Jan 19, 2013

40 மணிநேரம் தொடர் பனிமழை : ஸ்தம்பித்தது பிரித்தானியா


பிரித்தானியாவில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து 40 மணிநேரமாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
இன்று மாலை அங்கு ஆலங்கட்டி மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும் பிரித்தானிய பாடசாலைகள், விமான நிலையங்கள் பலவும் இன்று மூடப்பட்டுள்ளன. விமான போக்குவரத்து குறித்து பயணிகள் உறுதிப்படுத்தியதன் பின்னர் பயணங்களை

மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சுமார் 10,000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன. 70க்கு மேற்பட்ட விமானங்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளன. சுமார் 2,000 டான் உப்புக்கள் மேலதிகமாக கொள்வனவு செய்யப்பட்டு பனிக்கட்டிகளை கரைக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பிரிஸ்டல் - பிரிட்ஜ்லேண்ட் M4 உள்ளிட்ட பிரித்தானியாவின் பிரதான பெருந்தெருக்கள் கடும் பனிப்பொழிவில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. இன்னமும் மூன்று நாட்களுக்கு இதே போன்று கடுமையான பனிமழை பொழியும் எனவும், இதனால் பிரித்தானிய மக்கள் முடிந்தளவு வெளித்தேவைகளுக்கு செல்வதை குறைத்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...