Dec 26, 2012

யூடியூப்பின் பார்வையில் 2012 : வீடியோ



இந்த வருடத்தில் (2012) அதிகம் பேரால் பார்வையிடப்பட்ட யூடியூப் வீடியோக்களை கொண்டு Rewind Youtube Style 2012 எனும் பாடலை உருவாக்கியுள்ளது யூடியூப் நிறுவனம்.
இந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட் வீடியோவாகவும், உலகில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட யூடியூப் வீடியோவாகவும் சாதனை படைத்திருக்கும் 'கங்காம் ஸ்டைல்' பாடல், 6 மாதத்திற்குள் 1 பில்லியன் தடவை பார்வையிடப்பட்டிருக்கிறது. எனவே இப்பாடலை உருவாகிய பாடகர் PSY ஐ கொண்டும் மேலும் பல பிரபல பாடகர்களை கொண்டும் இந்த 'யூடியூப் ஸ்டைல் பாடல்' உருவாக்கப்பட்டிருக்கிறது.

மேலும் 2012 இல் யூடியூப்பில் அதிகம் பர்வையிடப்பட்ட வீடியோ பாடல்கள், டாக்குமெண்டரிகள், நிகழ்வுகள் என்பவற்றையும் யூடியூப் நிறுவனம் youtube 2012 எனும் பிரிவில்  தொகுத்துள்ளது.

ரிவைண்ட் யூடியூப் ஸ்டைல் : பாடல்

கூகுளின் பார்வையில் 2012 : வீடியோ

2012 இல் உலகம் எப்படி இயங்கிக்கொண்டிருந்தது என டுவிட்டர் வெளியிட்ட வீடியோவை பற்றி நேற்று பார்த்தோம்.
கூகுள் வெளியிட்ட வீடியோவை இன்று பார்ப்போம். வருடா வருடம், Zeigeist எனும் பெயரில் கூகுள் இவ்வீடியோவை தொகுக்கிறது.

அதென்னங்க Zeitgeist? அது ஒரு ஜேர்மனிய சொல், நேரம் அல்லது காலத்தின் உணர்வு (சக்தி) என பொருள்படும்.  ஒரு குறிப்பிட்டதொரு காலம் எவ்வாறான, கலாச்சார, சமூக பாரம்பரியங்களை சார்ந்திருந்தது என்பதை கூற இந்த சொல்லை பயன்படுத்துகிறார்கள்.

கூகுள், கூகுள் பிளஸ்,  இணையத்தளங்கள் இணைந்து 2012 இற்கான Zeigeist வீடியோவை இப்படி உருவாக்கியிருக்கிறார்கள்.
- ஸாரா

டுவிட்டரின் பார்வையில் 2012 : (வீடியோ)


2012ம் ஆண்டு ஏனையவர்களுக்கு போன்றே டுவிட்டர் பாவனையாளர்களுக்கும் ஒரு முக்கிய வருடமாகும்.
2012ம் ஆண்டு,  சமூக வலைத்தளமான டுவிட்டருக்கு எவ்வாறு அமைந்தது என்பதை, இவ் வருடத்தில் நிகழ்ந்த முக்கிய, அதிசய , பிரபலமான விடயங்களை வைத்து அத்தருணத்தில் டுவிட்டரில் அதிகமாக பகிரப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களின் தொகுப்புக்கள் மற்றும் குறிச்சொற்கள் போன்றவற்றை ஒரே தொகுப்பாக டுவிட்டர் உருவாக்கியுள்ளது. இதே போன்று 2012 இல் வெளிவந்த முக்கிய டுவிட்டுக்கள் பற்றி குறித்த

2012 : பேஸ்புக்கின் பார்வையில்


2012 ம் ஆண்டு பேஸ்புக்கின் பார்வையில் எப்படி இருந்தது என்பதை பார்ப்பதற்கு முன்னர், உலகின் ஒவ்வொரு தனிப்பட்ட நபர்களதும் பேஸ்புக் புரொஃபைல் 2012ம் ஆண்டில் எப்படி இருந்தது என்பதனை பற்றி பார்போம்.
இதற்காக பேஸ்புக் ஒரு சிறப்பு பக்கத்தை உருவாக்கியுள்ளது.

facebookstories.com எனும் இப்பக்கம் உங்களுக்குமானது. 2012 இல் உங்களது பேஸ்புக் டைம்லைன் பக்கத்தில் பதிந்த மிகச்சிறந்த நிகழ்வுகள், ஹைலைட்டைட் போஸ்ட், புகைப்படங்கள், ஞாபகங்கள் எதையும் இந்த

