Oct 13, 2012


ரஷ்யா: எண்ணை கிணறு கடலில் மூழ்கி 53 பேர் பலி
ரஷ்யாவில் எண்ணை கிணறு கடலில் மூழ்கி 53 பேர் பலியாகி உள்ளனர்.

ரஷ்யாவில் வடமேற்கு பகுதியில் முர்மானஸ் மாகாணத்தில் ஒகாட்ஸ்க் கடல் உள்ளது.இங்கு கொல்ஸ்கயா என்ற இடத்தில் கடலுக்குள் எண்ணை கிணறு உள்ளது.

இந்த எண்ணை துரப்பன பணியில் அதில் 67 பேர் பணிபுரிந்தனர். அவர்களில் 53 பேர் நிபுணர்கள், 14 பேர் தொழிலாளர்கள்.வழக்கம் போல் இவர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்த நிலையில் அப்பகுதியில் கடும் புயல் வீசியதில், எண்ணெய் கிணற்றின் மேடை கடலுக்குள் விழுந்தது. இதில் பணியில் இருந்த 67 பேரும் கடலில் மூழ்கினர். அவர்களில் 14 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர்.இவர்கள் தவிர 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 49 பேரை காணவில்லை.

அவர்கள் அனைவரும் கடலில் மூழ்கி இறந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் உத்தரவிட்டுள்ளார்

600 அடி கிணற்றில் விழுந்த குழ‌ந்தை மீ‌‌ண்ட அ‌திசய‌ம்!



கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே 600 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை குணா சுமா‌ர் நா‌ன்கரை ம‌ணி நேர‌ம் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்ட ச‌ம்பவ‌ம் பெ‌ற்றோ‌ர் ம‌ட்டு‌மி‌ன்‌றி அ‌ந்த மாவ‌ட்ட ம‌க்களை ச‌ந்தோச‌த்‌தி‌ல் ஆ‌ழ்‌த்‌தியு‌ள்ளது.
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மந்தையூர் கிராமத்தை சேர்ந்த ஆனந்தன் - பத்மா த‌ம்ப‌தி‌‌க்கு பூஜா என்ற மூ‌ன்றரை வயது பெண் குழந்தையும், குணா என்ற இர‌ண்டரை வயது ஆண் குழந்தையும் உள்ளனர்.
ஆன‌ந்தனு‌க்கு சொந்தமான நிலத்தில் 600 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை

பூமியை விட பெரிய வைரங்கள் நிறைந்த நட்சத்திரம் கண்டுபிடிப்பு

October 13, 2012
வானில் ஏராளமான நட்சத்திரக் கூட்டங்கள் உள்ளன. அவை இரவில் வைரம் போல் ஜொலிப்பதை காணலாம். இந்த நட்சத்திரங்கள் எல்லாம் கால்பந்து போன்ற சிறிய வடிவிலானவை. ஆனால் சமீபத்தில் அமெரிக்க பிரான்ஸ் நாடுகளை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பூமியின் அளவை விட பெரிதான வைரங்கள் நிறைந்த புதிய நட்சத்திர கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர்.
மற்ற நட்சத்திரங்கள் தண்ணீர், கிரானைட் கொண்ட கலவைகளாகவும், கிரானைட் கலவைகளாகவும், இரும்பு, தாதுக்கள் கொண்டதாகவும் உள்ளன. ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நட்சத்திரத்தில் கிராபைட்

Oct 12, 2012

நைஜர்: 91 பேரை பலிகொண்டது வெள்ளம்


நைஜர்: 91 பேரை பலிகொண்டது வெள்ளம்நியாமி,அக்.13-


மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் பெரும்பாலான பகுதிகளில் பெருகியுள்ள வெள்ளத்தால் 91 பேர் பலியானதாக அந்நாட்டின் அமைச்சரவை இயக்குனர் அகாலி அப்தோல்காடர் தெரிவித்தார். மேலும், வெள்ளம் காரணமாக அங்கு பெரும் பொருட்சேதம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

டில்லாபெரி, டோசோ, நியாமி உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், வெள்ளம் காரணமாக நெற்பயிர்கள், பள்ளிக்கூடங்கள், நீர் நிலைகள், சாலைகள், பாலங்கள், அணைகள் உள்ளிட்ட அனைத்தும் சேதமடைந்துள்ளதாகவும் அப்தோல்காடர் மேலும் கூறினார்.

