப்படாமல் உடலினுள்ளேயே தங்கியிருக்கும் நீர்ப்பகுதி அனைத்தும் உடலினுள் உறிஞ்சப்படுகின்றது. இந்த நச்சு நீர் இரத்தத்தில் கலந்து பரவுகின்றது. இதனால் ஊட்டி வளர்க்கப் பெறும் கல்லீரல், சிறுநீரகம், கணையம், மண்ணீரல், இதயம் போன்ற உறுப்புக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் தான் நீடித்த மலச்சிக்கல் உள்ளவர்களுக்குத் தலைவலி, தூக்கமின்மை, நீ¡¢ழிவு, இர்த்தக் கொதிப்பு, கீல்வாதம், காசம், மஞ்சள்காமாலை போன்ற வியாதிகள் எல்லாம் வருகின்றன. இவற்றைக் கண்டு பயந்து டாக்டர்களிடம் சென்றால் அவர்கள் மூலக்காரணத்தை கண்டுபிடிக்காமல், நோயின் அறிகுறிகளுக்குப் பா¢காரமாக மாத்திரைகளையோ, ஊசி மருந்துகளையோ கொடுக்கின்றனர். இந்த நச்சு மருந்துகளால் தற்காலிகப் பா¢காரம் கிடைத்தாலும் நாளடைவில் பெரும் தீங்கே விளைகின்றது.

எனவே நோயைக் கண்டு அஞ்சாது அதனை நண்பனாகக் கருதி மூலகாரணத்தைக் கண்டு பிடிக்க வேண்டும். வெளியேற முயலும் நச்சுப் பொருள்கள் வெளியேறத் தக்க பா¢காரம் செய்தல் வேண்டும். ஆசனவாய் மூலமாகவோ, சிறுநீர் மூலமாகவோ வியர்வையாகவோ, சளியாகவோ, மூக்கின் வழியாகக் கா¢யமில வாயுவாகவோ மலங்களை வெளியேற்றுவதற்கான குளியல்கள் ஒத்தடம், மண்பூச்சு, உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி முதலியவைகளைக் கையாள வேண்டும். இத்தகைய செலவற்ற எளிய இயற்கையை பயன்படுத்தும் முறைகளால் நிரந்தரமான பா¢காரம் கிடைக்கும்.

நோய் தற்காலிகமானது மனிதன் தானாக வருவித்துக் கொள்வது தவறான பழக்க வழக்கங்களால் ஏற்படுவது ஆழ்ந்த தன்னாராய்ச்சியாலும் கூர்ந்து கவனிப்பதாலும் தனது தவற்றைக் கண்டு கொள்ள முடியும் உடலியல் அறிவின் துணைகொண்டு தவறுகளைத் திருத்தலாம். இதன்மூலம் நீடித்த ஆரோக்கியம் கைவரும். இப்படி தனக்குத் தானே மருத்துவம் இயற்கை வழிநின்று செய்வதன் மூலம் இன்பம் பெருகும். நோய்க்கு அஞ்ச வேண்டாம்,அது நமக்கு நண்பன்.

சமீபத்தில் நாங்கள் சிலர் சேர்ந்து ஜீப்பில் பிராயணம் செய்து கொண்டிருந்தோம். எங்களில் ஒருவருக்கு அடிக்கடி தும்மல் வந்து கொண்டே இருந்தது. உங்களுடைய உடம்பில் உயிராற்றல் இருக்கிறது என்பதற்கு இது அறிகுறி உடம்பிற்கு வேண்டாத பொருள்கள் உ¡¢ய காலத்தில் வெளியேற்றப்படாமல் தேங்கி நின்றதால் சளியாக மாறியுள்ளது. அதனை வெளியேற்ற பிராணசக்தியானது முயலுகிறது. அதன் அறிகுறிதான் தும்மல் தும்மலின் மூலம் சளி முழுவம் வெளியேற முடியாததால் மறுபடியும் உங்களுக்குத் தும்மல் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அபாயம் ஒன்றுமில்லை. ஒருவேளைச் சாப்பாட்டை விட்டு விடுங்கள். பிராணனின் ஆற்றல் அதிகா¢க்கும் அப்போது சுபம் ஏதாவது ஒரு வழியில் வெளியே வந்து விடும். தற்காலத் துன்பத்தை நீக்குவதற்கு முயன்று ஏதாவது மருந்தைச் சாப்பிட்டு விடக்கூடாது மேல்நாட்டு மருத்துவர்கள் சளியை உண்டுபண்ணும் கிருமியைக் கண்டுபிடிக்க இன்னும் முயன்று கொண்டிருக்கிறார்கள். கண்டுபிடிக்கும் வரை உடனடியாகத் துன்பம் தவிர்க்கும் ஏதாவது ஒரு மருந்தைக் கொடுப்பார்கள். அதனால் நோய் அமுக்கி வைக்கப் படுமேயொழிய தீராது. நாளடைவில் சளியானது மூளையின் மூக்கினை எலும்புப் புழையழற்சிக் கோளாறு (Sinusitic) ஆகமாறும். இதனையும் இயற்கை வழியில் போக்காது மருந்துக்கு ஆளானால் சீரழிக்கும் நோயாகவும் இது மாறலாம் உபவாசம் இருப்பதன் மூலம் ஆகாச தத்துவத்திற்கு உடலுள் பெருமளவு இடமளித்து உயிர் ஆற்றலைப் (பிராணசக்தியை) பெருக்கிக் கொண்டால் உண்டதை சீரணிக்கவும் சீரணமான பின் எஞ்சியதைக் காலா காலத்தில் வெளித் தள்ளவும் உதவும்.