2298 கி.மீ தூரத்தை 10 மணித்தியாலங்களில் கடக்கும் சீன ரயில் : இன்று வெள்ளோட்டம்

உலகின் மிக நீண்ட அதிவேக ரயில் பாதை சீனாவில் இன்று உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டுள்ளது. 
தலைநகர் பீஜிங்கில் இருந்து சீனாவின் தெற்கே உள்ள மிகப்பெரிய வர்த்தக மையமான குவாங்ஷௌ வரை நீண்டிருக்கும் இந்த ரயில் பாதையில் முதலாவது வெள்ளோட்டம் இன்று மேற்கொள்ளப்பட்டது.

இந்த அதிவேக புள்ளெட் ரயில் 300 Km/h வேகத்தில் பயணிக்கக் கூடியது. இது முன்னைய சாதாரண ரயிலை விட இரு மடங்கு அதிக வேகமாகும். இது

முதலாம் நூற்றாண்டில் வானவியல் - நட்சத்திர பயணங்கள் : 1

முதலாம் நூற்றாண்டில் வானவியல்...

சூரியனை சுற்றி ஒன்பது கிரகங்கள் வலம் வருவது எமக்கு தெரிந்த விடயம். ஆனால் இன்று நாம் வாழும் பூமியானது  ஒரு காலத்தில் பிரபஞ்சத்தின் மையமாக கருதப்பட்டு வந்தது என்பது உங்களுக்கு எத்தனை பேருக்கு தெரியும்?


இன்றைக்கு ஏறக்குறைய 2000 வருடத்திற்கு முன்னர் எழுந்த கோட்பாடு இது. ஆரம்ப காலத்தில் எந்தவித நவீன தொலைநோக்கிகளும் கண்டுபிடிக்கப்படாத நிலையிலும் எந்தவித செய்மதிகள் விண்ணுக்கு ஏவப்படாத நிலையிலும், பூமிக்கு அப்பால் என்ன இருக்கும்? எத்தனை கிரகங்கள் இருக்கும் என்ற ஊகங்கள் பரவலாக

விண்கல் ஒன்றை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர நாசா புதிய திட்டம்


வருங்காலத்தில் மனிதன் செவ்வாய்க் கிரகத்துக்குப் செல்லும் போது அவன் பயணிக்கும் குறித்த விண்கலம் பூமிக்கு வெளியில் இருந்து எரிபொருளை நிரப்பித் தனதுபயணத்தை ஆரம்பிக்கும் வண்ணம் ஒரு செயற்திட்டத்தை நிறைவேற்ற நாசா விஞ்ஞானிகள் ஒன்று கூடி முடிவெடுத்துள்ளனர்.
இச் செயற்திட்டம் எதுவெனில் பூமிக்கு அண்மையில் சூரியனைச் சுற்றி ஒரு ஒழுக்கில் வந்து கொண்டிருக்கும் சுமார் 5 இலட்சம் Kg எடையுடைய விண்கல் ஒன்றைத் திசை திருப்பி விண்ணில் நிலை பெற்றிருக்கும் ISS ஆய்வு கூடத்துடன் இணைப்பதாகும். இதன் மூலம் வருங்காலத்தில் விண்கலங்கள்

Dec 25 சிலி நாட்டில் எரிமலை வெடிக்கும் அபாயம். புகைமண்டலத்தைப் பார்க்க சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

சிலி நாட்டில் எரிமலை ஒன்று வெடித்து சிதறி, நெருப்புக்குழம்புகளை வெளியேற்றும் சூழ்நிலை இருப்பதால், அருகிலுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.


Red alert over Chilean volcano as she gets ready to blow with awesome ash dischargeசிலி நாட்டில் Copahue என்ற இடத்தின் அருகிலுள்ள எரிமலை என்று பயங்கர புகையை தற்போது வெளியேற்றி வருகிறது. இந்த புகையால் அருகிலுள்ள இடங்கள் யாவும் புகைமண்டலமாக காணப்படுகிறது. எந்த நேரமும் எரிமலை வெடிக்கும் அபாயத்தில் இருப்பதால், அதன் அருகில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த காவல்துறையினர்களுக்கு அரசு ஆணையிட்டுள்ளது. அர்ஜெண்டினா நாட்டின் எல்லையில் இருக்கும் நகரத்திற்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சிலி நாட்டின் Biobio region பகுதி மக்களுக்கு ONEMI என்ற சிலி நாட்டின் அதிரடிப்படை அமைப்பு இந்த

Dec 27 இங்கிலாந்து: எலிசபெத் ராணியின் கிறிஸ்துமஸ் உரை முதன்முதலில் 3Dயில் ஒலிபரப்பிய தொலைக்காட்சிகள்.

www.thedipaar.com

பிரிட்டிஷ் ராணி இரண்டாவது எலிசபெத்தின் கிறிஸ்துமஸ் செய்தி முப்பரிமாண (3டி) தொழில்நுட்பத்தில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.


