Nov 3, 2012

தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள் - இறுதிக்கட்டப் பிரசாரத்தில் ஒபாமா,ரோம்னி!

தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள் - இறுதிக்கட்டப் பிரசாரத்தில் ஒபாமா,ரோம்னி!
[Saturday, 2012-11-03
News Service
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற 6-ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் அதிபர் ஒபாமாவும், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி வேட்பாளர் மிட்ரோம்னியும் நேற்று இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதிபர் ஒபாமா ஒகியோவிலும், மிட்ரோம்னி விஸ்பான்சின் நகரிலும் பிரசாரம் மேற்கொண்டு மக்களிடம் ஆதரவு திரட்டினார்.
  
அப்போது, ஒபாமா தனது ஆட்சி காலத்தில் நிகழ்த்திய சாதனைகளை
பட்டியலிட்டார் மோசமான நிலையில் இருந்த அமெரிக்க பொருளாதாரம் சீரமைக்கப்பட்டுள்ளது. பல வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஈராக் போர் முடிவுக்கு வந்து ராணுவ வீரர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். அமெரிக்காவையும், உலக நாடுகளையும் மிரட்டிய தீவிரவாதி பின்லேடன் கொல்லப்பட்டான் என தெரிவித்தார். மேலும் குறைந்த செலவில் கல்வி வழங்குதல், வரி மாற்றம் செய்தல், ஏழை எளிய, மக்கள் மற்றும் மூத்த குடிமகன்கள், மாற்று திறனாளிகளின் நலன் பாதுகாக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
அதே வேளையில் மிட் ரோம்னி தனது பிரசாரத்தை வேறு விதமாக தொடங்கினார். அப்போது தனது 5 அம்ச திட்டத்தின் மூலம் 1 கோடியே 20 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என உறுதி அளித்தார். மாகாணங்களுக்கு அதிக அதிகாரம் தனியார் மூலம் கல்வி வளர்ச்சி, உள்நாட்டு வர்த்தகம் மேம்பாடு, அதே நேரத்தில் அமெரிக்க தொழிலாளர்களின் பாதுகாப்பு மேம்பாடு, வர்த்தக வரி விதிப்பு ஒழுங்கு படுத்துதல் போன்றவை செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இரு வேட்பாளர்களும் தங்களின் தொலை நோக்கு கொள்கை மற்றும் திட்டங்களை விரிவாக எடுத்துரைத்து வாக்காளர்களை கவர்ந்தனர்.
தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் சி.என்.என். மற்றும் ஓ.ஆர்.சி. இண்டர் நேஷனல் சர்வே நிறுவனமும் இணைந்து வெற்றி வாய்ப்பு குறித்து ஒகியோவில் பொது மக்களிடம் கருத்து கணிப்பு நடத்தியது. அதில் மிட்ரோம்னியை விட ஒபாமா 3 புள்ளிகள் முன்னிலையில் உள்ளார். ஒபாமாவுக்கு 50 சதவீத மும், மிட்ரோம்னிக்கு 47 சதவீதமும் வாக்கு கிடைத்துள்ளது. எனவே, இருவருக்கும் இடையே வெள்ளை மாளிகையை பிடிக்க போவது யார்? என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...