Sep 9, 2012

புதிய தென்றலாய் ஒரு மோட்டார் பைக் சுசுகி ஹயாட்


இந்தியாவின் சாமானிய மக்களும் வாங்கக்கூடிய வகையில், அதேநேரம் நல்ல அழகான வடிவமைப்பில்,அதிக மைலேஜ் கொடுக்கும் வகையில் வந்துள்ளதுஜப்பானின் சுசுகி நிறுவனத்தின் "ஹயாட்' மோட்டார் சைக்கிள். ஹயாட்என்றால் ஜப்பானிய மொழியில் "புதிய தென்றல்' அல்லது "துரிதக் காற்று' என்று பொருள்.பெயருக்கேற்ப மென்மையான இவ்வண்டி 112சிசி என்ஜினும், 5ஸ்டெப் அட்ஜெஸ்டபிள் பின்புற ஷாக்அப்சர்பர் கொண்டது. உபயோகிக்க எளிதாகவும் இருப்பதால் முதல் முறையாக பைக் வாங்கும் இளைஞர்களுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும். ஹயாட்டின் என்ஜின்112சிசி ஏர்-கூல்டு, சிங்கிள்சிலிண்டர் மோட்டாருடன் 8.2.bhp பவரை கொடுக்க வல்லதும், 4ஸ்பீடு கியர் பாக்சுடனும்வருகிறது.
இதன் என்ஜின்அதிக செயல் திறனுடம் அதே நேரம் ஸ்மூத் ஆக ஓடக்கூடியதாகவும் உள்ளது. இதன் என்ஜின்7500 rpm க்கு 8.3.bhp பவரும் 5500 rpmக்கு அதிகபட்ச டார்க்கும் கொடுப்பதுடன் மைலேஜும் அதிகம் கொடுக்கிறது. இதில் 8 லிட்டர் ஃப்யூவல் டாங்க் ஓட்டுனருக்கு வசதியாக பொருந்தும்படியும், சொகுசாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
வடிவமைப்பின் மற்றொரு சிறப்பான அம்Œம் சரியாய் பொருத்தப்பட்டுள்ள ஹாண்டில்பார், இதன் டெலஸ்கோப்பிக் ஃபோர்க் ஃப்ரன்ட் சஸ்பென்ஷன் மற்றும் டிவின் ஹைட்ராலிக் ரியர் ஷாக் அப்சர்பர் போன்றவை தரமான பயணத்திற்கு வழிவகுக்கிறது. இதன் ட்யூபுலர் ஸ்விங் ஆர்ம் பழைய மாடல் என்றாலும் இதன் பிரேக்கிங் அமைப்பு நன்றாக உள்ளது. 130மிமி டிரம் முன்புறமும் 110மிமி டிரம் பின்புறமும் கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் மைலேஜ் 51.9கிலோ மீட்டர் லிட்டருக்கு நகரத்திலும் 53.3கிலோ மீட்டர் லிட்டருக்கு ஹைவேக்களிலும் கொடுக்கிறது. வெள்ளை, இளம்பச்சை,கிரே, சிவப்பு மற்றும் கருப்பு நிறங்களில் வருகிறது. சிக்கனமான விலையிலும்,உபயோகிக்க எளிதாகவும்,நகர சாலைகளுக்கு ஏற்ப வசதியாகவும் உலா வருகிறது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...