Nov 3, 2012

அமெரிக்க அதிபர் தெரிவு செய்யப்படுவது எப்படி? - வித்தியாசமான நடக்கும் தேர்தல்!

அமெரிக்க அதிபர் தெரிவு செய்யப்படுவது எப்படி? - வித்தியாசமான நடக்கும் தேர்தல்!
[Saturday, 2012-11-03
News Service உலக கவனத்தை ஈர்த்துள்ள அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 6 ம் தேதி நடக்கவுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் உச்சக்கட்ட பிரச்சாரம் என்று ஊடகங்கள் சொல்லி வருகின்றன. ஆனால் உண்மையில் இந்த தேர்தல் என்ற ஜனநாயக நடைமுறை, இந்தியா அல்லது இலங்கை போன்ற, பின் காலனிய ஜனநாயக சமூகங்களைப் போலல்லாமல், சற்று வித்தியாசமாகவே நடக்கிறது.
  
அமெரிக்க அதிபர் தேர்தல், பலரும் நினைப்பதைப் போல நேரடியான வாக்களிப்பு மட்டும் அல்ல. போட்டியிடும் வேட்பாளர், நாட்டின் ஒட்டு மொத்த பதிவான வாக்குகளில் பெரும்பான்மை வாக்குகளை வாங்கினால் மட்டும் போதாது. அவர் , மாநிலங்களில் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் " தேர்வு செய்வோர் அவை" யில் பெரும்பான்மை வாக்குகளைப்பெற வேண்டும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் அதன்
வாக்காளர் எண்ணிக்கையைப் பொறுத்து இந்த தேர்வு செய்வோர் அவை உறுப்பினர்கள் ஒதுக்கப்படுகிறார்கள்.
உதாரணமாக மிக அதிக மக்கள் தொகையைக் கொண்ட கலிபோர்னியா மாநிலத்துக்கு 55 தேர்வு செய்வோர் அவை உறுப்பினர்கள் உண்டு. அதே போல மிகச் சிறிய மாநிலமான ஐயோவா மாநிலத்துக்கு 6 உறுப்பினர்கள். மொத்தம் இந்த தேர்வு செய்வோர் அவையில் 538 உறுப்பினர்கள் இருப்பதால் , அதிபர் தேர்தலில் வெல்ல வேண்டுமென்றால், இந்த அவையில் 270 வாக்குகளை பெறவேண்டும்.
இதில்சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த மாநிலங்களில் பெரும்பாலானவை, மாநில வாக்குகளில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவருக்கு, இந்த மாநிலத்தின் எல்லா அவை உறுப்பினர் இடங்களையும் தந்துவிடுகின்றன. ஒரு சில மாநிலங்களில் மட்டுமே விகிதாச்சார நடைமுறை இருக்கிறது.எனவே, நாட்டில் பதிவான வாக்குகளில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று, அதே சமயத்தில் சில மாநிலங்களில் தோற்றதன் மூலம், இந்த தேர்வு செய்வோர் அவை வாக்குகளில் தேவைப்படும் 270 வாக்குகளைப்பெற முடியாமல் போனால், வெற்றி வாய்ப்பை இழக்க நேரிடுகிறது.
கடந்த 2000ம் ஆண்டு நடந்த தேர்தலில், ஜார்ஜ் புஷ்ஷுக்கு எதிராக போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அல் கோர், இது போலத்தான், தேசிய அளவில் மக்கள் நேரடியாகப்போட்ட வாக்குகளில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றாலும், மாநிலத் தேர்வு செய்வோர் அவை வாக்குகளைப் பெறும் போட்டியில் புளோரிடா மாநிலத்தை சர்ச்சைக்குரிய விதத்தில் புஷ்ஷிடம் இழந்ததன் மூலம், அதிபர் தேர்தலில் தோற்றார் என்பது சமீபத்திய வரலாறு.
இன்னொரு விஷயம், இது நாட்டின் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் என்றாலும், தேர்தலை நடத்தும் பொறுப்பு மாநிலங்களிடமே இருக்கின்றது. எனவே, தேர்தலில் தங்களுக்கு பெரும்பான்மை ஆதரவு இருக்கும் மாநிலங்களில் பொதுவாக இரு பிரதான கட்சிகளும் குறி வைப்பதில்லை. உதாரணமாக, ஜனநாயகக் கட்சியின் கோட்டைகள் என்று வரலாற்று ரீதியாகவே கருதப்படும் கலிபோர்னியா, நியுயார்க் போன்ற மாநிலங்களிலோ, அல்லது குடியரசுக் கட்சி பலமாக இருக்கும் டெக்ஸாஸ் போன்ற மாநிலங்களிலோ இரு கட்சிகளின் பிரச்சாரங்களைப் பெரிதும் காண முடியாது.
ஸ்விங் ஸ்டேட்ஸ் அதாவது, வாக்காளர்கள் வரலாற்று ரீதியாக மாறி மாறி வாக்களித்து வரும் சுமார் 11 மாநிலங்கள் இந்தப் பட்டியலில் இருக்கின்றன. ஒஹையோ, புளோரிடா, கொலராடோ விஸ்கான்சின், மிச்சிகன், போன்ற இந்த மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் சுமார் 96 தெரிவு செய்வோர் அவைக்கான உறுப்பினர்களைப் பெறத்தான் கடுமையாக இரு வேட்பாளர்களும் பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறார்கள்.
இந்த மாநிலங்களில் நேரடிப் பிரச்சாரத்தைத் தவிர, தொலைகாட்சி மூலம் கட்சிகளே நேரடியாகச் செய்யும் விளம்பரங்கள் மற்றும், வேட்பாளர்களின் ஆதரவு குழுக்கள் எல்லாம் சேர்ந்து தொலைக்காட்சி சேனல்களில் கடும் பிரச்சாரத்தை செய்கின்றன.இது தவிர, சூப்பர் பேக்ஸ் எனப்படும், அரசியல் நடவடிக்கைக் குழுக்கள்-இவை பெரு வணிக நிறுவனங்கள் - மற்றும் சித்தாந்த சார்புக் குழுக்கள் ஆகியவைகளால் செய்யப்படும் விளம்பரங்களும் தொலைக்காட்சிப் பிரச்சாரத்தை சூடு பறக்க வைக்கின்றன

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...