கிறிஸ்துமஸ் தினத்தின்போது பிரிட்டிஷ் ராணி நடத்தும் இந்த உரை மிகவும் பிரபலமானது. 1932ஆம் ஆண்டு முதல் பாரம்பரியமாக நடைமுறையில் உள்ள இந்த அரச குடும்ப வாழ்த்துச் செய்தி, தொடக்க காலகட்டத்தில் ரேடியோவில் ஒலிபரப்பானது. அடுத்த கட்டமாக தொழில்நுட்ப வளர்ச்சியைப் பின் தொடர்ந்து டி.வி.யில் ஒளிபரப்பானது. முதல் முறையாக டி.வி.யில் நேரடியாக கிறிஸ்துமஸ் வாழ்த்து வழங்கிய பெருமையும் ராணி எலிசபெத்தையே சேரும். இப்போது அவரே 3டி-யில் வாழ்த்துச் செய்தி வழங்கியுள்ளார். அவரது வாழ்த்துச் செய்தி பக்கிங்ஹாம் அரண்மனையில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது.
தனது கணவர், மகன், மகள்கள், பேரக்குழந்தைகளுடன் தேவாயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையிலும் ராணி எலிசபெத் பங்கேற்றார். தேவாலயத்தில் அவரை வரவேற்க காத்திருந்த 70 குழந்தைகளிடமும் மலர்க்கொத்தைப் பெற்றுக் கொண்டு அவர்களுடன் உரையாடி மகிழ்ந்தார். 89 வயதாகும் எலிசபெத், ராணியாகப் பொறுப்பேற்ற 60ஆவது ஆண்டு தினம் இந்த ஆண்டில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது நினைவுகூறத்தக்கது.

Dec 27 1400 மைல்கள் தூரத்தை வெறும் எட்டு மணிநேரத்தில் செல்லும் அதிவிரைவு இரயில் சீனாவில் அறிமுகம்

www.thedipaar.com
உலகிலேயே அதிக தொலைவு பயணம் செய்யக்கூடிய அதிவிரைவு இரயில் ஒன்று சீனாவில் நேற்று முதல் செயபட்டது. இது 1400 மைல்கள் பயணம் செய்கிறது. இந்த அதிவிரைவு இரயில் சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இருந்து Guangzhou என்ற பகுதி வரை செல்கிறது. இன்று காலை இதன் முதல் பயணத்தை இரயில்வே அமைச்சர் தொடங்கி வைத்தார்.

கஜகஸ்தான்: ராணுவ விமானம் தரையில் மோதி 27 பேர் பலி

கஜகஸ்தான்: ராணுவ விமானம் தரையில் மோதி 27 பேர் பலிமாஸ்கோ, டிச. 26-

மத்திய கிழக்கு ஆசியா கண்டத்தின் பாலைவனப் பகுதியில் கஜகஸ்தான் - உஸ்பெகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான 2 ஆயிரத்து 200 கி.மீட்டர் நீளம் கொண்ட எல்லைப் பகுதி உள்ளது.

இப்பகுதியில், கஜகஸ்தான் நாட்டின் சார்பில் தலைமை எல்லைப் பாதுகாப்பு அதிகாரி கர்ணல் டுர்கன்டெக் ஸ்டாம்பெகோவ் தலைமையில் பணியாற்றும் எல்லைப் பாதுகாப்பு படையினர் 20 பேர், விமானம் மூலமாக எல்லைப் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.

உஸ்பெகிஸ்தான் எல்லைப்பகுதி அருகே உள்ள ஷிம்கெண்ட் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக அந்த விமானம் தரையில் மோதி நொறுங்கியது.
இந்த விபத்தில், விமானப்படை வீரர்கள் 7 பேர், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் 20 பேர் என மொத்தம் 27 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
விபத்துக்கான காரணம் குறித்து கஜகஸ்தான் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...