Sep 9, 2012

சீனாவில் இன்று பூகம்பம்! 10,000 வீடுகள் சேதம், 1 லட்சம் பேர் வெளியேற்றம்!!

, Friday 07 September 2012,



1 லட்சம் பேர் வெளியேற்றம்!
சீனாவில் அடுத்தடுத்த இரு தடவைகள் பூகம்பம் ஏற்பட்டதில், குறைந்தது 64 பேர் கொல்லப்பட்டனர். 700 பேர் காயமடைந்தனர், 20,000 வீடுகள் சேதமடைந்தன. பல்லாயிரக்கணக்கான மக்கள், தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
சீனாவில் யுனான் மற்றும் குய்ஸோ மாகாணங்களின் எல்லையருகே இன்று 0319 GMT நேரம் முதலாவது பூகம்பம் ஏற்பட்டது எனவும், 45 நிமிடங்களின் பின் அடுத்த பூகம்பம் தாக்கியது எனவும், அமெரிக்க ஜியோலோஜிகல் சர்வே தலைமையகத்தில் பதிவாகியுள்ளது. இரு பூகம்பங்களும், 5.6 magnitude அளவில் சக்தி வாய்ந்ததாக இருந்துள்ளன.

பூகம்பம் ஏற்பட்ட பகுதி, சீனாவில் உள்ள மலைப்பிரதேசம்.
பூகம்பம் தாக்கிய நேரத்தில் இருந்து இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, ஸின்ஹூவா செய்தி சேவை தெரிவித்துள்ளது. தற்போது, இந்தப் பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 1 லட்சம் பேர், பூகம்பம் ஏற்பட்ட பகுதியில் இருந்து வேறு பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சீனப் பிரதமர், பூகம்பம் ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட விரைந்துள்ளார் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...