அங்குள்ள நைஜர் ஆற்றுப்பள்ளத்தாக்கில் 12 நீர்ப்பாசனத்திட்டங்களின் கீழ் விவசாயம் செய்யப்பட்டு வரும் 3,050 ஹெக்டேர் விவசாய நிலமும் ஆற்றுவெள்ளத்தால் சேதம் அடைந்துள்ளன.

பல நோய்களுக்கு விரைவில் மருந்து: நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சென்னையில் பேட்டி

சென்னை,அக்.13-
 
பல நோய்களுக்கு விரைவில் மருந்து: நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சென்னையில் பேட்டிபிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவர் ஜூல்ஸ் ஏ.ஹாப்மன். இவர் அங்கு உள்ள ஸ்ட்ராபர்க் பல்கலைக்கழகத்தில் படித்து பின்னர் ஜெர்மனியில் உயர் படிப்பு படித்து மீண்டும் தான்படித்த அதே பல்கலைக்கழகத்தில் மாலிக்குலர் செல் பயாலஜி துறையில் இயக்குனராக பணி புரிந்து வருகிறார். அவர் பழ ஈயில் புரோட்டீனை எடுத்து ஆராய்ச்சி செய்தார். அதன் மூலம் மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துவதற்கான தொடக்க நிலையை கண்டுபிடித்துள்ளார். இதற்காக அவருக்கு கடந்த வருடம் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
 
அவர் இந்தியாவில் நேரு பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம்

ஜனாதிபதி போட்டியில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை விட ரிபப்ளிக்கன் வேட்பாளர் முன்னிலை

ஜனாதிபதி போட்டியில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை விட ரிபப்ளிக்கன் வேட்பாளர் முன்னிலை
அமெரிக்காவில் வரும் நவம்பர் 6 ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி வேட்பாளார்களாக ஆளும் ஜனநாயகக் கட்சியின் அதிபர் பராக் ஓபாமாவும், எதிர்கட்சியான ரிபப்ளிக்கன் கட்சிச் சார்பாக மிட் ரோம்னியும் களத்தில் இருக்கின்றனர்.

அவர்கள் இருவரின் நேரிடையான தொலைக்காட்சி விவாதம் அங்கு நடத்தப்பட்டு வருகிறது. விவாத அடிப்படையில்  இணையதளம் மூலம் நடத்தப்படும் வாக்கெடுப்பில், மிட் ரோம்னிக்கு 47% வாக்குகளும், அதிபர் பராக் ஓபாமாவிற்கு 44% வாக்குகளும் கிடைத்துள்ளதாக அந்த கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. இதில் ரிபப்ளிக்கன் கட்சியின் வேட்பாளாரான மிட் ரோம்னியே மூன்று புள்ளிகள் கூடுதலாகப் பெற்று முன்னிலையில் உள்ளார். இது வரும் தேர்தலில் பிரதிபலிக்கும் என்று சொல்லப்படுகிறது.

வங்கதேசத்தில் கடும் புயல்: 20 பேர் பலி



தெற்காசிய நாடுகள் புயல், மழை போன்ற இயற்கை சீற்றங்களால் பெரிதும் பாதிப்படைந்து வருகிறது.தெற்காசிய நாடுகளில் ஒன்றான வங்கதேசத்தில் கடந்த 2 தினங்களாக புயல் காற்றுடன் மழை கொட்டியது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
நோகாலி மற்றும் போலோ மாவட்டங்கள் புயலால் பெரிதும் சேதமடைந்தன. இந்த புயல் காரணமாக வங்கதேசத்தில்

அமைதி, ஜனநாயகத்தை வளர்த்ததற்காக ஐரோப்பிய யூனியனுக்கு நோபல் பரிசு



ஆஸ்லோ : ஐரோப்பிய நாடுகளில்  அமைதி, ஜனநாயகத்தை மேம்படுத்தியதற்காக ஐரோப்பிய யூனியனுக்கு இந்த ஆண்டுக்கான அமைதி நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், இயற்பியல், வேதியல், இலக்கியம் ஆகிய துறைகளில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்படும் என்பது குறித்து உலக அளவில் பெரும் விவாதங்கள் நடைபெற்று வந்தன. அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன், மைக்ரோப்சாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் ஆகியோரின் பெயர்களும் இதில்

