Nov 3, 2012

சீனாவின் அழைப்பை ஏற்று பீஜிங் பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்துகிறார் அப்துல் கலாம்


abdulkalam_3
பீஜிங் : முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் முதன் முறையாக சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கவுரவ பேராசிரியராக பணிபுரிந்த அவர், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாணவர்களிடம் கலந்துரையாடி வருகிறார்.பீஜிங் பல்கலைக்கழக தலைவர் ஜூ ஷான்லு
நேற்று இரவில் அப்துல் கலாமை சந்தித்து பேசினார். அப்போது அவர் பிரசித்தி பெற்ற பீஜிங் பல்கலைக்கழகத்தில் ஆண்டுக்கு ஒரு முறை பாடம் நடத்த வரும்படி, அப்துல் கலாமுக்கு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை அப்துல்கலாம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.பின்னர் நிருபர்களின் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர், ‘‘நான் ஒரு ஆசிரியர். அமெரிக்காவிலும் நான் பாடம் நடத்தி இருக்கிறேன். ஒரு பேராசிரியர் என்ற முறையில், இளைஞர்களை சந்தித்து அவர்களுடைய கல்வி அறிவு வளர்ச்சிக்கு எனது பங்களிப்பை செலுத்த விரும்புவதாக’’ தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...