Nov 3, 2012

வடக்கு டொரண்டோ மக்கள் காலை எழுந்தவுடன் கண்ட இன்ப அதிர்ச்சி :

வடக்கு டொரண்டோ மக்கள் காலை எழுந்தவுடன் கண்ட இன்ப அதிர்ச்சி :
[Saturday, 2012-11-03
News Service வடக்கு டொரண்டோ நகரில் நேற்றையதினம் காலை எழுந்தவுடன் ஒரு இன்ப அதிர்ச்சியை கண்டுள்ளனர். அவர்கள் வீட்டை விட்டு வெளியே சென்று பார்த்ததும், கடுமையான பனிப்பொழிவால், எதிரே நிற்பவர்கள் கூட கண்ணுக்கு தெரியாத நிலை ஏற்பட்டதைப் பார்த்து அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர்.
  
வடக்கு டொரண்டோவில் நேற்று காலை முதல் பனிப்பொழிவு வழக்கத்தைவிட மிக அதிகமாக இருப்பதாக கனடாவின் சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்த பனிப்பொழிவால், வாகன ஓட்டிகள் மிக கவனமாக தங்கள் வாகனத்தை இயக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
200 மீட்டருக்கும் குறைவாக உள்ள தூரத்தில் உள்ள பொருட்கள் மட்டுமே கண்ணுக்கு தெரியும்படி பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால், ஒண்டோரியோ, டொரண்டோ மக்கள் தங்கள் வாகனத்தை மிக குறைவான வேகத்தில் இயக்கி, தங்கள் இருப்பிடத்தை பாதுகாப்பாக அடையுமாறு சுற்றுச்சூழல் துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்த பனிப்பொழிவு Shelburne, northern Dufferin County, Innisfil, Owen Sound, Blue Mountains, Barrie, Collingwood போன்ற இடங்களிலும், அதன் சுற்றுப்புறத்திலும் கடுமையாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...