தாஜ் மஹால் பழைய சிவன் கோவில், அதிர்ச்சி உண்மை அம்பலம்

tajmahal old hindu shiva templeதாஜ் மஹால் காதல் சின்னம் அல்ல – பழைய சிவன் கோவில், அதிர்ச்சி உண்மை அம்பலம்
காதல் மனைவி மும்தாஜ் நினைவாக மாமன்னர் ஷாஜகானால் கட்டப்பட்ட நினைவுச் சமாதிதான் தாஜ் மஹால் என்றுதான் நாம் எல்லோரும் நம்பிக் கொண்டு இருக்கின்றோம். ஆயினும் இது ஒரு பழைய சிவன் கோவில் என்கிற அதிரடி உண்மை வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.
தாஜ் மஹால் விடயத்தில் முழு உலகமும் ஏமாற்றப்பட்டு உள்ளது, தாஜ் மஹால் மும்தாஜின் சமாதி அல்ல, புராதன சிவன் கோவில் என்று ஆதாரங்களுடன் அடித்துக் கூறுகின்றார் பேராசிரியர் பி. என். ஓக். முன்பு தேஜோ மஹாலயா என்கிற பெயரால் தாஜ் மஹால் அழைக்கப் பெற்றது

வேதியியல் துறைக்கான நோபல் பரிசு: அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு


வேதியியல் துறைக்கான நோபல் பரிசு: அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு அறிவிப்புஸ்டாக்ஹோம்: வேதியியல் துறைக்கான நோபல் பரிசு, இரண்டு அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு, அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், இயற்பியல், ரசாயனம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில், தலை சிறந்த நிபுணர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு, வழங்கப்பட்டு வருகிறது. உலக அமைதிக்காகவும், மக்களுக்கும், தன்னலமற்ற சேவையாற்றுபவர்களுக்கும், சமாதான விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மருத்துவ விருது, ஸ்டெம் செல் ஆராய்ச்சியில் சாதனைப்படைத்த, ஜப்பானின் யமனாகாவுக்கும், பிரிட்டனின் ஜான்குர்டானுக்கும் அறிவிக்கப்பட்டது. இயற்பியலுக்கான விருது, ஒளித்துகள் மற்றும் அயனிகள் குறித்து, ஆராய்ச்சி மேற்கொண்ட பிரான்ஸ் நாட்டை சேர்ந்த செர்ஜி ஹரோச்சிக்கும், அமெரிக்காவை சேர்ந்த டேவிட் ஒயின்லேண்ட்டுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று, ரசாயனத்துறைக்கான, நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. உடல் செல்களில் ஊடுருவும் புரதம்(ஜி-புரோட்டீன்) வெளிப்புற சமிக்கைகளை பெறுவது தொடர்பான, ஆராய்ச்சி மேற்கொண்ட, அமெரிக்க விஞ்ஞானிகள் ராபர்ட் லெப்கோவிட்ஸ், பிரைன் கோபில்காவின் சாதனைகளை பாராட்டி இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவத்துறைக்கு, இந்த ஆராய்ச்சி, பேருதவியாக இருக்கும் என, கூறப்படுகிறது. வரும் டிசம்பர் மாதம் 10ம்தேதி, நோபல் பரிசை உருவாக்கிய ஆல்ப்ரெட் நோபலின் நினைவுத்தினத்தன்று, இந்த பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இந்த ஆண்டு ஒவ்வொரு துறையிலும் இருவருக்கு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதால், 6.8 கோடி ரூபாய் பரிசு, இரண்டாக பகிர்ந்தளிக்கப்படும்.

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

ஸ்டாக்ஹோம்: 2012 ம் ஆண்டு ,அமைதிக்கான நோபல் பரிசுஐரோப்பிய யூனியன் அமைப்பிற்குவழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில், தலை சிறந்த நிபுணர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு, வழங்கப்பட்டு வருகிறது. உலக அமைதிக்காகவும், மக்களுக்கும், தன்னலமற்ற சேவையாற்றுபவர்களுக்கும், சமாதான விருது வழங்கப்படுகிறது.இந்நிலையில் 2012-ம் ஆண்டின் அமைதி்க்கான நோபல் பரிசுஐரோப்பிய யூனியனுக்கு வழங்கப்பட்டுள்ளது.டிசம்பர் 10-ம் தேதி நடக்கும் விழாவில் இந்த பரிசு வழங்கப்படுகிறது.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...