Jan 19, 2013


அல்ஜீரியாவின் சஹாரா பாலைவனத்தில், எரிபொருள் நிலைத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பணயக்கைதிகளை மீட்கும் தாக்குதல் நடவடிக்கை நேற்று சனிக்கிழமை முடிவுக்கு வந்துள்ளது. நேற்றிரவு நடைபெற்ற இறுதி இராணுவ நடவடிக்கை மூலம் பணயக்கைதிகள் அனைவரும் மீட்கப்பட்டு விட்டதாக பிரிட்டன் மற்றும் நோர்வே அதிகாரிகள் சனிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளனர்.

 இறுதியாக வெளிவந்த சுயாதீன தகவல்களின் படி  அல்ஜீரிய அதிரடிப்படை மேற்கொண்ட இப் படை நடவடிக்கையில் 32 தீவிரவாதிகளும், 20 பணயக்கைதிகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  ஆனால்

இத்தாக்குதலில் கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த மொத்தப் பணயக் கைதிகளின் எண்ணிக்கை இன்னமும் சரியாகத் தெரியவில்லை எனவும் இதைக் கண்டறிவதற்கான வழிகள் அடைக்கப் பட்டுள்ளன எனவும் ஏனைய மேற்கத்தேய ஊடகங்கள் கூறியுள்ளன.

இதேவேளை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சு இது குறித்து கருத்துக் கூறுகையில் அல்ஜீரியாவில் தடுத்து வைக்கப் பட்டிருந்த அமெரிக்கர்கள் கதி என்னவென்று அறிவிப்பது இப்போது முடியாது எனவும் தெரிவித்துள்ளார். எனினும் 685 அல்ஜீரிய பணியாளர்களும், 107 வெளிநாட்டவர்களும் விடுவிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இறுதியாக வியாழக்கிழமை மேற்கொள்ளப் பட்ட இராணுவ நடவடிக்கையில் 100 வெளிநாட்டினர் உட்பட 650 பணயக் கைதிகள் மீட்கப்பட்டதுடன் இதில் 12 பேர் கொல்லப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தாம் மாலிக்கு தப்பிச்செல்வதற்கு உதவுமாறு கோரி இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் பல்வேறு வெளிநாட்டவர்கள் உட்பட அல்ஜீரிய பணியாளர்களை பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். அவர்களிடமிருந்து பணயக்கைதிகளை மீட்பதற்கு, பிரான்ஸ், இங்கிலாந்து, மேற்கு ஆபிரிக்கா என பல்வேறு நாடுகள், அல்ஜீரிய அரச இராணுவத்தினருடன் இணைந்து கடந்த மூன்று நாட்களாக போராடி வந்தன. இந்நிலையிலேயே நேற்றுடன் இம்மீட்பு நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...