Jan 19, 2013

மாலியில் அல்கொய்தாவுடன் தொடர்புடைய கிளர்ச்சிப் படைக்கும், அரச இராணுவத்துக்கும் இடையிலான மோதலில் இன்று வரை 700 000 பொதுமக்கள் தமது வதிவிடங்களை இழந்து அகதிகளாக அண்டை நாடுகளுக்குத் தஞ்சம் புகும் நிலைமையை எய்தியுள்ளதாக ஜெனீவாவில் உள்ள ஐ.நா இன் அகதிகளுக்கான பிரிவு அறிவித்துள்ளது.

மேலும் இதனால் மேற்கு ஆப்பிரிக்காவில் அகதிகளின்  நிலை மோசமடைந்துள்ளதாகவும், குறுகிய காலத்தில் மாலியின் உள்நாட்டுக்கு உள்ளேயே 300 000 பேரும்,  அயல் நாடுகளுக்கு சுமார் 400 000 பேரும் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மாலியில் தற்போது, இஸ்லாமிய ஆயுததாரிகளும், AQIM எனப்படும்

அல்கொய்தா பிரிவினரும் இணைந்து கிளர்ச்சி செய்து வருகின்றனர். அவர்களை எதிர்த்து மாலியின் அரச இராணுவம் கடுமையாக போராடிவருகிறது. அவர்களுக்கு துணையாக  மேற்கு ஆபிரிக்கா, பிரான்ஸ் என்பன தமது படைகளை அனுப்பி உள்ளன.  AQIM ஆயுததாரிகள், கடந்த வருடம் மாலியின் வட பகுதியைத் தமது கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்திருந்தனர்.

தற்போதைய தாக்குதல்களால், மாலிக்கு அண்டை நாடான மௌரிடானியா,நைகர்,புர்கினா ஃபசோ மற்றும் அல்ஜீரியா ஆகிய நாடுகளுக்கு மட்டும் 230 000 பேர் இடம்பெயர்ந்து உள்ளனர். மேலும் கடந்த ஜனவரி 10ம் திகதி இடம்பெற்ற தாக்குதல்களில் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் மாலியின் தலைநகர் பமாக்கோவிலிருந்து வடக்கே 550 Km தூரத்தில் அமைந்துள்ள 'கொன்னா' நகரை  கைப்பற்றியிருந்தனர்.

எனினும் மாலி ராணுவம் பிரெஞ்சுப் படையுடன் இணைந்து நடத்திய பதில் தாக்குதலை அடுத்து, கொன்னா நகர் மீண்டும் அரச கட்டுப்பாட்டுக்குள் வந்தது.  மாலியில் 8000 இற்கும் அதிகமான பிரெஞ்சுக் குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தற்போது பிரான்ஸ் மாலி புரட்சிப் படைக்கு எதிராகக் களத்தில் குதித்திருப்பதால் அவர்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2012 மார்ச் மாதமளவில் மாலி அதிபர் Amadou Toumani Toure இனை பொதுமக்கள் கிளர்ச்சிப் படையின் துனையுடன் வலுக்கட்டாயமாகப் பதவி இறக்கியதன் பின்னரேயே மாலியில் சண்டை வலுப்பெற்றது. மேலும் 1960 இல் மாலி பிரான்ஸிடம் இருந்து சுதந்திரம் பெற்றிருந்தமையால் தற்போது மறுபடியும் அங்கு நிகழ்ந்திருக்கும் பிரெஞ்சுப் படையின் ஊடுருவல் மக்கள் மத்தியில் மறைமுகமாக எதிர்ப்பைச் சம்பாதித்துள்ளது

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...