Jan 19, 2013

சுவீடனில் ரயிலைத் திருடி வீட்டின் மீது மோத வைத்த பணிப்பெண்


சுவீடனில் சுத்திகரிப்பளராக வேலை செய்து வரும் 20 வயதுடைய இளம்பெண் ஒருவர் ஸ்டாக்ஹோமில் இருந்து ஒரு ரயிலைத் திருடி தனது சந்தோசத்துக்காக மிக வேகமாக ஓட்டிச் சென்று ஒரு அடுக்கு மாடி கட்டடத்துடன் மோதச் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது ஆட்கள் யாரும் ஏறாது தனியாக இருந்த ரயிலின் டிரைவர் சீட்டுக்கு இவர் சென்று அதனை ஸ்டார்ட் செய்து மிக வேகமாக ஓட்டிச் சென்றதை போலிசாரும் ரயில்வே ஊழியர்களும் சற்றுத் தாமதமாகவே உணர்ந்து கொண்டனர்.


அவர்கள் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கு முன்னரே மின்னல் வேகத்தில் சென்ற அந்த ரயில் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு அருகில் இருந்த அடுக்கு மாடிக் கட்டடத்துடன் மோதியுள்ளது. இச்சம்பவம் நடந்த வேளை அவ்வீட்டுக்குள் 5 முதியவர்கள் உறக்கத்தில் இருந்துள்ளனர். எனினும் அதிர்ஷ்ட வசமாக அவர்கள் அனைவரும் உயிர் பிழைத்தனர். ரயிலைக் கடத்திய இளம் பெண் காயங்களுடன் மீட்கப் பட்டுள்ளார்.
முன்பின் அனுபவம் இல்லாத ஒரு இளம் யுவதி ஒரு ரயிலைக் கடத்தி ஓட்டிச் செல்வதும் அது பாரிய விபத்தில் சிக்கியும் யாரும் உயிரிழக்காததும் சுவீடன் போக்குவரத்து மற்றும் போலிஸ் அதிகாரிகளுக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ள அப்பெண் எதற்காக ரயிலைக் கடத்தினார் என அறிவதற்கு தீவிர விசாரணை மேற்கொள்ளப் படவுள்ளது.

இன்னொரு புறத்தில் எகிப்தின் கெய்ரோவுக்கு அருகேயும் ரயில் ஒன்றின் இரு பெட்டிகள் தடம் புரண்டதில் 19 இராணுவ வீரர்கல் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...