Sep 9, 2012

சிறுமலையில் 4,000 ஆண்டுகள் பழமையான குறியீடு கண்டுபிடிப்பு

பழநி: திண்டுக்கல் மாவட்டம், சிறுமலையில், 4,000 ஆண்டுகள் பழமையான, பளியர் இனப் பழங்குடிகளின் குறியீடுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

சிறுமலை பளியர் இனப் பழங்குடிகளின் வாழ்வுமுறை ஆய்வின் போது, இந்தக் குறியீடுகள் கிடைத்துள்ளன. இவை, சிந்துச் சமவெளி நாகரிகத்தில் புதையுண்ட குறியீடுகளை போலவே உள்ளன.

இது குறித்து, தொல்லியல் ஆய்வாளர் நாரயண மூர்த்தி கூறியதாவது: சிறுமலை பழங்குடியினர் வணங்கும், குலதெய்வக் கோவில் அருகே உள்ள, கன்னிமார் ஏழு பேரின் சிலைகள் புதைக்கப் பட்டுள்ளன. அதில் இரண்டில், இந்தக் குறியீடுகள் உள்ளன. குறிஞ்சி இன தமிழர்களான, பளியர் இன மக்கள்,
பண்டைக் காலத்தில், வேட்டையாட கல் ஆயுதங்களைப் பயன்படுத்தினர். மேலிருந்து கீழாக, குறியீடுகள் பொறிக்கப் பட்டுள்ளன. சிந்துச் சமவெளி குறியீடுகள் போலவே இவை குறிக்கப் பட்டுள்ளன. அதன்படி படித்தால், "கோ' (கடவுள்) அல்லது, "மேல்' எனப் படிக்கலாம். இந்த எழுத்து முறை, எகிப்திய, "வடிவமுறை' எழுத்துகளைப் பின்பற்றியது. சமவெளிப் பகுதியான சிந்துவில் கிடைத்த, 134வது குறியீடும், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான சிறுமலை குறியீடும் ஒன்றுக்கொன்று பொருந்துகின்றன. ஏற்கனவே ஏராளமான சிந்துச் சமவெளி குறியீடுகள், தமிழகத்தில் கிடைத்துள்ளன. மேலும், சிறுமலை குறியீடுகள், சிந்துச் சமவெளி நாகரிகம், தமிழர்களின் நாகரிகமே என்ற கருத்திற்கு வலுசேர்த்துள்ளன. இவ்வாறு நாரயண மூர்த்தி கூறினார். இந்தக் கண்டுபிடிப்பில், நாராயண மூர்த்தி உட்பட, மதுரை காமராஜர் பல்கலை வரலாற்றுத் துறை தலைவர் சந்திரபாபு, பழனியாண்டவர் மகளிர் கல்லூரி பேராசிரியை திலகவதி, திண்டுக்கல் கிராண்டில் கல்லூரி வரலாறு பேராசிரியர் பால குருசாமி மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...