Sep 9, 2012

தீபாவளி பண்டிகையை ஒட்டி பீனிக்ஸ் பைக் அறிமுகம்


இருசக்கர வாகன விற்பனையில், என்ட்ரி லெவல் பைக் என்ற பிரிவு உண்டு. 100 சிசி முதல் 125 சிசி வரை திறன் கொண்ட இவ்வகை பைக்குகள் விலை குறைவானவை. முதல் முறையாக பைக் ஓட்டுபவர்கள், இத்தகைய பைக்குகளையே வாங்குகின்றனர். மொத்த பைக் விற்பனையில்,என்ட்ரி லெவல் பைக் பங்களிப்பு மிக அதிகம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்த பிரிவில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும், டி.வி.எஸ்., மோட்டார்ஸ் நிறுவனமும் தான் ஆதிக்கம் செலுத்தி வந்தன. எனினும், ஹோண்டா நிறுவனத்தின் டிரீம் யுகா 110 பைக் வந்த பிறகு, டி.வி.எஸ்., நிறுவனம் பின் தங்க தொடங்கியுள்ளது.
இப்பிரச்னையை தவிர்க்க, 125 சிசி திறன் கொண்ட பீனிக்ஸ் பைக்கை, வரும் தீபாவளி பண்டிகையை ஒட்டி, டி.வி.எஸ்., மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. டில்லியில் ஜனவரி மாதம் நடந்த வாகன கண்காட்சியில், "ரேடன்' என்ற பெயரில் ஒரு பைக்கை, டி.வி.எஸ்., மோட்டார்ஸ் நிறுவனம், காட்சிக்கு வைத்து இருந்தது. அந்த பைக் தான் தற்போது, பீனிக்ஸ் என்ற பெயரில் வெளி வர உள்ளது. 125 சிசி பிரிவில், ஏற்கனவே, ஃப்ளேம் 125 என்ற பைக்கை, டி.வி.எஸ்., நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. தற்போது, பீனிக்ஸ் பைக்கும் அதே பிரிவில் விற்பனைக்கு வர உள்ளது. இந்த புதிய பைக், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் டிஸ்கவர், ஹோண்டா நிறுவனத்தின் ஷைன் ஆகிய பைக்குகளுக்கு கடும் போட்டியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பீனிக்ஸ் பைக்கில், எலக்ட்ரிக் ஸ்டார்ட், முன்பக்க சக்கரத்தில் டிஸ்க் பிரேக் ஆகிய வசதிகள் இடம் பெற வாய்ப்பு உள்ளது. 4 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வசதி கொண்டது. இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...