Jan 19, 2013

மீண்டும் பனி அபாயம்!!! - அவதானம்!!

இன்று ஞாயிற்றுக்கிழமை Paris-Charles de Gaulle அல்லது Paris-Orly விமானநிலையத்திலிருந்து  நீங்கள் விமானத்தில் பிரயாணம் செய்ய எண்ணியிருந்தால் தயவு செய்து விமான நிலையத்துடன் தொடர்பு கொண்டு உங்கள் விமானம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதா இல்லையா என்று கேட்டறிந்து கொள்ளுங்கள். நேற்றுச் சனிக்கிழமை  பயணிகள் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் La Direction générale de l'Aviation civile - DGAC) விமான நிறுவனங்களிடம்
ஞாயிற்றுக்கிழமைக்கான Paris-Charles de Gaulle மற்றும் Paris-Orly  விமான நிலையங்களில் 40 வீதமான பறப்புக்களைக் குறைக்குமாறு கேட்டுள்ளது.


 
ஞாயிற்றுக்கிழமை பெய்ய இருக்கும் கடும் பனி வீழ்ச்சி சாரணமாக இவ்வாறு கேட்டகப்பட்டதாக பரிஸ் விமான நிலைய நிறுவனம் ( Aéroports de Paris  - ADP) அறிவித்தள்ளது. இதில் AIR FRANCE நீண்ட தூரப் பயணங்களை 100 சதவீதம் உறுதி செய்துள்ளது. குறுந்தூர மற்றும் இடைத்தூர விமானப் பறப்புக்கள் 60 சதவீதம் மட்டுமே உறுதி செய்ப்படுகின்றது. 
 
 
 
சனிக்கிழமை 23 மணியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை முழு நாளும் பனி வீழ்ச்சி காரணமாக  Paris-Charles de Gaulle மற்றும் Paris-Orly விமான நிலையங்களில் விமானப் போக்குவரத்து பாரிய அளவில் தடைப்படும் எனவும் ADP அறிவித்துள்ளது. பயணிகள் தொலைபேசி மூலம் விமனப் பறப்பை உறுதி செய்து கொண்டு மட்டுமே விமான நிலையம் செல்லம்படியும் இவர்கள் அறிவித்துள்ளார்கள். 
 
 
 
 
பிரான்ஸ் வானிலை மையம் (METE FRANCE) Ile-de-Fance அlங்கலாக 55 பிராந்தியங்களுக்கு கடும் அவதான எச்சரிக்கை (Trés vigilant) விடுத்துள்ளது. Ile-de-Fance இல் ஏற்கனவே 5 தொடக்கம் 8 சென்டிமீற்றர் அளவில் பனி வீழ்ந்துள்ளது. சனிக்கிழமை நள்ளிரவின் பின்னர் பிரான்சின் தெற்குப் பக்கத்திலிருந்து வீசும் பனிக்காற்று பரிசையும் அதன் சுற்றுப்புறங்களையும் கூடத் தாக்கும். 
 
 
 
 
 
 
இது வரை மாலி செல்ல விமான நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்த மூன்று இராணுவத்தினர் உட்பட வெள்ளி இரவிலிருந்து சனிக்கிழமைக்குள் ஆறு பேர் விபத்தில் கொல்லப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை பேக்குவரத்து மிக மோசமாகப் பாதிக்கப்படும். விபத்து ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
 
 
 
 
 
 
 
பனி வீழ்ச்சியினால் வீதிச் சறுக்கலில் சனிக்கிழமை  SAVOIE இல் பேருநது கவிழ்ந்து 20 பேர் காயமுற்றுள்ளனர்.
 
 
 
 
 
பரிசை அண்டிய பகுதியன Versailles இலுள்ள லூயி மன்னன் அரண்மனையும் அதன் பூங்காக்களும் மற்றும் வேறு பல மக்கள் பொது இடங்களும் கூட ஞாயிற்றுக் கிழமையிலிருந்து மறு அறிவித்தல் வரை மக்கள் பாவனைக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. பல பிராந்தியங்களில் திங்கட்கிழமைக்கான பாடசாலைப் போக்குவரத்து சேவைகள் கூட தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்ப்பட்டுள்ளது. பரிசிற்குள் பல விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. பார ஊர்திகள் கவிழ்ந்துள்ளன. ஞாயிற்றுக்கிழமை வெளியில் செல்வோர் பெரும் பனிக்குரிய ஆடைகளுடன் ஆயத்தங்களுடனும் செல்லுங்கள்.
 
 
 

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...