Jan 19, 2013

இங்கிலாந்தில் கடும் பனியும் ஆலங்கட்டி மழையும் : மக்களின் அன்றாட வாழ்வு பாதிப்

News Service பிரிட்டிஷ் நேரப்படி நேற்று காலை 8.30 மணி முதல் நாளை காலை 6 மணி வரை கடும் பனிப் பொழிவு அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பனிப்பொழிவு இருக்கும் அதேவேளை இன்று மாலை சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தின் பனி அகற்றும் டீம்கள், நாள் முழுவதும் பணியில் உள்ளன. இவர்கள், ரன்வேக்களை சுவிட்ச் பண்ணி ஸ்னோ அகற்றும் பணியை செய்து வருகிறார்கள். அதாவது முதலாவது ரன்வேயை கிளீன் பண்ணி முடிய அதில் விமானங்கள் இறங்க அனுமதிக்கப்பட, இவர்கள் இரண்டாவது ரன்வேயை கிளீன் செய்கிறார்கள். இதற்கிடையே முதல் ரன்வேயில் ஸ்னோ மூடிவிடும். இப்போது இரண்டாவது ரன்வேயில் விமானங்களை இறங்க அனுமதிக்கப்பட்டு, முதல் ரன்வே மூடப்பட்டு, ஸ்னோ அகற்றப்படுகிறது.
  
இந்த விதத்தில், ஹீத்ரோ விமான நிலையத்தின் ஒரு ரன்வே நாள் முழுவதும் இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால், ஒரு ரன்வே மட்டும் இயங்கியதால், வழமையான எண்ணிக்கையில் விமானங்களை ஹான்டில் பண்ண முடியவில்லை. (பிஸியான நேரங்களில் சராசரியாக 1.4 நிமிடங்களுக்கு ஒரு
விமானம், தரையிறங்கவோ, மேலேறவோ செய்வது வழக்கம்) வேகப்பாதை M4, M50 ஆகியவை இன்று காலை மூடப்பட்டிருந்தன. ஸ்னோ அகற்றல் வேலைகள் முடிந்தபின் மதியத்துக்கு சற்றுமுன் திறக்கப்பட்டன. இருப்பினும், போக்குவரத்து மிக மெதுவாகவே நடந்தது. காரணம் தொடர்ந்து ஸ்னோ பண்ணிய வண்ணம் உள்ளது.
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பில், அத்தியாவசிய பயணங்கள் மற்றும் வைத்தியசாலைக்கு செல்லுதல் தவிர்ந்த அனைத்து பயணங்களையும் தவிர்த்து விடுமாறு கூறப்பட்டிருந்தது. இதனால், ஷாப்பிங், சினிமா, மற்றும் பல வழமையான நடவடிக்கைகள் ஆளின்றி வெறிச்சோடி காணப்பட்டன. ரயில்வே நிறுவனங்கள் இன்று, டிக்கெட்டுகளில் உள்ள நிபந்தனைகள் அனைத்தையும் ரத்து செய்தன. அதாவது, ஒரு ட்ரெயினில் டிக்கெட் எடுத்திருந்தால், மற்றைய ட்ரெயினில் பயணம் செய்யலாம். டிக்கெட்டுகளை மாற்ற தேவையில்லை.
பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. நேற்று நடைபெற்ற A-level பள்ளிப் பரீட்சைக்கு வரும் மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மற்றைய மாணவர்கள் யாரும் வரவேண்டாம் என்ற அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த வகையில் சுமார் 2,000 பள்ளிகள் மூடப்பட்டன.
வீதி விபத்துக்கள் ஏராளம். இவற்றின் பெரும்பாலானவை, ஸ்னோ மூடிய வீதிகளில் நடந்தவை. மேலே ஸ்னோ, அடுத்த படலமாக ஐஸ் இருக்கும் இடங்களில் அனேக கார்கள் ஸ்லிப் பண்ணி மற்றைய கார்களில் மோதியதில் விபத்துக்கள் ஏற்பட்டன.
வேல்ஸ் பகுதியில் காலநிலை காரணமாக மின்சாரம் தடைப்பட்டதில்,நேற்று காலை 10,000 வீடுகனுக்கு மிக்சாரம் துண்டிக்கப்பட்டது. இங்கு பனிப் பொழிவு 6 இஞ்ச் என்ற அளவில் இருந்தது. இன்று அதிகபட்ச பனிப்பொழிவு, வேல்ஸின் செனிபிரிட்ஜ் பகுதியில் 8 இஞ்ச் (19 செ.மீ.) என பதிவாகியுள்ளது.
நாள் முழுவதும் பனிப்பொழிவு மோசமாக இருக்கும் என்று நேற்றே எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையிலும், காலை 8.30 மணிவரை பனிப்பொழிவு ஏற்படாத காரணத்தால், பல ஆயிரக்கணக்கானோர், வேலைகளுக்கு சென்றுவிட்டனர். அதன்பின், பனிப்பொழிவு தொடங்கி நாள் முழுக்க தொடர்ந்ததால், பலரால் வீடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.
பனிப்பொழிவு எச்சரிக்கை நேற்று விடுக்கப்பட்டபோது, அடுத்த 40 மணி நேரத்துக்கு வெளியே செல்வதை தவிருங்கள் என்று கூறப்பட்டதால், நேற்று கடைகளில் ஏகக் கூட்டம். உணவுப் பொருட்கள் இருந்த ஷெல்ஃப்கள் அனைத்தும் காலியாக காணப்பட்டன. இதையடுத்து, நேற்று அனேக கடைகள் மூடப்பட்டிருந்தன. சவுத் வேல்ஸ் பகுதியில் நேற்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட காரணத்தால், சூப்பர் மார்க்கெட்டுகள் நிரம்பி வழிந்தன. மாலை 6 மணிக்குப் பிறகு பிரெட், பால் போன்ற பொருட்கள் ஏதும் ஷெல்ஃபுகளில் இல்லை.
இவை தவிர, பழங்கள், காய்கறி, மற்றும் டின் உணவு வகைகள், இரவு 8 மணியுடன் முடிந்து விட்டன. சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரியும் ஒருவர், கிருத்துமஸூக்கு முதல்நாள் இருப்பதைவிட பிசியான நாளாக நேற்று இருந்தது என்றார். இங்கு ஸ்னோ ஒன்றும் புதிதல்ல. ஆனால், தொடர்ந்து அடித்துக் கொண்டிருக்கும் (இப்போதும் அடிக்கிறது) இந்த பனிப்பொழிவு, ஒரு கெட்ட சொப்பனமாக மாற்றியுள்ளது. முன்னாள் 'சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தின் பிரதமரின் இல்லம் என்பதற்காக பனிப் பொழிவு எக்செப்ஷன் கொடுக்குமா? அங்கும் ஸ்னோதான்!

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...