எனது நண்பருக்கு என்னுடைய வைத்திய அறிவியல் போதிய நம்பிக்கை இருப்பதற்க நியாயமில்லை. எனவே அவர் என்னுடைய நோய் நண்பன் கொள்கைக்குப் போதிய மதிப்புக் கொடுத்ததாகத் தொ¢யவில்லை. இருந்தாலும் சாப்பாட்டில் கட்டுப்பாடாக இருந்தார். இரவில் தானிய உணவைத் தவிர்த்து பழ உணவு எடுத்துக் கொண்டார். அதிலும் கட்டுப்பாடாக இருந்து ஓ¡¢ரு பழங்கள் தான் சாப்பிட்டார். அன்று இரவு நல்ல தூக்கம். எனவே மறு நாள் காலையில் அவருக்குப் போதிய சுகம் கிடைத்தது சளி அவரை அதற்குமேல் தொந்தரவு செய்யவில்லை.

மறுநாள் வேறொரு நண்பருக்குத் தும்மல். அவர் அன்று வழக்கம் போல் சாப்பிட்டார். "Stuff the cold and starve the fever" என்னும் கோட்பாட்டினை நினைவுறுத்திக் கொண்டார். இது எப்படியோ உலக வழக்கில் வந்துவிட்டது. சளிக்குப் பா¢காரம் உபவாசம் என்பதை விஞ்ஞானிகள் பலர் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் போதிய வசதியுள்ள சாதாரண மக்கள் நேரம் தவறாது சாப்பிட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள். உடலில் அழுக்கு சேர்ந்து சிறிது காலம் தாழ்த்தி பிராணசக்தியைக் கொண்டு அதனை வெளியேற்றுகின்ற போது துன்பம் ஏற்படுகிறது தும்மல் சாதாரணமாக வரப்போகிற காய்ச்சலுக்கு அறிகுறியாக இருக்கலாம். தும்மலுக்கு மருந்து ஏதும் சாப்பிடாமல் விட்டுவிட்டால் தலைவலி, தூக்கமின்மை, வயிற்றுக் கோளாறுகள் முதலியன வரலாம். காய்ச்சல் வந்துவிட்டால் உடம்பினுள் இருக்கும் வேண்டாப் பொருட்கள் உடம்பு முழுவதையும் போர்த்தியிருக்கும் தோல் வழியாக வெளி வந்துவிடும். இந்தக் காய்ச்சல் இரண்டு மூன்று நாட்கள் இருக்கும். இதனை ஹோ·பீவர் என்று சொல்கிறார்கள். இதற்கும் வைக்கோலுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. பொதுவாக இக்காய்ச்சல் மரங்களும், செடிகளும் பூத்துக்குலுங்கும் காலத்தில் வருகிறது. அச்சமயங்களில் காற்றில் பூக்களிலுள்ள மகரந்தத்தூள் பரவலாகக் கலந்திருப்பதால் இதைச் சுவாசிக்கும் சிலருக்கு அழற்சியினால் காய்ச்சல் வருகிறது என்று நினைக்கிறார்கள். தும்மல் வரும் சமயம் மூக்கில் ஒருவித அ¡¢ப்பு இருக்கும். அதைப்போக்க எபி டிரைன் சல்பேட் மூக்குத்துணி (Nose drops) சாட்டு மருந்து போட்டு தற்காலிகக் குணம் பெறுகிறார்கள். ஆனால் அழுக்குகள் வெளிவருவதற்கு அவை உதவமாட்டா இதற்கு சிறந்த மருத்துவம் உபவாசம்தான். காய்ச்சல் காலமாகிய மூன்று நாட்களும் முழுஉபவாசம் இருக்கமுடியாதவர்கள் இரண்டு வேலை புனர்பாகக் கஞ்சியை சாப்பிட்டுக் கொண்டிருந்தால் காய்ச்சலும் நின்று விடும் உடம்பிலுள்ள அழுக்கும் குறைந்து தும்மலுக்கு நிரந்தரப் பா¢காரம் காணலாம்.

தும்மல் என்பது அறிகுறிதான் உடம்பிலுள்ள அழுக்கை வெளியேற்ற பிராணசக்திக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் மேலும் உணவு உட்கொண்டு பிராண சக்தியைச் சொ¢மான வேலையில் ஈடுபடுத்தினால் நோய் அதிகா¢க்குமேயொழிய குறையாது. இந்த உண்மையைத்தான் 'நோய் நமக்கு நண்பன்' அது நாற்சந்தியிலுள்ள கைகாட்டி மரம் போல் நமக்கு வழிகாட்டி உதவுகிறது என்று இயற்கை வைத்தியர்கள் கூறுகிறார்கள். இது நோயைப்பற்றிய நல்ல ஒரு மனப்பான்மை இதனைப் பு¡¢ந்து கொள்ளாது நோயைக் கண்டு பயப்படுகிறவர்கள் எல்லையற்ற துன்பத்திற்கு ஆளாகிறார்கள்.
 

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...