Sep 9, 2012

அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம்!



நைஜீரியா நாட்டில் அதிகளவு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் நாடுகளில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியா முதலிடம் பிடித்து இருக்கிறது. உலகளவில் பொருளாதார வளர்ச்சியில் முதலிடம் வகிக்கும் நாடும் அமெரிக்கா. இந்நாடு நைஜீரியாவிலும் தனது வர்த்தகத்தை மேற்கொண்டுள்ளது. கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை நைஜீரியாவின் மிகப் பெரிய ஏற்றுமதி சந்தையாக அமெரிக்காவே இருந்து வந்தது. இந்நிலையில் இப்போது அந்த இடத்தை இந்தியா பிடித்து இருக்கிறது. 2012ம் ஆண்டின் முதல்காலாண்டில் இந்தியா-நைஜீரியா வர்த்தகத்தின்(ஏற்றுமதி + இறக்குமதி) மொத்த மதிப்பு 5.15 பில்லியன் டாலராக இருக்கிறது. முதல்காலாண்டில் நைஜீரியா சுமார் 30 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இதில் இந்தியாவிற்கான ஏற்றுமதி சுமார் 4.2 பில்லியன் டாலராகும். அமெரிக்காவிற்கான ஏற்றுமதி 3.7 பில்லியன் டாலராகும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...