Sep 9, 2012

ஹோண்டா சிட்டி காரில் புது வேரியன்ட்



கார்கள் விற்பனையில், ஹோண்டா சிட்டிகாருக்கு தனி இடம் உண்டு. இந்த கார் ஏற்கனவே, ஏழுவேரியன்ட்களில் கிடைக்கிறது. தற்போது, எஸ்- ஏடிஎன்ற புது வேரியன்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.குறிப்பாக, 5 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் வசதியுடன் இந்த புதிய கார் வெளிவந்துள்ளது. இந்த காரின் விலை ரூ.9.09 லட்சம் (எக்ஸ்ஷோரூம்). ஏற்கனவே விற்பனையில்உள்ள மேனுவல் கியர்பாக்ஸ் வசதி கொண்ட ஹோண்டாசிட்டி காரை விட, இந்த புதியகாரின் விலை ரூ.70,000 அதிகம். இதற்கு முன்,ஹோண்டா சிட்டி காரில்,ஆட்டோ மேடிக் கியர் பாக்ஸ்
வசதியுடன், வி- ஏடி மாடல்கார் மட்டுமே விற்பனையில் இருந்தது. தற்போது எஸ் -ஏடி என்ற புதிய வேரியன்ட் கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரில், 1.5லிட்டர் ஐ-விடிஇடி பெட்ரோல் இன்ஜின் பொருத்தபட்டுள்ளது. இந்த காரி எடை, 1,150 கிலோ. மேனுவல் கியர்பாக்ஸ் வசதி கொண்ட சிட்டி காரை எடை, 50 கிலோ அதிகம். இந்த கார், ஒலிட்டருக்கு, 15.6 கி.மீமைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுள்ளது. சொகுசு கார்கள் வரிசையில் ஆட்டோமேடிகியர் பாக்ஸ் வசதியுடன் ஏற்னவே, மாருதி சுசூகியிஎஸ் எக்ஸ் 4, வோக்வாகன் வென்டோ, போர்டு ஃபியஸ்டஸ்கோடாவின் ரேபி மற்றும் ஹுண்டா நிறுவனத்தின் வெர்னா ப்ளூயிடிக் ஆகிய கார்கவிற்பனையில் உள்ளன. இதில் வெர்னா கார் மட்டும் டீசலில் இயங்கும் திறன் கொண்டது. மற்ற கார்கள் பெட்ரோலில் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...