Nov 3, 2012

சாண்டியின் சண்டித்தனத்துக்கு ஐ.நாவும் தப்பவில்லை!

சாண்டியின் சண்டித்தனத்துக்கு ஐ.நாவும் தப்பவில்லை!
[Saturday, 2012-11-03
News Service அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை வளாகக் கட்டடங்கள் சாண்டி புயலால் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. நியூயார்க்கின் மன்ஹாட்டன் பகுதியில் அமைந்துள்ளது ஐ.நா. சபை வளாகம். சமீபத்தில் அமெரிக்காவை தாக்கிய சாண்டி புயலால், பல பகுதிகள் நீரில் மூழ்கின. பாலங்கள், கட்டடங்கள் சேதமடைந்தன.
  
புயலின் சீற்றத்துக்கு ஐ.நா. சபையின் கட்டடமும் தப்பவில்லை. கடந்த திங்கள்கிழமை முதல் மூடப்பட்டிருந்த ஐ.நா. கட்டடம், வியாழக்கிழமை திறக்கப்பட்டது. அலுவலகத்தைப் பார்வையிட்ட ஐ.நா. அதிகாரிகள், தகவல் தொடர்பு சாதனங்களும், கட்டமைப்பு வசதிகளும் கடுமையாக சேதமடைந்திருப்பதாக கண்டறிந்தனர்.
இது குறித்து ஐ.நா. அதிகாரி ஒருவர் கூறியதாவது, மின் சாதனப்
பொருள்கள் கடும் சேதமடைந்துள்ளன. பல அறைகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. தகவல் தொடர்பு அமைப்பும் பழுதடைந்துள்ளது. வளாகத்தில் உள்ள அச்சுக்கூடத்துக்குள் நீர் புகுந்துள்ளது. சாண்டி புயலால் ஐ.நா. வளாகத்துக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிட்டு வருகிறோம்'' என்றார்.
இதற்கிடையே புயலால் பாதிக்கப்பட்ட அமெரிக்க நகரங்களின் மேயர்களைத் தொடர்பு கொண்ட ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கீ-மூன், தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...